உலகக்கோப்பை தொடரில் ஆடவில்லை என்றாலும் ரோஹித் தலைமையிலான அணியில் ஆடி அவரின் சுமையை குறைப்பேன் – யுவராஜ் சிங்

Yuvraj

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரரான யுவராஜ் சிங் 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்ற தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தொடர் நாயகன் விருதினை பெற்றார். அந்த தொடர் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

yuvraj

இனிமேல் இந்திய தேசிய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பின்றி யுவராஜ் சிங் கட்டம் முடிந்துவிட்டது என்றே கூறலாம். இந்த வருட ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடிப்படை விலைக்கே எலாம் போனார்.

இந்நிலையில் யுவராஜ் அளித்த பேட்டியில் : உலகக்கோப்பை தொடரில் எனது இடம் முடிந்து விட்டது என்று தெரியும் ஆனால், நான் இடம்பிடித்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த வருடம் எனது சிறப்பான ஆட்டத்தை அளித்து ரோஹித் சர்மாவின் சுமையை நிச்சயம் குறைப்பேன். அதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன்.

Yuvraj m

எனது அதிரடி ஆட்டத்தினை இந்த வருடம் நிரூபித்து 20 ஓவர் போட்டிகளில் நான் எனது முக்கியத்துவத்தை வெளிக்காட்டுவேன். அதோடு இப்போதும் நான் முழுஉடற்தகுதியுடன் உள்ளேன். அதனால் இந்த வருடம் என்னை பழையபடி பார்க்கலாம் என்று யுவராஜ் சிங் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

இதுதான் எங்கள் முடிவு. ஹாமில்டன் மூன்றாவது டி20 போட்டிக்கான அணியில் மாற்றங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு – ரோஹித் திட்டவட்டம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்