- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியாக வரவேற்க இந்த சிம்பிளான ஸ்வீட்டை செய்து, உங்கள் வருடத்தின் முதல் நாளை...

புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியாக வரவேற்க இந்த சிம்பிளான ஸ்வீட்டை செய்து, உங்கள் வருடத்தின் முதல் நாளை இனிமையான நாளாக மாற்றுங்கள்

- Advertisement -

எந்த விசேஷமானாலும், பண்டிகையானாலும் அனைவரது வீட்டிலும் வீவீட் கொடுப்பதும், இனிப்பு வகைகளை வீட்டிலேயே செய்வதும் அனைவரின் வழக்கமாகும். எந்தவித சந்தோஷமான தருணமாக இருந்தாலும், வெற்றியை கொண்டாடுவதாக இருந்தாலும் மகிழ்ச்சியை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் முதலில் நாம் செய்யும் விஷயம் இனிப்பு கொடுப்பது தான். இந்த வருட பிறப்பை கொண்டாடுவதற்கு ஏற்ற சுவையான இனிப்பை செய்து அனைவருக்கும் கொடுங்கள். இதனை செய்வதற்கு நேரமும் அவ்வளவாக செலவாகாது. இதனை செய்ய தேவையான பொருட்களும் மிகவும் எளிமையானவை தான். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதனை சட்டென செய்து விடலாம். வாருங்கள் இந்த ஸ்வீட்டை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி – அரை கப், தேங்காய் – அரை மூடி, வெல்லம் – 100 கிராம், முந்திரி – 15, திராட்சை – 10, ஏலக்காய்த் தூள் – அரை ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, பால் – ஒரு கப்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை கப் பச்சரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும் பின்னர் 100 கிராம் வெல்லத்தை பொடியாக உடைத்துக் கொண்டு அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பின் மீது வைத்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

வெல்லம் சிறிது நேரம் கொதித்து முழுவதுமாக கரைந்ததும் வடிகட்டி பயன்படுத்தி, அதில் எந்தவித தூசியும் இல்லாமல் வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை மூடி தேங்காயைத் துருவி சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றை ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து இந்த கலவையை நன்றாக கொதிக்க விடவேண்டும்.

இவை கொதித்து அரிசி மாவு நன்றாக வெந்ததும் இவற்றுடன் கரைத்து வைத்துள்ள வெல்லக் கரைசலை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு அடுப்பை அனைத்துவிட வேண்டும். ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பின் மீது வைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் 15 முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு இவற்றையும் அரிசி பாயசத்துடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் இறுதியாக ஒரு கப் பால் சேர்த்து கலந்து விட்டால் போதும் சுவையான அரிசி தேங்காய் பாயாசம் தயாராகிவிடும்.

சற்று முன்