ரேஷன் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியில் மாவு அரைத்து பஞ்சு போல இட்லி இப்படி செய்யலாம்

rice-idli-ration
- Advertisement -

ரேஷன் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியை வைத்து ரொம்பவே டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெள்ளை வெளேர் குஷ்பூ இட்லி, பஞ்சு போல தயாரிக்கலாம். இந்த சின்ன சின்ன குறிப்புகள் உங்களுக்கு இதை செய்வதற்கு ரொம்பவே உபயோகமாக இருக்கும். ரேஷன் அரிசியில் எப்படி மாவு அரைத்து மெத்துன்னு இட்லி செய்வது எப்படின்னு? நாமளும் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

ரேஷன் அரிசி இட்லி மாவு அரைக்கும் முறை:
ரேஷன் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி ரேஷியோ தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ரேஷன் கடையில் கொடுக்கப்படும் புழுங்கல் அரிசி எட்டு கப் அளவிற்கு எடுத்தால் அதில் நான்கு கப் அளவிற்கு அதாவது பாதி அளவுக்கு பச்சரிசி சேர்த்து அரைக்க வேண்டும். அப்போது தான் இட்லி சூப்பராக வரும். இதற்கு உளுந்தும் அதிகம் தேவையில்லை ஒரு கப் உளுந்து இருந்தாலும் போதுமானது.

- Advertisement -

ரேஷன் அரிசியில் இருந்து புழுங்கல் அரிசி எட்டு கப் அளவிற்கு ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் பச்சரிசி 4 கப் அளவிற்கு சேர்த்து நன்கு கல், குருணை நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஐந்தாறு முறை தண்ணீர் விட்டு நன்கு சுத்தமாக அலசி எடுத்துக் கொண்டு வாருங்கள். பின்னர் சுத்தமான தண்ணீர் ஊற்றி குறைந்தது 5 மணி நேரம் நன்கு ஊற விட வேண்டும். சாதாரண அரிசியை விட, இந்த அரிசி சற்று கெட்டியாக இருக்கும் என்பதால் 5 மணி நேரத்திற்கு குறைவாக ஊற வைக்க வேண்டாம். அதே போல ஒரு கப் அளவிற்கு உளுந்து தனியாக எடுத்து நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீர் ஊற்றி ஐந்து மணி நேரம் அரிசியுடன் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

இதில் வெந்தயம், அவல் போன்ற எந்த பொருட்களையும் நாம் சேர்க்கப் போவது இல்லை. ஐந்து மணி நேரம் நன்கு ஊறிய பிறகு கிரைண்டரை இயக்கி சுற்ற விடுங்கள். அதில் நீங்கள் ஊற வைத்துள்ள உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். ஒவ்வொரு முறை சேர்க்கும் பொழுதே சொட்டு சொட்டாக தண்ணீர் தெளித்து அரைய விடுங்கள். ஒரு பத்து நிமிடம் நன்கு பொங்கி வரும் வரை தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இதே போல கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து தெளித்து அரைக்க வேண்டும். 20 நிமிடம் நன்கு பொங்கி வர அரைத்த பிறகு பத்து நிமிடம் மூடி வைத்து அப்படியே சுற்ற விடுங்கள். பிறகு மாவை எடுத்து பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நீங்கள் ஊற வைத்துள்ள அரிசியில் இருந்து பாதி அரிசியை மட்டும் சேருங்கள். அரிசி ஒட்டுமொத்தமாக சேர்த்தால் சரியாக அரைபடாது. அரிசியுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு வடித்த சாதம் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நைசாகவும் அல்லாமல் ரவை போலவும் அல்லாமல் அதைவிட கம்மியான கொரகொரப்பில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

மீதி பாதி அரிசியை சேர்க்கும் பொழுது ஒரு கைப்பிடி அளவிற்கு இதே போல வடித்த சாதத்தை சேர்த்து ரவை பதத்தை விட சற்று மெல்லிய கொரகொரப்பாக கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசியை போடும் முன் அரவையில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்தால் நல்லது. பின்னர் கிரைண்டர் கழுவ அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மாவில் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கரண்டியால் கலந்து விட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
ஹோட்டலில் தருவது போல பூரி மசாலா செய்ய வரலையா? கஷ்டப்படாம ரொம்ப ஈஸியா இப்படி செஞ்சு பாருங்க, எத்தனை பூரி வேணும்னாலும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்! எவ்வளவு நேரம் ஆனாலும் பூரி புஸ்சுன்னு அப்படியே இருக்க இந்த 2 பொருளை சேர்த்து மாவு பிசையுங்க!

இதற்கு மேல் தண்ணீர் சேர்க்க வேண்டாம், கையால் கலக்கவும் வேண்டாம். நன்கு கலந்த பின்பு தேவையான அளவிற்கு மட்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதியை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொளளுங்கள். எடுத்து வைத்த மாவு எட்டு மணி நேரம் நன்கு புளித்த பின்பு அதிகம் போட்டு கலக்காமல், லேசாக கலந்து அப்படியே இட்லி தட்டில் ஊற்றி அவித்து எடுங்கள். பொசுபொசுன்னு சூப்பராக வெள்ளை வெள்ளேர் என பஞ்சு போல இட்லி நிச்சயம் உங்களுக்கும் வரும்.

- Advertisement -