பத்து வருடமாக படிந்திருக்கும் உப்பு கறை நீங்க எளிய வீட்டு குறிப்பு

bathroom
- Advertisement -

சில பேர் பல வருடங்களாக பாத்ரூமை சுத்தம் செய்யாமல் வைத்திருப்பார்கள். அதாவது வெறும் ஹேர்பிக் ஊற்றி லேசாக தேய்த்து கழுவி விடுவார்கள். அவ்வளவுதான். ஆனால் அதில் பல வருடங்களாக படிந்திருக்கும் உப்பு கறையை நீக்காமலேயே விட்டு வைத்திருப்பார்கள். டயல்ஸ், தரையில் எல்லாம் அப்படியே உப்பு கறை படிந்து பார்ப்பதற்கு ரொம்பவும் அசிங்கமாக தெரியும்.

ஏனென்றால் உப்பு கறை போக பாத்ரூமை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இப்போது இந்த உப்பு கறையை நீக்க கெமிக்கல் கலந்த நிறைய ப்ராடக்ட் மார்க்கெட்டில் கிடைக்கின்றது. ஆனால் அதெல்லாம் எந்த அளவுக்கு நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று தெரியவில்லை. உங்க வீட்டு பாத்ரூமில் எத்தனை வருடமாக உப்பு கறை படித்திருந்தாலும் சரி இந்த மெத்தடை ட்ரை பண்ணி பாருங்க. சூப்பரா கிளீன் பண்ணலாம்.

- Advertisement -

10 வருடமா படிந்திருந்த பாத்ரூம் உப்பு கறை நீங்க எளிய வீட்டு குறிப்பு

இந்த குறிப்புக்கு நாம் என்னென்ன பொருட்களை எல்லாம் பயன்படுத்தப் போகின்றோம் என்பதை முதலில் பார்த்து விடுவோம். நன்றாக புளித்த இட்லி மாவு, சீயக்காய் தூள், ஷாம்பூ இந்த மூன்று பொருள் இருந்தால் போதும். ஃப்ரிட்ஜில் எப்போதும் இட்லி மாவு இருக்கும். ஒரு வாரம் புளித்த இட்லி மாவை ஒரு ஜக் அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் கலக்க சீயக்காயும் ஷாம்பூவும் தேவை அல்லவா. சின்ன சின்ன சாம்பிள் பாக்கெட் இப்போது கடைகளில் கிடைக்கிறது. 2 ரூபாய் பாக்கெட். அதில் நாலு பேக்கெட்டை வாங்கிக்கோங்க. 2 சீயக்காய் தூள் பாக்கெட், 2 ஷாம்பூ பாக்கெட். (உங்களுடைய பாத்ரூமில் உப்பு கறைக்கு ஏற்ப இந்த பொருட்களை கூடவோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்).

- Advertisement -

ஜக்கில் எடுத்து வைத்திருக்கும் மாவில் சீயக்காய் தூளையும் ஷாம்பு வையும் போட்டு ஒரு குச்சியை வைத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். மாவு ரொம்பவும் கட்டியாக இருக்கும் பட்சத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கலக்கலாம். இதை எடுத்து சுவற்றில் அப்ளை செய்தால் கீழே ஒழுகாமல் ஓரளவுக்கு டயல்ஸில் ஒட்ட வேண்டும். அந்த அளவுக்கு மாவின் பக்குவம் இருக்க வேண்டும்.

பெயிண்ட் அடிக்கும் பழைய பிரஸ் இருந்தால் அதை இதற்கு நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவில் தொட்டுத்தொட்டு டைல்ஸ் முழுவதும் தடவி விடுங்கள். ஒரு கோட்டிங் போட்டு பத்து நிமிடம் கழித்தால் மாவு நன்றாக காய்ந்து விடும். மீண்டும் அதற்கு மேலே இன்னொரு கோட்டிங் போட்டு நன்றாக காய விடுங்கள். அரை மணி நேரம் கழித்து ஒரு ஸ்டீல் நாரை வைத்து டயல்ஸ் தேய்த்து சுத்தம் செய்தால், சூப்பராக கறை நீங்கிவிடும்.

- Advertisement -

ஸ்டீல் நார் போட்ட பிரஷ் இப்போது கடைகளில் விற்கிறது. நீளமாக பிளாஸ்டிக்கில் குச்சி இருக்கும். அதற்கு முனையில் ஸ்டீல் நார் செட் பண்ணி இருக்கும். கை படாமலேயே, ஸ்டீல் நாரை நீங்கள் அந்த டைல்ஸில் தேய்க்கலாம். அதுபோல ஒரு பிரஷ்சை தேர்ந்தெடுத்து வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி சுத்தம் செய்ய அது பயன்படும்.

இந்த மெத்தடை முயற்சி செய்தால் உப்பு கறைகள் எல்லாம் 80 சதவிகிதம் நீங்கிவிடும். ரொம்பவும் அடர்த்தியாக இருக்கும் உப்பு கரையில் மிச்சம் 20 சதவிகிதம் இருக்கத்தான் செய்யும். 10 நாள் கழித்து அல்லது 15 நாள் கழித்து இதேபோல ஒரு முறை உங்களுடைய பாத்ரூம்மை சுத்தம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஹோட்டலில் கிடைக்கும் மொறு மொறு தோசை வீட்டிலும் செய்ய…

முழுமையாக உப்பு கறை நீங்கிவிடும். மாதத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு நாள் உங்கள் குளியலறையை மேல் சொன்ன முறைப்படி சுத்தம் செய்து வர அடர்த்தியாக உப்பு கறைகள் படியாது. உங்கள் பாத்ரூம் டைல்ஸ் எப்போதும் புத்தம் புதுசு போல பார்ப்பதற்கு அழகாக இருக்கும் எளிமையான இந்த வீட்டு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -