புளித்துப் போன இட்லி மாவை சரி செய்வது எப்படி?

maavu
- Advertisement -

இது வெயில் காலம். மாவை அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் இரண்டு நாள் கூட தாங்காது. உடனடியாக புளித்துப் போய் விடுகிறது. புளித்த இட்லி மாவை, தோசை மாவை, சரி செய்து மீண்டும் சமைத்து சாப்பிடுவது எப்படி. அருமையான இரண்டு வகை சமையல் குறிப்பு இந்த பதிவில் உங்களுக்காக. இந்த டிப்ஸை தெரிந்து வைத்துக் கொண்டால், அடிக்கடி புளிச்ச மாவை கீழே ஊற்றி வீணாக்கவே மாட்டீங்க. இல்லத்தரசிகள் கட்டாயம் இதை தெரிஞ்சு வச்சுக்கணும்.

புளித்த இட்லி மாவை சரி செய்ய டிப்ஸ்

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வடித்த சாதம் 1 கப் அளவு சேர்த்துக் கொள்ளவும். இதோடு 1 குழி கரண்டி அளவு அரிசி மாவு, 1 குழி கரண்டி அளவு ரவை போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைத்து, புளித்த மாவோடு சேர்த்து கலந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு 10 நிமிடம் கழித்து இந்த மாவில் இட்லி ஊற்றி சாப்பிட்டால், புது மாவில் இட்லி வார்த்து சாப்பிட்டது போல சூப்பரான ருசியில் கிடைக்கும். இட்லி பஞ்சு போல அத்தனை சாஃப்டா வரும். 1 கப் அளவு புளித்த மாவு மாவுக்கு இந்த அளவு சரியாக இருக்கும். உங்களுடைய வீட்டில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக புளித்த மாவு இருந்தால் அதற்கு ஏற்றது போல வடித்த சாதம், ரவை, அரிசி மாவை இன்னும் கொஞ்சம் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்தது இந்த பழைய மாவை வீணாக்காமல் சூப்பராக ஊத்தப்பம் கூட வார்க்கலாம். அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க. ஒரு மிக்ஸி ஜாரில் 2 கைப்பிடி அளவு வடித்த சாதம், 2 தேங்காய் பத்தைகளை துண்டு துண்டாக நறுக்கி போட்டோ, அல்லது துருவி போட்டோ விழுதாக நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த விழுதை பழைய புளித்த மாவில் ஊற்றி விடுங்கள். இதோடு 2 டேபிள் ஸ்பூன் ரவை சேர்த்து தேவையான அளவு கொஞ்சமாக உப்பு போட்டு, தோசை மாவு பக்குவத்திற்கு இதை கரைத்துக் கொள்ளுங்கள். ஊத்தாப்பம் ஊத்தும் போது மாவு கொஞ்சம் தண்ணீர் பதத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். இந்த ஊத்தாப்ப மாவில் 2 சிட்டிகை சோடா உப்பு சேர்க்கலாம்.

ஒரு குழி கரண்டி அளவு தண்ணீரில் இரண்டு சிட்டிகை சோடா உப்பு போட்டு கலந்து அதையும் மாவில் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஊத்தாப்பம் மாவு தயார். தோசை கல்லில் இந்த மாவை ஊற்றி கொஞ்சம் திக்காக தேய்த்துக் கொள்ளுங்கள். இதன் மேலே துருவிய வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், போட்டு ஊத்தாப்பம் ஊற்றினால் சுவையாக இருக்கும்.

- Advertisement -

தேவைப்பட்டால் இதில் முட்டை ஊற்றி, முட்டை தோசையாகவும் சாப்பிடலாம். புளித்த தோசை மாவில் இந்த ஊத்தாப்பத்தை செய்தீர்கள் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டாங்க. அவ்வளவு சுவையாக இருக்கும். உங்களுடைய வீட்டில் ஃப்ரிட்ஜில் டப்பாவில் மாவு காலியாகும் போதுதான் பெரும்பாலும் அந்த மாவு புளித்துப்போக தொடங்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டை விட்டு பல்லியை வெளியேற்ற டிப்ஸ்

அந்த மாவை தூக்கி கீழே கொட்டாமல் மேல் சொன்ன குறிப்பை பயன்படுத்தி அந்த மாவை புதுமாவாக மாற்றிக் கொள்ளுங்கள். இல்லத்தரசிகளுக்கு அடிக்கடி இந்த வெயில் காலத்தில், இந்த குறிப்பு தேவைப்படும். உங்களுக்கும் இந்த குறிப்பு தேவைப்படும்போது ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -