வெறும் 10 நிமிடத்தில் இந்த தட்டை மாவைத் தயார் செய்துவிடலாம். அடுத்த 10 நிமிடத்தில் தட்டையை பொரித்து எடுத்து விடலாம். மிக மிக சுலபமான தட்டை ரெசிபி உங்களுக்காக.

- Advertisement -

ரெடிமேடாக கிடைக்கக்கூடிய அரிசி மாவை வைத்து சுலபமான முறையில் மொரு மொரு தட்டை சுடுவது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வரப்போற பண்டிகை தினங்களில் இந்த தட்டை ரெசிபியை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய தட்டை ரெசிப்பியை மிஸ் பண்ணாதீங்க.

arisimavu

முதலில் 1 கப் அளவு பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான அளவாக பார்த்தால் 150 கிராம் பச்சரிசி மாவை எடுத்துக் கொண்டால், பின் சொல்லப்படும் அளவுகள் சரியானதாக இருக்கும். இந்த பச்சரிசி மாவை ஒரு கடாயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு 2 நிமிடம் போல வறுத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை வைத்துதான் தட்டை மாவு தயார் செய்யப் போகின்றோம்.

- Advertisement -

வறுத்து ஆற வைத்த மாவை ஒரு அகலமான பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த மாவுடன் பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், உளுந்து மாவு – 3 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – 2 கொத்து, தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைத்த கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், லேசாக நுணுகிய வறுத்த வேர்க்கடலை – 1/4 கப், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து 2 டேபிள் ஸ்பூன் சுடச்சுட எண்ணெயை இந்த மாவில் ஊற்றி முதலில் நன்றாக பிசைந்து விட வேண்டும்.

தண்ணீர் ஊற்றுவதற்கு முன்பு, எண்ணெயை மட்டும் ஊற்றி மாவை நன்றாக பிசைந்து கையில் எடுத்து ஒரு கை பிடி, பிடித்தால் புட்டு மாவு போல பிடிப்பதற்கு வரவேண்டும். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாவில் தண்ணீர் தெளித்து தட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவு ரொம்பவும் கட்டியாக பிசைந்தால் தட்டை கடகடவென மாறிவிடும். ரொம்பவும் தண்ணீராக பிசைந்துவிட்டால் தட்டையில் எண்ணெய் குடித்து விடும். மாவு பிசையும் பக்குவம் முக்கியம்.

- Advertisement -

இந்த தட்டை மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பால் கவரை எடுத்து, அதில் எண்ணெய் தடவி அதன் மேலே ஒரு சிறிய உருண்டையை வைத்து, அதன் மேலே மற்றொரு கவரை வைத்து, அடி தட்டையாக இருக்கும் ஒரு கிண்ணத்தை இந்த மாவின் மேல் அழுத்தம் கொடுத்தீர்கள் என்றால், தட்டை அழகாக வட்ட வடிவத்தில் நமக்கு கிடைத்துவிடும்.

thattai2

இப்படி தட்டையை தட்டினாலும் உங்களுடைய கையை கொண்டு தடிமனாக இருக்கும் இடத்தை சரி செய்துவிட்டு, தட்டிய தடைகளை ஒரு பெரிய கவரில் ஒவ்வொன்றாக அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மொத்தமாக எல்லா தடையையும் தட்டிவைத்துவிட்டு, அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெயை மிதமான தீயில் சூடு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

thattai2

ஒவ்வொரு தட்டையாக பக்குவமாக காய்ந்த எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பக்குவமாக தட்டையை பொரித்து எடுத்தால் சூப்பரான மொரு மொரு தட்டை தயார். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்லயும் இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. காற்றுப்புகாத டப்பாவில் நன்றாக ஆறிய தடைகளைப் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது.

- Advertisement -