கண்ணுக்குத் தெரியாத, துர்தேவதைகளை எல்லாம், எட்டி ஓட வைக்கும், எட்டி மரக்குச்சி!

yetti-maram

நாம் வழிபடும் தெய்வங்களை அவ்வளவு சுலபமாக, ஒன்று, இரண்டு, என்று கணக்கிட்டு, எண்ணி விடமுடியாது. இதே போல்தான், கெட்ட சக்திகளையும் நம்மால் கணக்கில் அடக்கிவிட முடியாது. கண்ணுக்குத்தெரியாத தீவினைகள், கெட்ட சக்திகள், கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியங்கள், ஏராளம். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் எல்லாம், இன்றைக்கும், பல பேர் பல விதங்களில் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னால் கட்டாயம் அது பொய்யாகாது. உங்களுக்கும் கண்ணுக்குத் தெரியாத ஏதாவது ஒரு கெட்ட சக்தியின் மூலம் பாதிப்பு இருப்பதாக, சிறிய சந்தேகம் வந்தால் கூட, உடனடியாக அந்த பிரச்சனை என்னவென்று அலசி ஆராய்ந்து பார்த்து தீர்வு கொள்வது மிகவும் நல்லது.

kan-thirusti

எந்த கண்ணுக்குத் தெரியாத துர்தேவதைகளின் அட்டகாசமாக இருந்தாலும், அந்த குடும்பத்தையே பாதித்துவிடும் என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட கண்ணுக்குத்தெரியாத பாதிப்புகள் உங்கள் வீட்டில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதை நீக்க, என்ன செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, உங்கள் வீட்டில் கன்னி மூலை திறந்த நிலையில் இருக்கின்றதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். கன்னிமூலை எப்போதுமே அடைத்து தான் வைத்திருக்க வேண்டும். கண்ணின் மூலையானது திறந்த நிலையில், இருக்கும்பட்சத்தில், துர்தேவதைகள் கட்டாயம் வீட்டிற்குள் வந்து வாசம் செய்யும். அப்போது வீட்டில் கண்ணுக்குத்தெரியாத பிரச்சனைகளும், தலைவிரித்தாடும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவருடைய வீட்டின் தென்மேற்கு மூலையை தான் கன்னி மூலை என்று சொல்லுவார்கள்.

yetti-maram

உங்களது வீட்டில் கண்ணுக்குத்தெரியாத துர்தேவதைகள் இருப்பதாக நீங்கள் நினைத்தாலும் சரி, அல்லது இனிவரும் காலங்களில் கெட்ட சக்திகள் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க வேண்டும் என்றாலும் சரி. எட்டி மரக் குச்சிகளை உங்கள் வீட்டில் வைப்பது மிகவும் நல்லது. பொதுவாகவே எட்டி மரம் காளிக்கு உரிய மரமாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் இன்றைய சூழ்நிலையில் எட்டி மர குச்சிகள், எட்டி மரப் பட்டைகள், எட்டி மர வேர் இவைகள் அனைத்தும், அவ்வளவு சுலபமாக கடைகளில் கிடைப்பதில்லை. உங்களால் முடிந்தால் நாட்டு மருந்து கடைகளில் எட்டி மர குச்சிகள், அல்லது எட்டு மரப் பட்டைகளை, சொல்லி வைத்து வாங்குவது மிகவும் நல்லது. அப்படி இல்லை என்றால் எட்டிமரம் கொட்டைகளை வாங்கி கொள்ளுங்கள். எட்டி மரக் கொட்டைகளாலானது சுலபமாக கிடைக்கிறது. ஆனால் எட்டி மரக் கொட்டை என்பது விஷம் நிறைந்த ஒன்று.

yetti-kai

உங்களுக்கு எட்டி மரத்தில் இருந்து எந்த பொருள் கிடைத்தாலும், அது நல்லது தான். அந்த பொருளை வாங்கி, ஒரு மஞ்சள் நிற துணியில் முடிந்து, உங்கள் வீட்டில் கண்ணுக்கு தெரியாத ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். எட்டிப் மரத்தில் இருக்கும் எந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தாலும், வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி கட்டாயம் வெளியேறிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டிற்குள், கண்ணுக்குத்தெரியாத எந்த கெட்ட சக்தியும் கட்டாயம் உள்ளே நுழைய முடியாது.

எட்டி மர கொட்டைகளை நீங்கள் உங்கள் வீட்டில் வைப்பதாக இருந்தால், கட்டாயம் குழந்தைகளுக்கு எட்டாத படிதான் வைக்க வேண்டும். அது விஷத்தன்மை உடையது என்பதை மறந்துவிடாதீர்கள். விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும், எட்டிமரததினுடைய சக்தி அதிலும் நிரம்பி இருக்கிறது. உங்களுக்கு எட்டிமர கொட்டை, எப்படி மரப்பட்டை, எட்டி மர குச்சி, எட்டி மர வேர், இதில் எது கிடைத்தாலும் மஞ்சள் நிற துணியில் முடிந்து, கண்ணுக்குத் தெரியாத இடத்தில் வைப்பது வீட்டிற்கு மிகவும் நல்லது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சமயலறையில் இதை செய்தால் பிசுபிசுப்பும் இருக்காது பூச்சிகளும் இருக்காது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have yeti maram ragasiyam. yeti maram tamil. yeti maram payangal