டக்குனு 10 நிமிடத்தில் முகம் வெள்ளையாக வேண்டும் என்றால் இந்த பேக் போடுங்க. இன்ஸ்டன்ட் க்ளோ, இன்சென்டா கிடைக்கும்.

face5
- Advertisement -

உடனடியாக வெள்ளையான அழகைப் பெற சூப்பரான ஒரு பேக் தயாரிப்பது எப்படி என்பதை பற்றிய குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எண்ணெய் வடிந்து வாடிப்போய் இருக்கும் முகத்தை சீக்கிரமாக பொலிவாக மாற்றுவதற்கு இந்த குறிப்பு உபயோகமாக இருக்கும். சில பேர் வெயிலில் சென்று முகம் வாடி இருக்கும். சில பேருக்கு முகம் எதனால் வருகிறது என்று தெரியாது. பளிச்சென்று இருந்த முகம் படிப்படியாக கருப்பாக மாறி இருக்கும். சில பேருக்கு முகம் எப்போதுமே டல்லாக இருக்கும். இப்படி உங்களுக்கு முகத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும், அதை சரி செய்ய இந்த ஒரு பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா இன்ஸ்டன்டான ஒரு வெள்ளை அழகு இன்ஸ்டன்ட்டா கிடைக்கும்.

இந்த குறிப்புக்கு நான் பயன்படுத்த போகும் பொருள் கான்பிளவர் மாவு – 2 ஸ்பூன், புளிக்காத கெட்டி தயிர் – 2 ஸ்பூன், எலுமிச்ச பழச்சாறு – 1 ஸ்பூன், தக்காளி பழச்சாறு – தேவையான அளவு. நான்கு பொருட்கள் தான் தேவைப்படும். ஒரு சிறிய கிண்ணத்தில் கான்பிளவர் மாவை போட்டுக்கொண்டு அதில் தயிறு, எலுமிச்சம்பழச் சாறு, தக்காளி பழச்சாறை ஊற்றி, சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்‌. தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டாம். தேவைப்பட்டால் தக்காளி பழச்சாறை இன்னும் கொஞ்சம் அதிகமாக ஊற்றி இதை பேக்காக தயார் செய்து கொள்ளுங்கள். அப்படியே மொழு மொழு என நைசாக இந்த பேக் அப்ளை செய்யவே அவ்வளவு சூப்பராக இருக்கும்.

- Advertisement -

இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்பு முகத்தை சுத்தமாக சோப்பு போட்டு அல்லது ஃபேஸ் வாஷ் போட்டோ, கழுவி துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு பேக்கை முகம் முழுவதும் போட்டு விடுங்கள். கழுத்துப்பகுதியிலும் போட்டுக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் கழித்து பேக் நன்றாக காய்ந்து முகம் இறுக்கிப்பிடிக்க தொடங்கும். அப்போது முகத்தை தண்ணீரில் நனைத்துவிட்டு ஜென்டில் ஆக வட்ட வடிவில் மசாஜ் செய்து அதன் பின்பு முகத்தை வெறும் தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள். இந்த பேக்கை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது போட்டுக் கொள்ளலாம்.

சன் டேன் ஆகி முகம் ரொம்பவும் பொலிவிழந்து இருந்தாலோ, அல்லது ரொம்ப நாட்களாக முகத்தை நீங்கள் கவனிக்காமல் அப்படியே விட்டு முகம் பொலிவிழந்து இருந்தாலோ, முகம் கருப்பாக மாறி இருந்தாலும் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பேக்கை போடும்போது முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். இதே பேக்கை கை கால்களில் கூட அப்ளை செய்து கொள்ளலாம். சன் டேன் நீங்கிவிடும். முகம் பொலிவான பின்பு முகத்தில் இருக்கும் கருப்பு நன்றாக குறைந்த பின்பு வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை போட்டு வர வேண்டும்.

- Advertisement -

முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் கருந்திட்டுகளை குறைக்கக்கூடிய சக்தியும் இந்த பேக்கிற்கு உள்ளது. காரணம் இதில் நாம் எலுமிச்சை பழச்சாறும் தக்காளி சாரும் தயிரும் சேர்த்து இருக்கின்றோம் இந்த மூன்று பொருட்களுக்குமே கருப்பு சருமத்தை வெள்ளையாக்க கூடிய சக்தி உள்ளது.

எலுமிச்சம் பழச்சாறு சிலபேருடைய ஸ்கின்னுக்கு ஒத்து வராது. முகத்திற்கு ஃபேஸ் பேக் தயாரிக்கும் போது எலுமிச்சை பழச்சாறை போடாமலும் பேஸ் பேக் போடலாம் தவறு இல்லை. ஆனால் கை கால்களில் இந்த பேக்கை போடும்போது அதில் கொஞ்சம் எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். முக சருமத்திற்கும், கை கால்களில் இருக்கக்கூடிய சருமத்திற்கும் ரொம்பவும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா. கை கால்களில் இருக்கக்கூடிய கருமை நிறத்தை போக்க எலுமிச்சை பழச்சாறு அவசியம் தேவைப்படும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. உடனடியாக வெள்ளை அழகைப் பெற இது ஒரு சுலபமான வீட்டு குறிப்பு.

- Advertisement -