சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த பழம் பூரியை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சட்டென செய்துவிட முடியும்

banana1
- Advertisement -

காய்கறிகளை விரும்பி உண்ணாதவர் கூட பழ வகைகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஏனென்றால் பழங்கள் இனிப்புச் சுவையில் இருப்பதால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுகின்றனர். எனவே அனைவரது வீட்டிலும் நிச்சயம் ஏதேனும் ஒரு பழம் இருந்து கொண்டே இருக்கும். அதிலும் பலரது வீட்டிலும் வாழைப்பழங்கள் அதிகமாகவே இருக்கும். வாழைப் பழங்களை வாங்கி வைத்து சில நாட்களில் அவை வீணாகும் தருவாயில் வந்துவிடும். சில நேரங்களில் வாழைப்பழங்கள் வீட்டில் அதிகமாக இருந்தால் அவற்றை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான உணவு வகையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
நேந்திரம் பழம் – 4, மைதா மாவு 8 ஸ்பூன், அரிசி மாவு – 3 ஸ்பூன், சோள மாவு – ஒரு ஸ்பூன், சர்க்கரை – 10 ஸ்பூன், மஞ்சள் தூள் அரை ஸ்பூன், பேக்கிங் சோடா – அரை ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
நேந்திரம் பழம் அல்லது பச்சை வாழைப்பழத்திலும் இதனை செய்யலாம். அவ்வாறு இந்த வாழை பழத்தை இரண்டாக அறிந்து அவற்றை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது வாழைக்காய் பஜ்ஜி போடும் பதத்தில் இந்த வாழைப் பழங்களையும் அதே அளவில் நறுக்கி வைக்க வேண்டும்

பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் எட்டு ஸ்பூன் மைதா மாவு, 3 ஸ்பூன் அரிசி மாவு, 2 ஸ்பூன் சோள மாவு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனுடன் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து விட வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு சொட்டு பஜ்ஜி மாவை இதில் லேசாக விட்டு பார்க்க வேண்டும். பஜ்ஜி மாவு பொரிந்து மேலே எழும்பி வந்தால் எண்ணெய் நன்றாக காய்ந்து விட்டதென்று அர்த்தம்.

பிறகு வெட்டி வைத்துள்ள வாழைப்பழத் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் சேர்த்து பொரிக்க வேண்டும். இவ்வாறு அனைத்து வாழைப் பழங்களையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பழம் பூரி தயாராகிவிடும். இதனை சுடச்சுட வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி கொடுத்துப் பாருங்கள். நீங்கள் கொடுத்தது பத்தாது என்று உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மறுபடியும் வேண்டும் என்று கேட்டு கேட்டு உங்களைத் தொல்லை செய்து கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -