நான் உலககோப்பையில் இடம்பெறாமல் போனாலும் பரவாயில்லை. பண்ட் நிச்சயம் ஆட வேண்டும் – யுவராஜ் சிங்

yuvi
- Advertisement -

இந்திய அணியின் பிரபல ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். இந்திய அணிய வென்ற மூன்று ஐ சி சி கோப்பைகளிலும் யுவராஜின் பங்கு அதிகம் என்று கூறலாம். குறிப்பாக இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் தொடர் நாயகன் விருதை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

yuvraj

கடந்த 2011ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக அவதிப்பட்ட யுவராஜ் வெளிநாடு சென்று சிகிச்சை செய்து மீண்டும் அணியில் இடம்பெற்றார். ஆனால் பழைய வேகம் அவரிடம் குறைந்தது. இதனால் மீண்டும் அவர் கடுமையாக முயற்சி செய்து மீண்டும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். பிறகு அணியில் இருந்து அவர் கழட்டிவிடப்பட்டார்.

- Advertisement -

இந்நிலையில் இப்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறாத யுவராஜ் அடுத்த நியூசிலாந்து தொடரில் இடம்பெறவில்லை. எனவே அவர் இந்த 2019 உலகக்கோப்பையில் இடம்பெறுவது கடினம் தான். இப்போது அவர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் : எனது உலகக்கோப்பை இடத்தினை ஏறக்குறைய இழந்துவிட்டேன் என்று நினைக்கிறன்.

rishabh

நான் அணியில் இடம்பெறவில்லை என்றாலும் இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன். அவரிடம் அபரிவிதமான திறமை உள்ளது. அதனை அவர் சமீபத்திய தொடர்களில் வெளிக்காட்டி வருகிறார் . இந்திய அணிக்காக அவர் நீண்ட காலம் கிரிக்கெட் ஆடவேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தி படைவீரரின் ஒழுக்கத்தை எனக்கு கற்றுக்கொடுத்தார் புஜாரா – அகர்வால்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -