பத்தே நிமிஷத்துல ரொம்ப சுவையான இந்த பிரியாணிய மட்டும் செய்து குடுத்து பாருங்க, சாப்பாடே வேண்டாம்னு சொல்ற குழந்தைங்க கூட. மூணு வேலையும் இதுவே போதும் சொல்லி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

- Advertisement -

டிபனுக்கு எப்போதும் ஒரே மாதிரியாக செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக சேமியாவை வைத்து ஒரு அருமையான வெஜிடபிள் பிரியாணியை எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இப்படி செய்யும் போது சேமியாவே பிடிக்காது என்று சொல்லும் குழந்தைகள் கூட, விரும்பி சாப்பிடுவார்கள். அத்துடன் இதில் காய்கறிகள் அனைத்தும் சேர்த்துக் கொடுப்பதால் ஒரு நல்ல சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

சேமியா -1 கப், பட்டாணி -1/4 கப், கேரட் – 1/4 கப், பீன்ஸ் – 1/4 கப், பச்சை பட்டாணி – 1/4 கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன், பட்டை , இலவங்கம், ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை (ஒவ்வொன்றிலும்) – 2, மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு -1 டீஸ்பூன், கரம் மசாலா – 1/4 டீஸ்பூன், நெய் – 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை பழம் – பாதி, புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி – 1 கைப்பிடி.

- Advertisement -

செய்முறை

இந்த பிரியாணி செய்ய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் என அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் காய்கறிகளையும் சின்ன சின்னதாக ஒரே அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து பேன் வைத்து சூடானதும் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சேமியாவை ஐந்து இரண்டு நிமிடம் வரை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்த சேமியாவாக இருந்தால் இரண்டு நிமிடம் வரை வறுத்தால் போதும்.

- Advertisement -

இப்போது பிரியாணியை தாளித்து விடலாம். அடுப்பை பற்ற வைத்து ஒரு அகலமான கடாய் வைத்து எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி காய்ந்தவுடன், மசாலா பொருட்களை சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு தக்காளியும் சேர்த்து லேசாக வதக்கிய பிறகு, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதையும் பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு நறுக்கி வைத்த காய்கறிகளை எல்லாம் சேர்த்து அதையும் நன்றாக வதக்கிய பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா அனைத்தையும் சேர்ந்து ஒரு முறை லேசாக வதக்கி விட்டு ஒரு கப் சேமியாவுக்கு 11/2 கப் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடம் கொதித்த பிறகு காய்கள் எல்லாம் பாதி வரை வெந்திருக்கும். இப்போது வறுத்து வைத்த சேமியாவை இதில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து அரை எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து விட்டு மூடி போட்டு மேலும் ஒரு ஐந்து நிமிடம் வேக விடுங்கள்.

ஐந்து நிமிடம் கழித்து தண்ணீர் எல்லாம் வற்றி நல்ல உதிரி உதிரியாக சேமியா வந்து விடும். இப்போது அடுப்பை அனைத்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான சேமியா பிரியாணி ரெடி.

இதையும் படிக்கலாமே: ரேஷன் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியில் வெள்ளை வெளேரென பஞ்சு போல குஷ்பூ இட்லி எப்படி சுடுவது? இது தெரிஞ்சா இனிமே இட்லி அரிசியே வாங்க வேண்டாமே!

சேமியா பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட, இப்படி காய்கறிகள் எல்லாம் சேர்த்து பிரியாணியாக செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள். அது மட்டுமில்லாமல் காய்கறிகளின் சத்தும் குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்கும்.

- Advertisement -