இன்று வைகாசி மாதம் பௌர்ணமி. 10-6-2025 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து, இந்த அதிசக்தி வாய்ந்த பௌர்ணமி நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு, நம்முடைய கடன் சுமையையும் குறைக்கும். அதே சமயம் வருமானத்தையும் பல மடங்கு பெருக்கிக் கொடுக்கும். இன்று மாலை 6:30 மணிக்கு முழு நிலவு உதயமாகிவிடும். அந்த நிலவைப் பார்த்து செய்ய வேண்டிய எளிமையான பரிகாரம், சொல்ல வேண்டிய மந்திரம், இவைகளைப் பற்றி தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.
பௌர்ணமி வழிபாடு
இன்று மாலை 6 மணிக்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தையும் அம்பாளையும் மனமுருகப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பூஜை அறையில் “ஓம் சித்ராயை நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி விளக்கு ஏற்றி பௌர்ணமி நாளில் வழிபாடு செய்தால், குடும்பம் சுபிட்சம் அடையும். உங்கள் வீட்டில் கோடான கோடி நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை. சமயபுரத்து மாரியம்மனை குறிக்கும் மங்கள மந்திரம். இது முதல் விஷயம்.
அடுத்தபடியாக 6:30 மணிக்கு வானத்தில் பௌர்ணமி நிலவு உதயமாகும். அந்த சமயத்தில் வெட்டவெளியில் நின்று கொள்ளுங்கள். உங்களுடைய வலது உள்ளங்கைகளில், ஒரு ரூபாய் நோட்டு இருக்கட்டும். 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை எந்த நோட்டு உங்களிடத்தில் இருக்கிறதோ, அந்த ஒரே ஒரு நோட்டை உள்ளங்கைகளில் வைத்து, அந்த நோட்டுக்கு நடுவே ஒரு பச்சை கற்பூரத்தை வைத்து, பணவசியம் உண்டாக வேண்டும் என்று ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்து, பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 1008 முறை உச்சரித்து விட்டால் போதும். நீங்கள் தான் அடுத்த பணக்காரர். உங்கள் வீட்டில் நிச்சயம் பெட்டி பெட்டியாக பணம் சேர துவங்கும். இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
பண வசியம் மந்திரம்
ஏகம் தனம் ஸர்வம் ஸித்திக்கும்
உண்மையான நம்பிக்கையோடு, எனக்கு நிச்சயம் பணம் வரும் என்று சொல்லி, இந்த மந்திரத்தை சொல்லி, வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு, கையில் இருக்கும் ரூபாய் நோட்டையும் பச்சை கற்பூரத்தையும் கொண்டு போய் அப்படியே பீரோவில் வைத்து விடுங்கள். அந்த நிலவு ஒளியின் நேர்மறை ஆற்றலுடன், நீங்கள் மந்திரத்தை உச்சரித்தீர்கள் அல்லவா. அந்த மந்திரத்தில் இருக்கும் வசிய தன்மையும் அந்த பணத்தோடு சேர்ந்து இருக்கும். இந்த பணம், இன்னும் பல மடக்கு பணத்தை ஈர்த்துக் கொண்டு வந்து உங்கள் கையில் கொடுக்கும். இதுதான் இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் சூட்சமம்.
1008 முறை மந்திரம் உச்சரிப்பதில் கொஞ்சம் சிரமம் உண்டு. வீட்டு வேலைகள் இருக்கிறது என்றால் 108 முறையாவது குறைந்த பட்சம் இந்த மந்திரத்தை இன்று சொல்லுங்கள். இதே போல தினம் தினம் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் ஒரு 10 ரூபாயை கையில் வைத்துக் கொண்டு, இந்த பணவசிய மந்திரத்தை 27 முறை சொல்லி அந்த பத்து ரூபாய் நோட்டை ஒரு உண்டியலில் சேமித்துக் கொண்டு வாருங்கள். பிறகு உங்கள் வீட்டில் பணம் எப்படி குவியும் என்று பாருங்களேன்.
நீங்க சீக்கிரம் மிகப்பெரிய பணக்காரர்களாக மாறிவிடுவீர்கள். பரிகாரத்தை செய்து விட்டேன். நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன். பணம் என்னை தேடி வர வேண்டும் என்று சொன்னால் அதற்கு பரிகாரம் பொறுப்பாகாது. உங்களுடைய வேலைகள், கடமைகள் விடாம முயற்சி இவை எல்லாம் ஒத்துழைக்கும் போது இந்த பரிகாரத்தின் மூலம் 10 ரூபாய் சம்பாதிக்க வேண்டிய இடத்தில், பத்து ரூபாய் வருமானம் வரவேண்டிய இடத்தில், 100 ரூபாய் நிச்சயம் உங்களுக்கு வருமானம் பெருகும்.
இதையும் படிக்கலாமே: திருமண வரம் தரும் விநாயகர்
இதுதான் பரிகாரத்திற்கு பின்னால் இருக்கும் மகிமை. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை பின்பற்றி பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.