வெங்காயம் மட்டும் இருந்தால் போதும். சட்டுனு 10 நிமிஷத்துல லஞ்ச் பாக்ஸ்ல பேக்பண்ண ‘ஆனியன் ரைஸ்’ தயார்.

onion-rice
- Advertisement -

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கும் சரி, அலுவலகத்துக்குச் செல்லும் கணவருக்கும் சரி, தினம் தினம் என்ன சாதம் லஞ்ச் பாக்சில் கொடுத்து விடுவது என்ற குழப்பம் கட்டாயம் இல்லத்தரசிகளுக்கு இருக்கும். வெறும் வெள்ளை சாதத்தை வடித்து வைத்து விட்டால் போதும். 10 நிமிடத்தில் சுவையான வெங்காய சாதம் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த வெரைட்டி ரைஸ் செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களே போதும். கஷ்டப்படாமல் சுலபமாக செய்யக்கூடிய சூப்பரான ஆனியன் ரைஸ் ரெசிபி உங்களுக்காக.

onion-rice1

முதலில் உதிரி உதிரியாக உப்பு போட்டு வடித்த சாதம் 200 கிராம் அளவு நமக்கு தேவைப்படும். சாதத்தை வடித்து ஆற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பாசுமதி அரிசி, பச்சரிசி, சாப்பாட்டு அரிசி எந்த அரிசியை வேண்டுமென்றாலும் இந்த வெரைட்டி ரைஸ் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -

இப்போது சாதத்தை தாளித்து விடலாம். அடுப்பில் அடி கனமான ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் – 1/2 ஸ்பூன், மீடியம் சைஸ் வெங்காயம் நீளவாக்கில் வெட்டியது – 3, கருவேப்பிலை – 1 கொத்து, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், சேர்த்து வெங்காயம் பொன்னிறம் வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். (300 கிராம் வெங்காயம் எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும்.)

onion-rice1

வெங்காயம் வதங்கி வந்த பின்பு மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், சாம்பார் பொடி – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு ஒரு நிமிடம் போல மசாலா பொருட்களை நன்றாக கலந்து விட்டு இரண்டு ஸ்பூன் அளவு தண்ணீரை இந்த வெங்காயத்தில் தெளித்து விட்டு, 3 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு வெங்காயத்தை வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயத்தில் நாம் ஊற்றிய தண்ணீர் அனைத்தும் சுண்டி வந்தவுடன், வேக வைத்து ஆற வைத்திருக்கும் சாதத்தினை கடாயில் போட்டு 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை தூவி, அடுப்பை அணைத்து விட்டு அப்படியே உதிரி உதிரியாக சாதத்தினை கலந்துவிடுங்கள். கடாயில் இருக்கும் ஆனியன் ரைசை இரண்டு நிமிடம் தட்டை போட்டு மூடி வைத்துவிட்டு, அதன் பின்பு சாப்பிட்டாலும் சரிதான். லஞ்ச் பாக்ஸ்க்கு பேக் செய்தும் கொடுத்துவிடலாம். அது நம்முடைய விருப்பம்.

onion-rice2

சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கக்கூடிய இந்த சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஏதாவது கிழங்கு வறுவல் அல்லது வடாம் உருளைக்கிழங்கு சிப்ஸ் இருந்தால் கூட போதுமானது. சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ரெடி. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -