உதிராத உறுதியான முடி வளர்ச்சிக்கு எளிமையான 10 குறிப்புகள். இதைப் பின்பற்றினாலே உங்கள் முடி காடு போல வளர தொடங்கிவிடும்.

hair10
- Advertisement -

பின் சொல்லக்கூடிய ஏதாவது ஒரு குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வந்தாலும் சரி, உங்களுடைய முடி காடு போல வளரும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. முடி வளர்ச்சிக்கு தேவையான பயனுள்ள 10 குறிப்புகளை தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள். தலைமுடிக்கு எந்த ஹேர் பேக் போட்டாலும் அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயை ஊற்றி கலந்து போடுங்க. அதேபோல் தலைமுடிக்கு எந்த எண்ணெயை பயன்படுத்தினாலும் அதில் கொஞ்சம் விளக்கெண்ணெயை சேர்த்து பயன்படுத்துங்கள்.

விட்டமின் ஈ கேப்ஸ்யூலோடு, விளக்கெண்ணெயை சேர்த்து பயன்படுத்தும் போது முடி வலிமையோடு சைனிங்காக வளரும். உதாரணத்திற்கு 50ml தேங்காய் எண்ணெய்,  விளக்கெண்ணெய் 25ml, 1 விட்டமின் ஈ கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜெல், இந்த அளவுகளில் எண்ணெயை கலந்து தலைக்கு பயன்படுத்தி வர நல்ல முடி வளர்ச்சி இருக்கும்.

- Advertisement -

வெறும் செம்பருத்தி பூ இலைகளை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, அரைத்து இந்த பேக்கை தலையில் போட்டால் முடி படு வேகமாக வளரும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ஹேர் பேக்கை போடலாம். 15 நிமிடங்கள் இந்த ஹேர் பேக்கை தலையில் ஊற வைத்து அலசி விட வேண்டும்.

முருங்கைக்கீரை, பச்சை பயிரை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக முளைகட்டிய பச்சை பயிறு முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். நீங்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் அடிக்கடி முட்டையின் வெள்ளை கருவை ஹேர் மாஸ்க்காக போட்டு வரலாம்.

- Advertisement -

இரவு தூங்கும் போது, தலைமுடியை பின்னி கட்டிக்கொண்டு தூங்குங்கள். தலைமுடியை எப்போதும் டிரையாக வைத்திருக்காதிங்க. ட்ரையாக இருக்கும் தலையில் சீயக்காயோ ஷாம்புவோ போட்டு குளிக்க கூடாது. நேரடியாக ஷாம்புவை தலையில் அப்ளை செய்யக்கூடாது. சிறிது தண்ணீரில் கலந்த பின்பு தான் அந்த ஷாம்புவை தலைக்கு பயன்படுத்த வேண்டும்.

வழுக்கையாக இருக்கும் இடத்தில் புதிய முடிகள் வளர சிறிதளவு கரிசலாங்கண்ணி இலைகளை எடுத்து நசுக்கி சாறு பிழிந்து வழுக்கையாக இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும். கரிசலாங்கண்ணி இலை பொடி கிடைத்தால் கூட அதை தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை தலைக்கு ஸ்பிரே செய்தாலும் சீக்கிரத்தில் புதிய முடிகள் வளரும்.

- Advertisement -

முடி ரொம்பவும் டிரை ஆக இருந்தால் வாரத்தில் மூன்று நாள் தேங்காய் பாலை தலை முடிக்கு அப்ளை செய்து வர வேண்டும். மூன்றே மாதத்தில் உங்களுடைய தலைமுடி ஸ்ட்ரைட்னிங் பண்ணது போல பளபளப்பாக ஜொலிக்கும். ஷைனிங்காக மாறும்.

முடியின் வேர் கால்களுக்கு ரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். வேர்க்கால்களில் முடி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வாரத்தில் 3 நாள் இதுபோல பயிற்சி செய்யுங்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்து, இப்படி தலையை கீழே கவிழ்த்து போட்டு நிற்கலாம். மீண்டும் நிமிர்ந்து விட்டு மீண்டும் ஒரு நிமிடம் கவிழ்ந்து நிற்கலாம்.

நல்லெண்ணெய் 50 ml, தேங்காய் எண்ணெய் 50 ml, விளக்கெண்ணெய் 25 ml, இந்த அளவுகளில் மூன்று எண்ணியையும் கலந்து கொள்ளுங்கள் இதோடு நான்கு பல் பூண்டை தட்டி போட்டு நன்றாக சூடு செய்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டி வாரத்தில் இரண்டு நாள் தலைமுடிக்கு தடவி ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து, வர உதிராத உறுதியான முடி வளர்ச்சி கிடைக்கும்.

மேல் சொன்ன குறிப்புகளை பின்பற்றினாலும் மன அழுத்தத்தோடு, இரவு தூங்காமல் சரியாக சாப்பிடாமல் வேலை செய்பவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படும். ஆகவே ஆரோக்கியமான உணவும் சரியான தூக்கமும் கூட முடி வளர்ச்சிக்கு அவசியம் தேவை.

- Advertisement -