வெறும் 10 நிமிடத்தில் இந்த தோசையை தயார் செய்யலாம். பிரிட்ஜில் தோசை மாவு இல்லை என்றாலும்.

dosai
- Advertisement -

சுட சுட எத்தனை தோசை சுட்டாலும் தட்டில் நிற்காது. உடனடியாக காலியாகிவிடும். அவ்வளவு ருசியான காரசாரமான ஒரு மசாலா வாசம் நிரம்பிய தோசையை எப்படி செய்வது. அதுவும் ஃப்ரிட்ஜில் தோசை மாவு இல்லாத சமயத்தில் எப்படி இந்த தோசை சுடுவது? தெரிந்து கொள்வோமா. இன்டர்ஸ்டிஙான இந்த ரெசிபியை படித்த பிறகு கட்டாயம் உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் மீண்டும் மீண்டும் இந்த தோசையை தான் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்.

முதலில் 1 கப் அளவு ரவையை எடுத்து போட்டு மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்து கொள்ளுங்கள். அதாவது 200 கிராம் அளவு ரவை எடுத்துக் கொண்டால், பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியாக இருக்கும். எந்த கப்பில் ரவையை அளந்து எடுத்துக் கொள்கிறார்களோ, அதே கப்பில் மற்ற பொருட்களையும் அளந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மிக்ஸி ஜாரில் அரைத்த ரவையை அகலமான பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த ரவையோடு தேவையான அளவு – உப்பு, தயிர் – 1/2 கப், தண்ணீர் – 1 கப், ஊற்றி கட்டிகளில்லாமல் கரைத்து ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவேண்டும். ரொம்பவும் புளிப்பில்லாத தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாவு அப்படியே ஊறட்டும். இந்த தோசைக்கு மேலே தடவுவதற்கு ஒரு காரசாரமான வாசம் நிறைந்த மசாலா பொடியை தயார் செய்யலாம்.

ஒரு சிறிய கிண்ணத்தில் 3 ஸ்பூன் அளவு நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த நெய்யுடன் தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன், உப்பு – 2 சிட்டிகை, தோலுரித்து பொடியாக நசுக்கிய பூண்டு பல் – 4, சேர்த்து இந்த கலவையை நன்றாக கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

ஏற்கனவே அரைத்து மாவை 10 நிமிடங்கள் ஊற வைத்து இருக்கின்றோம் அல்லவா, அதில் 1/4 ஸ்பூன் சமையல் சோடா உப்பு சேர்த்து, நன்றாக கலந்து விட்டு, தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். ரவை 10 நிமிடங்கள் ஊறிய பின்பு இன்னும் கொஞ்சம் கட்டியாகி இருக்கும் அல்லவா அதற்காக.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கொள்ளவேண்டும். தோசைக்கல் மிதமான சூடு இருக்கும்போது தயாராக இருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து தோசைக்கல்லில் வார்த்து மெல்லிசாக தேய்க்க வேண்டும். தோசை வார்த்த உடனேயே மேலே இருக்கும் அந்த மாவு ஒரு நிமிடம் போல வெந்தபிறகு, கிண்ணத்தில் தயார் செய்து வைத்திருக்கும் மிளகாய்த்தூள் நெய் சேர்த்த மசாலாவை இந்த தோசையின் மேலே அப்படியே ஒரு ஸ்பூனில் நன்றாக தடவி விடுங்கள்.

தோசை மிதமான தீயிலேயே வேகட்டும். தோசையை திருப்பிப் போட வேண்டாம். தோசை நன்றாக வெந்து சிவந்து மொறு மொறுப்பாக வந்தவுடன் இதன் மேலே ரொம்பவும் குறைந்த அளவு பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழைகளைத் தூவி அப்படியே தோசையை மசால் தோசை போல சுருட்டி, உடன் தேங்காய் சட்னியை வைத்து பரிமாறுங்கள். இப்படி ஒரு அருமையான தோசையை இதுவரை நீங்கள் சுவைத்திருக்கவே மாட்டீர்கள். உங்களுக்கு இந்த ரெமடி பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -