ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தி படைவீரரின் ஒழுக்கத்தை எனக்கு கற்றுக்கொடுத்தார் புஜாரா – அகர்வால்

agarwal

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக மாயங்க் அகர்வால் தனது இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடினார். முதல் இன்னிங்சில் 77 ரன்களை அடித்து இந்திய அணி பெரிய ஸ்கோரை நல்ல அடித்தளம் அமைத்தார். இவரது இந்த தொடக்கம் அனைவரது கவனைத்தையும் ஈர்த்துள்ளது.

agarwal 2

விராட் கோலி தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வரலாற்றில் முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. தொடரை ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய மண்ணில் 30 வருடங்களுக்கு பிறகு பாலோ ஆன் செய்யவைத்த அணி என்ற பெருமையும் இந்திய அணி பெற்றது.

இந்நிலையில் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் புஜாரா குறித்து தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில், புஜாராவிடம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன. அவர் பேட்டிங் செய்யும் போது எதிர்முனையில் இருந்து பார்க்க அவ்வளவு அருமையாக இருந்தது. அவருடன் களத்தில் ஆடியது எனக்கு மிகவும் சிறப்பான தருணம் என்று கருதுகிறேன்.

புஜாராவிடம் இருந்து நிலையான பொறுமையான ஆட்டத்தை எவ்வாறு ஆடுவது என்று கற்றுக்கொண்டேன். ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தி நிதானமாக அடிக்க வேண்டிய நேரத்திற்கு காத்திருந்து ஆடினால் நம்மால் நீண்டநேரம் ஆடமுடியும் என்பதையும் அவர் மூலம் நான் அறிந்தேன் என்று தெரிவித்தார் .

இதையும் படிக்கலாமே :

இந்த நாள் என் வாழ்நாள் முழுவதும் என் நினைவில் இருக்கும் – தொடர்நாயகன் புஜாரா

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்