Sports news Tamil : நான் கிரிக்கெட் விளையாடுவதை என் பெற்றோர்கள் விரும்பவில்லை – ராகுல்

team
- Advertisement -

இந்திய அணியின் டெஸ்ட் ஒப்பனரான கர்நாடகாவை சேர்ந்த வீரர் KL ராகுல் இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக ஆடிவருகிறார். தனது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலகட்டத்தில் சற்று தடுமாறிய ராகுல். சென்ற ஆண்டு நடந்த IPL போட்டிகளின்போது தனது திறமையினை நிரூபித்து இந்திய அணியின் நிரந்தர வீரராக மாறினார்.

rahul

தற்போது நடந்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து ராகுல் ஏமாற்றத்தினை அளித்து வருகிறார். பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி அவர் ரன்களை குவிக்கவில்லை. இருந்தாலும் அணியின் எதிர்காலம் கருதி அவருக்கு போதிய வாய்ப்பினை இந்திய அணியின் கேப்டன் கோலி தொடர்ந்து கொடுத்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் : நான் கிரிக்கெட் விளையாடுவது எனது பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் நான் ஒரு பொறியியல் பட்டதாரி எனவே எனது பெற்றோர்கள் என் அக்காவை போன்று நான் ஒரு பொறியியல் வல்லுனராக வரவே ஆசை பட்டனர். ஆனால் நான் கிரிக்கெட் தான் என்னுடைய வாழ்க்கை என்று கிரிக்கெட் விளையாட வந்துவிட்டேன்.

rahul

மேலும் நான் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டேன். அப்போது நிரந்தர வேலை என்பதால் எனது பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால், நான் அந்த வேலை வேண்டாமென்று கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபட்டேன். நான் இந்திய அணிக்காக முதல் போட்டியில் விளையாடும் போது கூட எனது பெற்றோர்கள் சந்தோஷப்படவில்லை. எனக்கு வேலை கிடைத்தபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தனர் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Latest Cricket news in Tamil : தெ.ஆ கேப்டன் டுப்ளிஸிஸ் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை – ஐ.சி.சி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -