- Advertisement -

யோகமான வாழ்க்கை அமைய

- Advertisement -

சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களில் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுவது தான் பிரதோஷ நாள். அதிலும் சனிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சனி பிரதோஷ நாள் அன்று பலரும் பல விதங்களில் சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். அவ்வாறு வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் சரி வழிபாடு செய்யாதவர்களாக இருந்தாலும் சரி, இந்த ஒரு எளிமையான வில்வ வழிபாட்டை செய்யும் பொழுது யோகமான வாழ்க்கை அமையும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

யோகமான வாழ்க்கை அமைய

நமக்கு ஏற்படக்கூடிய ஒவ்வொரு விதமான கஷ்டங்களுக்கும் நம்முடைய கர்ம வினைகளே காரணமாக திகழ்கின்றன. அந்த கர்ம வினைகளை நீக்கும் அற்புதமான ஒரு வழிப்பாடாக தான் பிரதோஷ வழிபாடு திகழ்கிறது. பிரதோஷ நாளன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகளும் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்களும் விலகும். அதிலும் சனி மஹா பிரதோஷ நாளன்று வழிபாடு செய்யும்பொழுது பலவிதமான நன்மைகள் நமக்கு ஏற்படும் என்று கூறலாம். அப்படிப்பட்ட நாளில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டை பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை பிரதோஷ நேரம் ஆன மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் செய்யலாம். அந்த நேரத்தில் அல்லது அந்த நேரத்தில் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபடுபவர்களாக இருக்கும் பட்சத்தில் வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு வீட்டிற்கு வந்து செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு வில்வ இலை வேண்டும். ஒரே ஒரு வில்வ இலை இருந்தால் கூட போதும். கோவிலில் கொடுத்த வில்வ இலையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு சிறப்புகள் அதிகமாகவே இருக்கும். அப்படி இல்லை என்றாலும் பரவாயில்லை.

ஒரு வில்வ இலை என்பது மூன்று இலைகளைக் கொண்டது என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த மூன்று இலைகளிலும் சந்தனத்தைக் குழைத்து சிவ சிவ என்று எழுதிக் கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு தட்டில் வைத்து சிவபெருமானுக்கு முன்பாக வைத்து விடுங்கள். இதனுடன் ஏதாவது ஒரு நாணயத்தை வைக்க வேண்டும். பிறகு சிவபெருமானுடைய மந்திரம் எது தங்களுக்கு தெரியுமோ அதை கூறி விபூதியால் இந்த இலைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

மந்திரத்தை 108 முறை கூறி விபூதியால் அந்த இலைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி ஒரு மஞ்சள் நிற அல்லது வெள்ளை நிற துணியில் நாம் தட்டில் எடுத்து வைத்திருந்த வில்வ இலை, அர்ச்சனை செய்த விபூதி மற்றும் நாணயம் இவை அனைத்தையும் அந்த துணியில் வைத்து விட வேண்டும். பிறகு இதை மூட்டையாக கட்டி வீட்டு நிலை வாசலில் கட்டி விட வேண்டும். நிலை வாசலுக்கு கட்டிய பிறகும் இதற்கு சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.

தினமும் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் பொழுது இந்த மூட்டையை சிவபெருமானாக நினைத்து சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். 15 நாட்கள் கழித்து அடுத்து வரக்கூடிய பிரதோஷ நாளில் இதில் இருக்கக்கூடிய வில்வ இலைகளையும் விபூதியையும் கால்படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டுவிட்டு புதிதாக வில்வ இலைகளை வைத்து விபூதியால் அர்ச்சனை செய்து மூட்டையாக கட்டி வைத்துக் கொள்ளலாம். பழைய நாணயத்தை திரும்பவும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் பிரதோஷம் நாள் அன்று நாம் செய்யக்கூடிய இந்த வில்வ வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் என்றென்றும் சிவபெருமான் நமக்கு உறுதுணையாக இருந்து யோகமான வாழ்க்கையை அருள உதவும்.

இதையும் படிக்கலாமே:சொந்த வீட்டில் குடியேற

மிகவும் சக்தி வாய்ந்த இந்த வில்வ வழிபாட்டை முழுமனதோடு சிவபெருமானை நினைத்து பிரதோஷ நேரத்தில் செய்பவர்களுக்கு சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். யோகமான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்