நாளை(23/2/2021) ஏகாதசி திதியில் இதைப் படித்தால் சகல நன்மைகளும், விஷ்ணுவின் அருளும் கிடைக்குமாம் தெரியுமா?

vishnu-perumal
- Advertisement -

மும்மூர்த்திகளில் ஒருவராக திகழும் மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு உரிய வகைகளில் ஏகாதசி விரதமும் ஒன்று. ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்குமாம். அந்த காலத்திலெல்லாம் மன்னர்கள் அஸ்வமேத யாகம் செய்து தம் மக்களையும், நாட்டையும், கருவூலத்தை பாதுகாத்துக் கொள்வார்கள். அத்தகைய மாபெரும் யாகம் செய்த பலன் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் எளிதாகவே கிடைக்கும். பொதுவாக மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனால் மாதம்தோறும் வரும் ஏகாதசி விரதத்தை எளிமையாக வீட்டிலேயே எப்படி கடைபிடிக்கலாம்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

perumal

மாதத்தில் இரண்டு முறை வளர்பிறையில் மற்றும் தேய்பிறையில் வரும் திதிகளில், ஏகாதசி திதியும் ஒன்று. இந்த ஏகாதசி திதி பிறந்த கதை தெரியுமா? முரன் என்ற அசுரன் தேவர்களையும், முனிவர்களையும் பெரும் பாடுபடுத்தி வந்தானாம். அந்த அசுரனை அடக்குவதற்கு அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள். அந்த அசுரன் முரனோடு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மகாவிஷ்ணு போர் புரிந்து களைப்படைந்து போய்விட்டாராம். சோர்வில் ஒரு குகையில் சென்று ஓய்வு எடுத்துக் கொண்டாராம்.

- Advertisement -

மகாவிஷ்ணு ஓய்வெடுக்கும் அத்தருணத்தில் அவரைக் கொல்வதற்கு ஆயத்தமானான் அசுரன். அந்நேரத்தில் மகாவிஷ்ணுவிடம் இருந்து வெளியான ஒரு சக்தி பிழம்பானது, தன் ஓங்கார சக்தியால் முரனை எரித்துக் கொன்று விட்டதாம். உறங்கிக் கொண்டிருந்த மகாவிஷ்ணு எழுந்து அந்த சக்திக்கு ஏகாதசி என்று நாமத்தால் போற்றினார். எனவே ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் சகல நன்மைகளையும் நான் வரமாக கொடுப்பேன் என்று கூறி தன்னுள்ளே ஏகாதசியை ஏற்றுக் கொண்டாராம்.

Sudarshana vishnu

ஸ்ரீமன் நாராயணனை விழிப்புடன் இருந்து ஏகாதசி காத்து அருள் புரிந்ததால் ஏகாதசி திதி அன்று கண் விழித்து விரதம் இருப்பவர்களுக்கு மகாவிஷ்ணுவின் அருளும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அன்றைய நாள் வீடு முழுவதும் சுத்தம் செய்து விட்டு பூஜை அறையில் பெருமாளுக்கு அலங்காரங்கள் செய்து, தூப தீப ஆராதனைகள் காண்பிக்க வேண்டும். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் பாலும், பழமும் அருந்தலாம்.

- Advertisement -

ஒவ்வொரு ஏகாதசி திதி அன்றும், இது போல் விரதமிருந்து பெருமாளுக்கு வழிபாடுகள் செய்து, கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து வர, வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கும். துளசி மாலை சாற்றி வழிபடுவது நோய் இல்லாத வாழ்வை கொடுக்கும். வீட்டில் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கத் தெரிந்தவர்கள் ஏகாதசி திதி அன்று படித்து வரலாம். சாதாரணமாகவே விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பது மோட்சத்தை கொடுக்கவல்லது. ஏகாதசி அன்று இதனைப் படிப்பவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாதாம். படிக்கத் தெரியாதவர்கள் இதனை ஒலி வடிவமாக வீட்டில் ஒலிக்க விடலாம்.

Perumal

இறைவனுக்கு பிடித்த நைவேத்தியங்கள் படைத்து மாலை வரை உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து, பூஜைகள் செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். கோவில்களில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து பெருமானை தரிசித்து, அங்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கலை தானம் செய்ய, வாழ்வில் இருக்கும் இன்னல்கள் நீங்கி, சகல சௌபாக்கியங்களும்,செல்வ வளங்களும் பெறலாம். அன்றைய நாளில் அன்னதானம் செய்வது வறுமையை போக்கி, செல்வத்தை அதிகரிக்க செய்யும்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் இருக்கக்கூடிய தீராத எதிர்மறை சக்திகளை இழுத்துக் கொண்டு வந்து வெளியே எரித்து, பஸ்பமாக்க கூடிய சக்தி இந்த சிறு முடிச்சுக்கு உள்ளது. முடிச்சுக்கு உள்ளே இருக்கும் 3 ரகசிய பொருள் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -