நான் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டது இவருக்குத்தான் முதலில் தெரியும் – யுவராஜ்

yuvi
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் 2000ஆம் ஆண்டு தனது 19 வயதில் கென்யா அணிக்காக அறிமுகம் ஆனார். அதன் பிறகு இவரது அதிரடி ஆட்டம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். இவர் பங்கேற்ற அனைத்து உலகக்கோப்பை தொடரிலும் இவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அவர் தொடர்நாயகன் விருதினை தட்டி சென்றார்.

yuvraj

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் நடுவே அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் இறந்தாலும் பரவாயில்லை உலகக்கோப்பையினை கையில் ஏந்தி இறக்க ஆசைப்பட்டார் யுவராஜ். இதனால் தொடர்ந்து அந்த தொடரை விளையாடி வெற்றியுடன் முடித்தார். இந்தியாவும் உலககோப்பையினை ஏந்தியது இந்திய அணி அப்போது யுவராஜ் புற்றுநோய் இருப்பதை அறிந்து துக்கத்தில் ஆழ்ந்தனர்.

- Advertisement -

இதுகுறித்து யுவராஜ் தெரிவித்ததாவது : எனக்கு 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் புற்றுநோய் இருப்பது பரிசோதனை மெல்லாம் தெரியவந்தது. அந்த சமயத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அந்த சமயத்தில் ஒருநாள் இரவு நான் தொடர்ந்து இரும்பி கொண்டே இருந்தேன். இதனை சச்சின் கவனித்து இருக்கிறார். பிறகு அடுத்த நாள் என்னிடம் வந்து உனக்கு என்ன ஆனது? ஏன் தொடர்ந்து இரும்பி கொண்டிருந்தாய் என்று கேட்டார்?

sachin-1

அதற்கு நான் அவரிடம் புற்றுநோய் உள்ளதை கூறினேன். அதை முதலில் நான் விளையாட்டுக்கு சொல்கிறேன் என்று பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை பிறகு, உண்மையை அறிந்த சச்சின் மிகவும் வருந்தினார். மேலும் என்னை தொடர்ந்து விளையாடாதே சிகிச்சை எடுத்துக்கொள்ளும் படியும் கூறினார். அந்த சமயத்தில் நான் தெளிவாக இருந்தேன். எந்த சிகிச்சை இருந்தாலும் அதனை உலகக்கோப்பை தொடரை முடித்து தான் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தேன் என்று யுவராஜ் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

சுயநினைவு இல்லாமல் இருந்தேன் – இந்திய அணியில் இடம்பித்த இளம் வீரர் கில்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -