வசதி மிக்கவர்கள் தங்களுடைய முகத்தை என்றும் பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வாரத்திற்கு ஒரு முறையாவது பியூட்டி பார்லர் சென்று பல ட்ரீட்மென்ட்களை மேற்கொண்டு வருவார்கள். இது வசதியானவர்களுக்கு பொருந்தும். நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கோ ஏழை எளியவர்களுக்கோ இதுபோல செய்ய இயலாது. அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய சமையல் அறையில் இருக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி பியூட்டி பார்லருக்கு இணையான முகப்பொலிவை பெற முடியும். அந்த ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
ஒரு முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்றால் அந்த முகத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருக்கக் கூடாது. மேலும் கருமைகளோ, இறந்து செல்களோ இருக்க கூடாது. மேலும் கரும்புள்ளிகளோ, பருக்களோ பருக்களால் ஏற்பட்ட வடுக்கலோ இல்லாமல் இருந்தால்தான் அந்த முகம் மிகவும் அழகாக தெரியும். அப்படிப்பட்ட அழகான முகத்தை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு பேஸ் பேக்கை பற்றி பார்ப்போம்.
இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்வதற்கு முதலில் நமக்கு ஒரு பழுத்த தக்காளி வேண்டும். இந்த தக்காளியை கழுவி அதை நான்காக நறுக்கி தக்காளிக்குள் இருக்கும் கனமான பகுதியில் மட்டும் நீக்கிவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த தக்காளி விழுதை அகலமான ஜல்லடியில் போட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது இதனுடன் காய்ச்சாத ஒரு கிளாஸ் பசும்பாலை ஊற்ற வேண்டும். பசும்பால் கிடைக்காத பட்சத்தில் பாக்கெட் பாலையும் உபயோகப்படுத்தலாம். ஆனால் காய்ச்சாத பாலை தான் உபயோகப்படுத்த வேண்டும். இப்பொழுது இதனுடன் மூன்று டேபிள்ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை நம்முடைய ஃப்ரீசரில் ஐஸ்ட்ரே இருக்கும் அல்லவா? அதில் ஊற்றி ஐஸ்கியூப்பாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு மாற்றி வைத்துக் கொண்டால் அது விரைவிலேயே வீணாகாது நமக்கு எப்பொழுதெல்லாம் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு ஐஸ்க்யூபை எடுத்து வைத்து நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த ஃபேஸ் பேக்கை இரவு படுக்கச் செல்வதற்கு முன்புதான் பயன்படுத்த வேண்டும். முதல் முதலில் உபயோகப்படுத்துவதற்கு முன்பாக சிறிது சுடுதண்ணீரில் முகத்தை ஆவி பிடித்து சுத்தம் செய்துவிட்டு பிறகு இந்த பேஸ்பேக்கை பயன்படுத்தினால் நல்ல பலனை அடைய முடியும்.
முகம் மற்றும் கழுத்திற்கு தேவையான அளவு ஃபேஸ் பேக்கை எடுத்து அதை ஒரு காட்டன் பாலில் தொட்டு நன்றாக முகம் மற்றும் கழுத்தில் தடவி இரண்டு நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி விட வேண்டும். இதில் இருக்கக்கூடிய தக்காளி, பால், பன்னீர் இவை மூன்றுமே அழகை அள்ளித் தரும் பொருட்களாக திகழ்கிறது.
முகத்தில் இருக்கக்கூடிய கருணையையும், அழுக்குகளையும் நீக்க உதவுகிறது. கரும்புள்ளிகள், வடுக்கள், பருக்கள், தழும்புகள் இவை எதுவும் ஏற்படாமல் ஆரோக்கியமாக நம்முடைய முகத்தை பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக்கை எந்த சருமமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். ஆண்கள் பெண்கள் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: ஹேர் பேக் பவுடர் தயார் செய்யும் முறை
நம்முடைய சமையலறையில் அன்றாடம் நாம் உபயோகப்படுத்தும் இந்த பொருட்களை பயன்படுத்தி நம்முடைய முகத்தை தங்கம் போல ஜொலிக்க வைக்க முடியும்.