ஹோட்டலில் கிடைக்கும் மொறு மொறு தோசை வீட்டிலும் செய்ய…

lady dosai
- Advertisement -

தென்னிந்தியர்களின் தவிர்க்க முடியாத உணவுகளில் முதலிடத்தை பெற்றது இந்த தோசை தான். தோசையை விரும்பாதவர்கள் யாருமே கிடையாது. ஆனால் இந்த தோசையை வீட்டில் நாம் எப்படி தான் பார்த்து பார்த்து மாவு அரைத்து செய்தாலும் கூட ஹோட்டலில் கிடைப்பது போல அந்த நிறத்துடனும் சுவையுடனும் கிடைப்பதில்லை.

அதற்குக் காரணம் நாம் வீட்டில் மாவு அரைப்பது முதல் தோசையை சுடும் வரையில் செய்யும் சின்ன சின்ன தவறுகள் தான் காரணம். இந்த தவறுகளை சரி செய்து கொண்டாலே ஹோட்டல் ஸ்டைலில் சூப்பரான தோசை சுலபமாக வீட்டில் சுட்டு விடலாம். அது என்னவென்று இந்த வீட்டு குறிப்பு பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

ஹோட்டல் ஸ்டைல் மொறு மொறு தோசை வீட்டிலும் கிடைக்க செய்யக் கூடாத தவறுகள்

தோசை ஊற்றுவதற்கு மாவின் பதம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தோசை சுடும் கல்லும் முக்கியம். நீங்கள் நான் ஸ்டிக் தவாவை பயன்படுத்தி தான் தோசை சுட போகிறீர்கள் என்றால் அதில் எண்ணெய் வெங்காயம் போன்றவற்றை தேய்க்க தேவையில்லை.

இதற்கு மாறாக நான் ஸ்டிக்கில் மாவு ஊற்றிய பிறகு மாவின் மேல் லேசாக எண்ணெய் ஊற்றினால் போதும். இரும்பு தோசை கல்லில் தோசை சுடும் போது தோசை சுடுவதற்கு முன்பாக எண்ணெயில் வெங்காயத்தை தொட்டு நன்றாக தேய்க்க வேண்டும். இது தோசை மொறு மொறுப்பாக சிவந்து வர உதவி புரியும்.

- Advertisement -

கடைகளில் ஊற்றும் தோசை கல்லில் அடிக்கடி தண்ணீர் தெளிப்பதை பார்த்திருப்போம். அதற்கு காரணம் கல் அதிக சூட்டுடன் இருந்தால் தோசை ஊற்ற வராது. அதற்காக கல் சூடே ஏறாமல் இருந்தாலும் தோசை ஊற்ற முடியாது. தோசை கல் எப்போதும் மிதமான தீயில் சூட்டுடன் இருந்தால் தான் தோசை நன்றாக வரும்.

தோசை ஊற்ற அடுத்த முக்கியமான ஒன்று மாவின் தன்மை. மாவை புளிக்க விடுவது மிகவும் அவசியம் அது தான் தோசை சரியான பதத்தில் சரியான ருசியிலும் இருக்கும். அதற்காக மாவை அதிகமாகவும் புளிதாது விடக் கூடாது. இது தோசை கசப்புத்தன்மை ஏற்படுத்தி விடும்.

- Advertisement -

தோசை மாவு சரியான பதத்தில் வர மாவு அரைக்கும் போது குளிர்ந்த தண்ணீரை பயன்படுத்தக் கூடாது. இதனால் மாவு கெட்டியாகவும் தோசை ஊற்றும் போது தோசை கடின தன்மையுடனும் இருக்கும். தோசைக்கு மாவை அரைக்கும் போது சாதாரண தண்ணீரையே ஊற்றி அரைக்கலாம். அதில் தோசை ஊற்றினாலே நன்றாக வரும்.

அதே போல் தோசை சுடும் போது பலர் செய்யும் தவறு இது. மாவை ஊற்றி கல்லில் தேய்க்கும் போது ஒரே சமமான அளவில் தேய்க்க வேண்டும் ஒரு புறம் தடிமனாகவும் ஒரு புறம் மாவு இல்லாமலும் தேய்த்தால் தோசை மொறு மொறு என்று மெலிதாக வராது. தோசை மாவு ஊற்றும் போது எல்லா புறமும் ஒரே சமமாக மாவு இருக்கும்படி உற்ற வேண்டும். அப்போது தான் தோசை சரியான பதத்தில் வெந்து கிடைக்கும்.

அதே போல் மாவை ஊற்றிய பிறகு தான் எண்ணெய்யை மாவின் மீது ஊற்ற வேண்டும். அப்பொழுது தான் மாவு தோசையின் அடிப்புறம் இறங்கி முழுவதுமாக சிவந்து வரும். இந்த தோசை திருப்பி போடாமல் அப்படியே சுருட்டி எடுத்தால் கடைகளில் கிடைக்கும் பேப்பர் ரோஸ்ட் போல வரும்.

இதையும் படிக்கலாமே: மிக்ஸி எளிமையாக சுத்தப்படுத்தும் முறை

தோசை தானே அதை செய்ய இத்தனை அலட்டல் வேண்டாமே என்று கேட்கலாம். இந்த முறையில் நீங்கள் தோசை சமைத்துக் கொடுத்து பாருங்கள் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் ஹோட்டல் பக்கம் கூட போக மாட்டார்கள். சமைப்பதை கொஞ்சம் ரசித்து செய்தால் அனைவரும் ருசித்து சாப்பிடும் வகையில் அருமையாக இருக்கும்.

- Advertisement -