700 கோடி செலவில் இந்தியாவில் அமைய உள்ள உலகின் பெரிய மைதானம். 1,10,000 இருக்கைகள் – அகமதாபாத்

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது விழாக்கோலம் பூண்டது போல காட்சியளிக்கும் அந்த அளவிற்கு இந்திய மக்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாட்டினை பார்த்து ரசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணி தொடர்ந்து பல சாதனைகளை புரிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு மற்றொரு புகழ் சேர்க்கும் விதமாக இந்தியாவில் பெரிய மைதானம் அமைய உள்ளது.

ground 1

உலகின் மிகப்பெரிய மைதானம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் ஆகும் . மெல்போர்ன் மைதானத்தில் ஒரே போட்டியினை 1 இலட்சம் பேர் கண்டுகளிக்கும் அளவிற்கு இருக்கைகள் இருக்கும் இதுவே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இதுவரை உள்ளது. அதனை மிஞ்சும் விதமாக இந்தியாவில் அகமதாபாத் நகரில் உலகின் மிகப்பெரிய மைதுனம் அமைய உள்ளது.

இந்த மைதானத்தில் ஒரு போட்டியினை 1 இலட்சத்து பத்தாயிரம் (1,10,000) ரசிகர்கள் கண்டுகளிக்கும் அளவிற்கு இந்த மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் அகாடெமி மூலம் கட்டுமானம் தொடங்கி இப்போது கட்டுமானம் முடியும் தருவாயில் உள்ளது. இதுவரை 700 கோடிகள் செலவாகியுள்ளது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் வீரர்களின் அதிநவீன ஓய்வறை, உணவகம், நீச்சல் குளம், அதிநவீன (ஜிம்) உடற்பயிற்சி கூடம் என மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் மிரளும் அளவிற்கு பல்வேறு வசதிகளுடன் இந்த மைதானம் உருவாகியுள்ளது. இந்த மைதானத்தினை இந்த ஆண்டு திறந்து போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

Sports news Tamil : நான் கிரிக்கெட் விளையாடுவதை என் பெற்றோர்கள் விரும்பவில்லை – ராகுல்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்