- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval11-10-2024 துர்காஷ்டமி வழிபாடு

11-10-2024 துர்காஷ்டமி வழிபாடு

- Advertisement -

நவராத்திரியின் எட்டாவது நாள் அஷ்டமி திதி வரும். இந்த நாளை துர்காஷ்டமி என்று கொண்டாடுவார்கள். பெரும்பாலும் நம்முடைய தமிழ்நாட்டில் இந்த துர்காஷ்டமி வழிபாடானது அவ்வளவு சிறப்பாக கொண்டாடப்படவது இல்லை. துர்காஷ்டமி வழிபாட்டிற்கு வடமாநிலங்களில் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இந்த வருடத்தின் துர்காஷ்டமி திதியானது, நாளை மறுநாள் 11-10-2024 வெள்ளிக்கிழமை அன்று வரவிருக்கிறது. நவராத்திரி விரதம் 9 நாட்களும் மேற்கொள்ள முடியாது என்பவர்கள் கூட, இந்த துர்காஷ்டமி வழிபாட்டை மேற்கொண்டால் நவராத்திரியில் ஒன்பது நாளும் விரதம் இருந்து வழிபாடு செய்த பலனை பெற முடியும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

நாளை மறுநாள் வரக்கூடிய துர்காஷ்டமி வழிபாட்டை எல்லோரும் மிக மிக சுலபமான முறையில் எப்படி மேற்கொள்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்வோமா.

2024 இந்த வருடம், அக்டோபர் 10, 12:32 pm பிறக்கும் அஷ்டமி திதியானது அக்டோபர் 11, 12:07 pm மணிவரை இருக்கிறது. 10ஆம் தேதி வியாழக்கிழமை பிறக்க கூடிய அஷ்டமி திதி, 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் வரை இருக்கிறது. ஆகவே வெள்ளிக்கிழமை தான் துர்க்கை வழிபாடு செய்ய வேண்டும். இந்த வெள்ளிக்கிழமை நாளில் நாம் எல்லோர் வீட்டிலும் ஆயுத பூஜை வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

துர்காஷ்டமி வழிபாடு 2024

சரி, இந்த நாளில் துர்க்கை அம்மன் வழிபாட்டை எப்படி செய்வது என்று இப்போது பார்த்து விடுவோம். துர்க்கை என்றாலே அவளின் நிறம் சிவப்பு. ஆக துர்க்கை அம்பாளுக்கு சிவப்பு நிற வஸ்திரம், சிவப்பு நிற வளையல், சிவப்பு நிற குங்குமம், சிவப்பு நிறத்தில் இருக்கும் பூ இந்த பொருட்களை எல்லாம் வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதாக இருந்தால், பக்தர்கள் சிவப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு, அம்மனுக்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் வஸ்திரத்தை தானம் கொடுப்பது சிறப்பு. அதேபோல சிவப்பு நிற குங்குமத்தை வாங்கிக் கொண்டு போய் துர்க்கை அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்த குங்குமத்தை நீங்கள் திரும்பவும் பெற்றுக் கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த அர்ச்சனை செய்த குங்குமத்தினை  உங்கள் கையாலே தானம் கொடுத்தால், தீராத கடன் தீரும் என்பதும் நம்பிக்கை. தீராத எதிரி தொல்லை விலகும். தொழில் விருத்தி அடையும்.

- Advertisement -

கோவிலுக்கு செல்ல முடியாது என்பவர்கள் வீட்டிலேயே இருக்கும் அம்மன் படத்தை துர்க்கை அம்மன் ஆக பாவித்து, இந்த அம்மனுக்கு சிவப்பு நிற குங்குமத்தால் அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை உங்கள் வீட்டில் இருக்கும் அக்கம் பக்கத்தினருக்கு தானம் கொடுக்கலாம். முக்கியமாக துர்காஷ்டமி நாளன்று சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. வீட்டிலேயே இந்த வழிபாட்டை செய்பவர்கள் சிகப்பு நிற வஸ்திரத்தை விரித்து அதன் மேலே துர்க்கை அம்மனின் படத்தை வைத்து குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பான பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழிபாட்டின் போது பின் சொல்லக்கூடிய இந்த துர்க்கை அம்மன் தமிழ் பாடலை பாடுவது சிறப்பு வாய்ந்த பலனைத் தரும். அசுரனை வதம் செய்ய துர்க்கையாம்பாள் அவதரித்த நாளை தான் இந்த துர்காஷ்டமி நாளாக நம் கொண்டாடி வருகின்றோம். ஆகவே இந்த நாளில் அம்பாளை அழைத்தால் அவள், நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து உங்கள் வாழ்க்கையில் அசுரனாக உங்களைப் பின்தொடரும் கஷ்டங்கள், கண் திருஷ்டி, ஏவல் பில்லி சூனியம், போன்ற அத்தனை கெட்ட சக்திகளையும் வதம் செய்வாள் இதுதான் இந்த வழிபாட்டிற்கு பின்னால் இருக்கும் நம்பிக்கை.

துர்க்கை அம்மன் பாடல்

ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி..)

இதையும் படிக்கலாமே: 8-10-2024 வளர்பிறை சஷ்டி முருகன் வழிபாடு

துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே அதற்கு ராகு காலம் தான் சிறந்த நேரம். அதிலும் துர்காஷ்டமி நாளில் ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு. வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியில் இருந்து 12:00 மணி வரை ராகுகால நேரம். இந்த நேரத்தில் மேலே சொன்ன விசேஷ பூஜைகளை துர்க்கை அம்மனுக்கு செய்பவர் வாழ்க்கையில் துன்பமில்லை என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்