- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎம பாதகம் நீக்கும் பரணி தீபம்

எம பாதகம் நீக்கும் பரணி தீபம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய செயலுக்கு ஏற்றார் போல் நாம் இறந்த பிறகு நமக்கு நன்மைகளும் தீமைகளும் எமலோகத்தில் வழங்கப்படும் என்று கூறி கேள்வி பட்டிருப்போம். நம்முடைய முன்னோர்களும் அப்படித்தான். எமலோகத்தில் நம்முடைய முன்னோர்கள் கஷ்டப்பட்டார்கள் என்றாலும் அதன் பாதிப்பு நமக்கும் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. முன்னோர்கள் செய்த பாவமும் நம்மை வந்து சேரும் என்று கூறுவார்கள் அல்லவா..

அதைப்போல தான் இப்படி முன்னோர்கள் செய்த பாவத்தின் விளைவாக அவர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் நீங்கவும் நாம் செய்த பாவங்களால் நமக்கு பிற்காலத்தில் வரக்கூடிய கஷ்டங்கள் விலகவும். அதுவும் குறிப்பாக எமலோகத்தில் எமதர்ம ராஜனால் வழங்கப்படக் கூடிய கஷ்டங்கள் விலகவும் ஏற்ற வேண்டிய தீபம் தான் பரணி தீபம். இந்த பரணி தீபத்தை எமதர்ம ராஜனே ஏற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார். அப்படிப்பட்ட பரணி தீபத்தை எந்த நேரத்தில் எப்படி ஏற்ற வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பரணி தீபம்

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பரணி நட்சத்திர நாள் அன்று இந்த தீபத்தை சிவபெருமானை நினைத்து ஏற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஐந்து தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த ஐந்து தீபங்களும் பஞ்சபூதங்களுக்கு அடிப்படையான தத்துவத்தை விளக்குகிறது. மேலும் சிவபெருமான் பஞ்சபூதங்களின் தலைவராக திகழ்கிறார் என்பதால்தான் அவருக்கு பஞ்சாட்சர மந்திரமும் வழங்கப்படுகிறது. அதனால் சிவபெருமானை நினைத்து பரணி நட்சத்திர நாள் அன்று மாலை நேரத்தில் ஆறு மணி அளவில் ஒரு தாம்பாள தட்டை எடுத்துக்கொண்டு அதில் வாசனை நிறைந்த மலர்களைப் பரப்பி அதற்கு மேல் ஐந்து அகல்விளக்குகளை வைக்க வேண்டும். இந்த அகல் விளக்குகள் புது அகல் விளக்குகளாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அகல் விளக்குகள் உள்புறம் பார்த்தவாறு வைத்து சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி முடித்த பிறகு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். பிறகு சிவாய நம ஓம் என்னும் சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இந்த முறையில் நாம் உச்சரிப்பதன் மூலமாக நம்முடைய முன்னோர்கள் எமலோகத்தில் எமதர்ம ராஜனார் ஏதாவது கஷ்டங்களுக்கு ஆளாகியிருந்தார்கள் என்றால் அந்த கஷ்டங்கள் நீங்கும். அதன் மூலம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். அதே போல் நாமும் இறந்த பிறகு எமலோகம் செல்லும் பொழுது நாம் செய்த பாவங்களுக்குரிய தண்டனையும் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நம்முடைய பாவங்களின் கர்ம வினைகளையும் தீர்க்கக்கூடிய இந்த அற்புதமான பரணி தீபத்தை அனைவரும் தங்களுடைய வீட்டில் சிவபெருமானை முழுமனதோடு நினைத்து ஏற்றி சிவபெருமானின் அருளையும் எமதர்மராஜனின் அருளையும் பரிபூரணமாக பெற வேண்டும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்