முகத்திற்கு என்னதான் பவுடர் போட்டாலும் 10 நிமிடத்தில் எண்ணெய் வழிகிறதா? நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய 10 ஆய்லி ஸ்கின் டிப்ஸ் இதோ!

oily-skin-tips-10
- Advertisement -

வறண்ட சருமம் கொண்டவர்கள் கூட தங்களுடைய முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க எளிமையாக சில விஷயங்களை கடைப்பிடிக்கலாம் ஆனால் எண்ணெய் பிசுக்குள்ள சருமத்தை பாதுகாப்பது தான் ரொம்பவே சிரமமான விஷயமாக இருக்கும். முகத்திற்கு பவுடர் போட்டு 10 நிமிடம் கூட ஆகியிருக்காது, அதற்குள் எண்ணெய் முகத்தில் வழிய துவங்கி விடும். இதனால் போட்ட மேக்கப் வேஸ்டாக போய்விடும்.

வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது பிரஷ் ஆகத்தான் கிளம்புவோம், ஆனால் சிறிது நேரம் சென்றதும் அல்லது செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும் முகத்தை பார்த்தால் அவ்வளவு தான், முகம் முழுக்க எண்ணெயாக வழிந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஆண், பெண் யாராயினும் தெரிந்து கொள்ள வேண்டும் முக்கியமான எளிய ஆயில் ஸ்கின் டிப்ஸ் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

குறிப்பு 1:
சமையல் செய்யும் பொழுது தக்காளியில் இருந்து கிடைக்கக்கூடிய சாறு ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சம அளவிற்கு சுத்தமான தேன் சேர்ந்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை முகம் முழுவதும் தடவி உலர விட்டு கழுவினால் முகம் பட்டு போல மிருதுவாக மாறும், எண்ணெய் வழிவது குறையும்.

குறிப்பு 2:
வீட்டில் வேப்பிலை மரம் இருந்தால் சிறிதளவு வேப்பிலையை உருவி எடுத்துக் கொண்டு கழுவி கொள்ளுங்கள். பின்னர் இதிலிருந்து கிடைக்கக்கூடிய சாற்றை எடுத்து முகம் முழுவதும் தடவி உலர விட்டு கழுவுங்கள். இதனால் முகத்தில் இருக்கக்கூடிய நுண்கிருமிகள் ஒழிந்து எண்ணெய் வழிவது கணிசமாக குறையும். இதனால் முகப்பருக்களும் தோன்றாது.

- Advertisement -

குறிப்பு 3:
அடிக்கடி நீங்கள் ஐஸ் கட்டி ஒத்தடம் முகத்தில் கொடுத்து வந்தால், மசாஜ் போல வட்டமாக தேய்த்து விட்டால், முகத்தில் எண்ணெய் வழிவது பெருமளவு கட்டுக்குள் வந்து விடும்.

குறிப்பு 4:
எண்ணெய் பசை உள்ள சருமம் அழுக்குகள் அதிகம் கொண்டிருக்கும். வெளியில் தூசு, காற்று மாசு போன்றவை சுலபமாக முகத்தில் ஒட்டிக்கொண்டு விடும். இதனை விரட்டி அடிக்க வெள்ளரிக்காயை பேஸ்ட் போல அரைத்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். பின்னர் உலர விட்டு கழுவினால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 5:
எண்ணெய் பசையுள்ள சருமத்தில் நுண் கிருமிகள் அதிகம், துவாரங்களில் நுழையக்கூடிய அபாயம் உண்டு. இதனால் எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து முகம் முழுவதும் தடவி, உலர விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரினால் கழுவினால் எண்ணெய் பிசுக்குகள் ஒழியும்.

குறிப்பு 6:
சுத்தமான ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீரை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை அவ்வப்பொழுது முகத்தில் தடவி உலர விட்டு விடுங்கள். பிறகு நீங்கள் கழுவ கூட வேண்டாம், அப்படியே முகத்தில் பவுடர் போட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய் வழிவது கட்டுப்படும்.

குறிப்பு 7:
முகத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கக்கூடிய தன்மை புதினா இலைக்கு உண்டு. புதினா இலைகளை பறித்து அதிலிருந்து வரக்கூடிய சாற்றை எடுத்து முகம் முழுவதும் தடவி உலர விட்டு கழுவி வந்தால் எண்ணெய் பிசுக்கு போன இடமே தெரியாமல் போய்விடும்.

குறிப்பு 8:
எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமத்தினர் இரவு தூங்கும் பொழுது கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய ஜெல்லை தடவி உலர விட்டு பின்னர் காலையில் கழுவினால் செம ரிசல்ட் தெரியும்.

குறிப்பு 9:
ஓட்ஸை பவுடர் போல செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகம் முழுவதும் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் முகப்பருக்கள் தோன்றாது, எண்ணெய் வழிவது நின்றுவிடும்.

இதையும் படிக்கலாமே:
டல்லான ஸ்கின்னை டால் அடிக்க வைக்க டக்குனு 15 நிமிடத்தில் வீட்டிலிருந்தபடியே ப்ளீச் செய்வது எப்படி? வரப்போற வெயில் காலத்துக்கு இந்த டிப்ஸ் எல்லாருக்கும் தேவைதான்.

குறிப்பு 10:
எலுமிச்சையில் இருக்கக்கூடிய சிட்ரிக் ஆசிட் முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்கக்கூடிய தன்மை கொண்டுள்ளது. ஒரு ஸ்பூன் எலுமிச்சையுடன், முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி உலர விட்டு கழுவினால், முகத்தில் கொஞ்சம் கூட எண்ணெய் வழியாது.

- Advertisement -