மற்றவர்களிடமிருந்து இந்தப் பொருட்களை இரவலாகவோ, கடனாகவோ வாங்கக்கூடாது. விபரீத விளைவுகள் கூட ஏற்பட்டு விடலாம்.

cash-sadman

பொதுவாகவே இரவல் வாங்குவதும், கடன் வாங்குவதும் தவறு என்பது நம் முன்னோர்களின் கூற்று. நம்மிடம் ஒரு பொருள் இல்லை என்றாலும், வாங்க முடியவில்லை என்றாலும் அதை அடுத்தவரிடம் இருந்து கடனாகவும் வாங்கக்கூடாது. இரவிலாகவும் வாங்கக்கூடாது. நம்மிடம் எந்தப் பொருள் இல்லையோ, அதற்கான தேவையை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். நம் கையில் இருக்கின்ற பொருளை வைத்து வாழ கற்றுக் கொள்வதே சிறந்த வழி. இந்த காலகட்டத்தில் பணத்தை கடனாக வாங்காமல் வாழ்வது என்பது மிகவும் கடினமான விஷயமாகிவிட்டது. சிலர் கடனை வங்கிகளிலிருந்து பெற்று, அந்த கடனை வாழ்நாள் முழுதும் திருப்பி அடைப்பதிலேயே தன் வாழ்க்கையை ஓட்டி முடித்து விடுகிறார்கள். சிலர் அதிக வட்டிக்கு, தனி நபர்களிடம் கடனை வாங்கி கடைசி வரை வட்டி மட்டுமே கட்டும் சூழ்நிலைக்கு கூட தள்ளப்பட்டு விடுகிறார்கள். சிலரது கையால் வாங்கப்படும் கடனை சுலபமாக திருப்பி கொடுத்து விடுவோம். ஆனால் சிலரது கையால் வாங்க பட்ட கடனை எப்பாடு பட்டாவது அடைக்க வேண்டுமென்று நினைத்தாலும், முடியாமல் தவித்து வருவோம். இதற்கு கை ராசிதான் காரணமா? ஒன்றும் புரியவில்லை! புரியாத புதிர்தான். முடிந்தவரை அடுத்தவரிடம் இருந்து பணத்தை கடனாக பெறாமல் இருப்பது நமக்கு நல்லது. சரி பணம் தவிர மற்ற சில விஷயங்களைக் கூட கடன் வாங்க கூடாது என்று நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. அது என்ன என்பதை தெரிந்து கொண்டு முடிந்தவரை அதையும் பின்பற்றி விடலாமே!

handwriting

நம் எல்லோராலும் மற்றவர்களிடமிருந்து அடிக்கடி வாங்கும் இரவல் பொருள் என்றால் அது பேனா தான். எழுதுவதற்காக அவசர அவசரமாக அருகில் இருப்பவரிடம் இருந்து பேனாவை வாங்கி விடுவோம். கூடுமானவரை நினைவு இருந்தால் அதை திருப்பியும் தந்து விடுவோம். சிலர் அந்த பேனாவை திருப்பிக் கொடுக்காமல் தங்கள் பேக்கட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால் அடுத்தவர்களிடம் இருந்து பெற்ற பேனாவின் மூலம் நமக்கு அதிகம் வறுமை ஏற்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. சிலசமயம் அவமானத்தை சந்திக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டு விடுமாம். இதனால் நமக்குள் ஏற்படும் ஒரு தாழ்வு மனப்பான்மை நம் வாழ்க்கையை இருளில் மூழ்க வைக்கும் அளவிற்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும், என்பதனால் முடிந்தவரை பேனாவை யாரிடமிருந்தும் கடனாக வாங்காதீர்கள். கடனாகவும் கொடுக்காதீர்கள். வாங்கினால் உடனடியாக திருப்பி கொடுத்து விடுங்கள்.

நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும் கைக்குட்டையை பரிசாக அளித்தால் உறவு முடிந்து விடுமென்று. நட்பும் முடிந்துவிடும் என்று. இதை எந்த காரணத்திற்காக கூறினார்கள் என்பது புரியவில்லை. ஆனால் நம் கைக்குட்டையை கடனாகவும் யாருக்கும் கொடுக்கக்கூடாது. பரிசாகவும் யாருக்கும் வாங்கிக் கொடுக்கக் கூடாது. பரிசாக கொடுப்பவருக்கும் வறுமைதான். பரிசாக வாங்குபவருக்கும் வறுமைதான். என்று நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. ஒருவர் பயன்படுத்திய கைக்குட்டையை மற்றவர் பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்படும் என்பதற்காக கூறிய காரணம் இப்படி மாறி இருக்குமோ? எது எப்படியோ! தவறு என்று சொன்னால் அதை பின்பற்றாமல் இருப்பது நல்லது.

விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், வீட்டில் அக்கா தங்கைகள், அண்ணன் தம்பிகள், பொதுவாகவே தாங்கள் அணியும் ஆடைகளை மாற்றி மாற்றி அணிந்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் ஒருவர் அணிந்த ஆடையை மற்றவர் அணியக் கூடாது என்பதும் நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. இதற்கும் காரணம் கிருமித் தொற்றாக இருக்கும். ஆனால் இப்படி ஒருவருடைய ஆடையை ஒருவர் அணிந்து கொள்வதால் அவருடைய அதிர்ஷத்தோடு சேர்த்து துரதிஷ்டம் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதே உண்மை. முடிந்தவரை ஆடையை மாற்றி மாற்றி அணிந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

அடுத்ததாக கை கடிகாரம். இதையும் தயவுசெய்து யாரிடமிருந்தும் இரவலாக வாங்கி விடாதீர்கள். முடிந்தவரை கைக்கடிகாரத்தை பரிசாக கொடுப்பதையும், பரிசாக பெறுவதையும் கூற நிறுத்திக்கொள்வது நல்லது. கை கடிகாரத்தை பரிசாக கொடுப்பவர்கள் கூட வாழ்க்கையில் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

எது எப்படியாக இருந்தாலும், ஒரு விஷயம் நன்மை என்று கூறினால் அதை சோதித்துப் பார்க்கலாம். தீமை என்று சொல்லும்போது, அதை தவிர்ப்பது தான் நல்லது. முடிந்தவரை மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பின்பற்றி நடப்பதே நல்லது. நமக்கு இருக்கும் கஷ்டத்தில், செய்யக்கூடாது என்று சொன்னதை செய்து, மேலும் மேலும் கஷ்டத்தை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

இதையும் படிக்கலாமே
துர்க்கை அம்மனுக்கு ராகுகால விளக்கு ஏற்றும் பழக்கம் உடையவர்களாக நீங்கள்! இந்த வழிமுறையை பின்பற்றினால் தான் பலம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have kadan vanga. athirstam vara. athirstam vara tamil. athirstam in tamil