நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் இந்த 1 பொருளை போட்டு குளித்து வந்தாலே போதுமே! பிறகு தினம் தினம் பண மழையில் நனையலாம்.

kuliyal

எல்லோருக்கும் தினமும் பண மழையில் நனைய வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். எல்லோரும் தினம் தினம் பணம் மழையால் நனைய முடியுமா? என்று கேட்டால், நிச்சயம் அது முடியாது. தினம்தோறும் நம் கைகளுக்கு அதிகப்படியான காசு வரவேண்டும் என்று நினைப்பது மிக மிக தவறான ஒரு விஷயம். கஷ்டமே தெரியாமல் காசு நம் கைக்கு வந்து கொண்டே இருந்தால், காசின் அருமை யாருக்குமே புரியாமல் போய்விடும். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் தான் நம் கைகளில் நிலைத்து நிற்கும் என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும். ஆக பண மழையில் நனைய வேண்டும் என்ற ஆசையை விடுத்து, தேவைக்கு ஏற்ப அளவான பணத்தை நேர்மையான முறையில் சம்பாதிப்பது எப்படி என்பதை பற்றி சிந்தித்தாலே போதும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

money

நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான நிறைவான செல்வ வளத்தைப் பெற தினமும் நாம் குளிக்கின்ற தண்ணீரில் எந்த ஒரு பொருளை போட்டு குளிக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் நீங்கள் குளிக்கும் நேரம் என்பது காலை நேரமாக இருக்க வேண்டும். முடிந்தவரை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் காலைக் குளியலை முடித்து விடுங்கள். சிலர் இப்போதெல்லாம் காலையில் குளிப்பதே கிடையாது. மாலை நேரத்தில்தான் குளிக்கும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். இது மிக மிக தவறான ஒரு விஷயம்.

bathroom-shower

இந்தப் பரிகாரத்தை காலை நேரத்தில் தான் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் நீங்கள் குளிப்பதற்கு தயாராக இருக்கும் தண்ணீரில் ஒரே ஒரு எள்ளு போட்டு விடுங்கள். குளிக்கின்ற தண்ணீரில் அந்த ஒரு எள் 5 நிமிடங்கள் ஊறினாலே போதும். அதன் பின்பு அந்த தண்ணீரில் அப்படியே குளித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

எள்ளு என்று சொன்னதும் எல்லோருக்கும் சனிபகவானின் நினைப்பு தான் வரும். சனி பகவானுக்கு உரிய இந்த எள், விஷ்ணு பகவானுக்கும் சொந்தமானது என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. விஷ்ணு பகவானால் இந்த பூமிக்கு கிடைக்கப்பட்ட அரிய பொருள் தான் எள்ளு. இன்றைய அளவில் எள்ளு என்ற பெயரைச் சொன்னதுமே அது தற்பணம் கொடுப்பதற்காக மட்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறான கருத்து.

எள்ளில் இருந்து எடுக்கப்படுவது தான் நல்லெண்ணெய். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். அந்த நல்லெண்ணெயில் இருந்து ஏற்றக்கூடிய தீபத்திலிருந்து தான் நம் வீட்டிற்கு ஐஸ்வர்யம் கிடைக்கின்றது. இந்த எள்ளை ஒருவர் வீட்டில் நிறைவாக வைத்திருந்தாலே போதும். வீட்டில் லட்சுமி கடாட்சம்திற்கு எந்த ஒரு குறைபாடும் வராது.

ellu

உங்கள் வீட்டு பூஜை அறையிலோ அல்லது சமையல் அறையிலோ ஒரு கண்ணாடி பாத்திரத்தில் 4 ஸ்பூன் அளவு எள்ளு போட்டு திறந்தபடி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இதை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காக்கை குருவிகளுக்கு பழைய எள்ளை சாப்பிட எடுத்துப் போட்டுவிட்டு, மீண்டும் புதிய எள்ளை வைக்கலாம். இதன் மூலமும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும்.

bucket

சரி, இனி நீங்கள் குளிக்கும் தண்ணீரில் எள்ளு போட்டு குளிக்கும் வழக்கத்தை கொண்டு வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய பணப்பிரச்சனை தீரும். ஜாதகத்தால் வரக்கூடிய கஷ்டங்கள் குறையும். இதுபோல மேலும் நல்ல பலனை உங்களுக்கு இந்த எள் ஸ்னானம் கொடுத்துக்கொண்டே இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பார்க்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.