சுயநினைவு இல்லாமல் இருந்தேன் – இந்திய அணியில் இடம்பித்த இளம் வீரர் கில்

gill

ராகுல் மற்றும் பாண்டியா இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக தமிழகத்தை சேர்ந்த விஜய் ஷங்கர் மற்றும் 19வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்ற வீரரான கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு ஆஸதிரேலியா சென்றனர்.

vijay

இந்நிலையில், இந்திய அணியில் தேர்வானது குறித்து கில் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது : இந்திய அணிக்கு நான் தேர்வானது எனக்கு முதலில் தெரியாது. நான் ஒரு நாள் இரவு நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தேன். அப்போது இரவு 1 மணி அளவில் எனக்கு ஒரு போன் கால் வந்தது.

அதை எடுத்ததும் பத்திரிகை நிருபர் ஒருவர் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்ததாக கூறினார். அதை கேட்டதும் 20 நொடிகள் நான் சுயநினைவு இல்லாமல் அதிர்ச்சியில் அப்படியே நின்றேன். பிறகு வாட்ஸ்ஆப் திறந்து பார்த்தால் எனக்கு பலர் மெசேஜ் செய்திருந்தனர். அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மேலும், அன்று இரவு முழுக்க நான் உறங்கவில்லை.

gill 1

நான் ஜூனியர் அணியில் சிறப்பாக செயல்பட்டதுபோல சீனியர் அணியிலும் சிறப்பாக செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி நாளை மெல்போர்ன் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் கில் அறிமுகம் ஆவாரா என்பது நாளை காலையில் தெரிந்துவிடும்.

இதையும் படிக்கலாமே :

என்னது பாண்டியா என்னுடைய காதலரா? – கொந்தளித்த ஹிந்தி நடிகை

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்