நுங்கு பாயாசம் செய்முறை

nongu payasam
- Advertisement -

வெயில் காலத்தில் வெயிலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நீக்குவதற்காக இயற்கை கொடுத்த அருமருந்தாக திகழும் சில பொருட்களுள் முக்கியமான ஒன்றுதான் நுங்கு. இந்த நுங்கு வெயில் காலத்தில் மட்டுமே தான் கிடைக்கும். மற்ற எந்த காலத்திலும் கிடைக்காது. வெயில் தாக்கத்திலிருந்து குறைத்துக்கொள்ள உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கு இந்த நொங்கு உதவி செய்கிறது. இந்த நுங்கை வைத்து எப்படி நுங்கு பாயாசம் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய அம்மை நோய்களை தடுப்பதற்குரிய நோய் எதிர்ப்பு சக்தியை இந்த நுங்கு தருகிறது. மேலும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. நுங்கை நாம் உண்பதன் மூலம் உடல் எடை குறையும். மேலும் இதைத் தொடர்ச்சியாக உண்பதன் மூலம் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்கும் அருமருந்தாக திகழ்கிறது. வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு தாகத்தை அடக்குவதற்கும் நுங்கு உதவி செய்கிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி இதற்கு உள்ளது. குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது. வயிற்றுப்புண், வயிற்றுப் பிரச்சனை, மலச்சிக்கல், உடல் சோர்வு, தோல் நோய்கள், கல்லீரல் பிரச்சனை, அஜீரண கோளாறு போன்ற அனைத்தையும் சரி செய்வதற்கு நுங்கு உதவி புரிகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • நுங்கு – 20
  • பால் – 1 லிட்டர்
  • நெய் – ஒரு ஸ்பூன்
  • பாதாம் – 10
  • ஏலக்காய் – 4
  • பிஸ்தா – 4
  • சர்க்கரை – 10 ஸ்பூன்

செய்முறை

முதலில் பாலை 3/4 லிட்டர் வரும் அளவிற்கு நன்றாக காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நுங்கின் தோலை உரித்து விட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பாதாம் பருப்பில் ஐந்தை மட்டும் ஊற வைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தொழுதித்த பாதாம், ஏலக்காய் இரண்டையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதனுடன் பெரிய அளவில் இருக்கக்கூடிய நுங்கு மூன்று அல்லது நான்கு என்ற எண்ணிக்கையில் சேர்த்து அதையும் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு கரண்டி அளவிற்கு காய்ச்சிய பாலையும் ஊற்றி அரைக்க வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து மீதமிருக்கும் பாலை ஊற்றி பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் இந்த நுங்கு வலுதையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது இவை அனைத்தும் சேர்ந்து நன்றாக கொதிக்கட்டும். அதற்குள் மீதம் இருக்கும் நுங்கை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்வோம். நன்றாக கொதித்த பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் நுங்கை இதில் சேர்த்து மீதம் இருக்கும் பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளை நன்றாக துருவி அதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வந்ததும் அதற்கு மேலாக ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். மிகவும் சுவையான நுங்கு பாயாசம் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: பலாக்கொட்டை வடை செய்வது எப்படி?

இன்றைய காலத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை சாப்பிட விருப்பம் இல்லாத பட்சத்தில் இப்படி பாயாசமாக செய்து கொடுத்து நுங்கின் நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -