உடல் முழுவதும் தங்கம் போல தகதகன்னு மின்ன தினமும் இதில் ஒரு ஸ்பூன் மட்டும் போட்டு தேய்த்து குளித்தால் போதும். அழகே பார்த்து பொறாமைப்படும் பேரழகியாக மாறி விடுவீர்கள்.

bath powder lady
- Advertisement -

அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காத பெண்களே இருக்க முடியாது. அழகாக இருக்கும் பெண்கள் கூட இன்னும் அழகாக மாற என்னவெல்லாம் செய்யலாம் என்று தினம் தினம் எதையாவது செய்து கொண்டே தான் இருப்போம் இந்த விஷயத்தில் பெண்கள் ஆண்கள் எல்லாம் இப்போதெல்லாம் ஒரே மாதிரி தான் அழகு விஷயத்தில் அக்கறை செலுத்துகிறார்கள். இப்படி நினைப்பதும் ஒன்று தவறு கிடையாது. அப்படி அழகாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த குளியல் கொடியை தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும் முழு உடம்பும்மே தங்கம் போல ஜொலிக்கும் வாங்க அந்த குளியல் பொடி எப்படி தயாரிப்பது என்று இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குளியல் பொடி தயாரிக்கும் முறை
இந்த குளியல் பொடி தயாரிக்க முதலில் மூன்று பெரிய கேரட்டை எடுத்துக் கொள்ளுங்கள் அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாதீர்கள் ஒரு வேளை தேவைப்பட்டால் கொஞ்சமாக ஊற்றி நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பௌலில் மெல்லிய காட்டன் துணியில் அரைத்த கேரட்டை ஊற்றி வடிகட்டி சாறை மட்டும் தனியாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக அடுப்பில் ஒரு அடி அகலமான பேனை வைத்து நீங்கள் பிழிந்து எடுத்து இந்த கேரட் ஜூஸை ஊற்றி நன்றாக கொதித்து ஊற்றிய சாறு பாதியளவாக சுண்டும் வரை கொதிக்க விடுங்கள் அதன் பிறகு ஒரு கப் அரிசி மாவை இதில் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக கலக்க வேண்டும் இப்படி கலக்கும்போது கொஞ்சம் கட்டி கட்டிகள் ஆக தான் இருக்கும் அதை மிக்ஸியில் போட்டு ஒரு முறை அழைத்தால் கட்டிகள் இல்லாமல் உதிரி உதிரியாக கிடைத்து விடும்.

அரைத்து இந்த பவுடரை இரண்டு நாளாவது நல்ல வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு இதை ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து கொள்ளுங்கள் இந்த பவுடர் ஒரு வருடமானால் கூட கெட்டுப் போகாது நன்றாக இருக்கும் கொஞ்சம் நறுநிறப்பாக இருக்கும் ஒருவேளை உங்களுக்கு இன்னும் ஃபைன் பேஸ்ட்டாக வரும் படி இருக்க வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை மிக்ஸி ஜாரில் அரைத்த பிறகு ஸ்டோர் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இப்போது இந்த பவுடரை நாம் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம் குளிக்க செல்லும் முன் இதிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள் ஆண்கள் எனில் அப்படியே பயன்படுத்தலாம் பெண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கால் டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்துக் கொள்ளுங்கள் அடுத்து இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள் சேர்த்து நன்றாக குழைத்து கொள்ளுங்கள்.

தயிர் ஒற்றுக் கொள்ளாது என்று நினைப்பவர்கள் வெறும் தண்ணீரை கூட பயன்படுத்திக் கொள்ளலாம் இல்லையென்றால் கற்றாழை ஜெல் ரோஸ் வாட்டர் உருளைக்கிழங்கு ஜூஸ் தக்காளி சாறு என இப்படி எதை வேண்டுமானாலும் உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு கலந்து கொள்ளலாம். இந்த குளியல் பொடியை உடல் முழுவதுமே தேய்த்து பத்து நிமிடம் ஆவது நன்றாக ஸ்கிரப் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல் குளித்து விடுங்கள் இந்த கொடிய பயன்படுத்த ஆரம்பித்தவுடன் நீங்கள் சோப்பு பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: முடி கொட்டிய இடத்தில், 30 நாட்களில் புது முடி வளர்வதை பார்க்க உங்களுக்கு ஆசையா இருக்குதா? புது புது முடிகளை சீக்கிரம் வளர வைக்கும் சூப்பரான பவர்ஃபுல்லான ஹேர் பேக் இதோ!

இந்த முறையில் நீங்கள் ஒரே ஒருமுறை தேய்த்து குளிக்கும் போது அதிக அளவில் வித்தியாசம் தெரியும் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது அழகு என்றால் அப்படி ஒரு அழகு என்று அனைவரும் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு மாறிவிடுகிறது இந்த குளியல் பொடி குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதுபோல செய்து பலன் அடையலாம்

- Advertisement -