எதிரி தொல்லை விலக, ஏவல் பில்லி சூனியம் போன்ற பிரச்சனையிலிருந்து விடுபட, கண் திருஷ்டி விலக, அடுத்தவர்கள் உருட்டும் பகடைக்காய்க்கு நம்முடைய வாழ்க்கை ஆட்டம் கண்டு விட்டால், அந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க, எல்லாவற்றிக்கும் தீர்வு காண ஒரே வழிபாடு, மகா பத்ரகாளியம்மன் வழிபாடுதான். காளி தேவியை நினைத்துதான் இந்த பூஜையை செய்யப்போகின்றோம்.
இந்த பூஜையை செய்வதால் எதிரியின் உயிருக்கேதும் ஆபத்து வந்து விடுமோ என்றெல்லாம் பயப்படவே வேண்டாம். உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரி, உங்கள் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார்கள். உங்களை அவர்கள் மறந்து விடுவார்கள். எதிரியின் நினைப்பில் இருந்து உங்களுடைய பெயர் அழிந்துவிடும். அவ்வளவுதான் அப்படி ஒரு அதிசக்தி வாய்ந்த வழிபாட்டை தான் இன்று நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
எதிரி தொல்லை விலக
இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று துவங்கலாம். ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கலாம். அது உங்களுடைய சவுகரியம். வழிபாட்டை துவங்கி அடுத்த 11 நாட்கள் விடாமல் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றது போல நாட்களை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். செம்பருத்திப்பூ சிவப்பு நிற அடுக்குச் செம்பருத்தி பூக்களை வாங்கி உங்கள் கையாலேயே மாலை கோர்க்க வேண்டும். எண்ணிக்கை உங்கள் சவுகரியம்.
11, 21, 51 எத்தனை செம்பருத்தி பூவை வைத்து மாலை கட்டினாலும் சரி. அந்த மாலையை கொண்டு போய் மகாபத்ரகாளி கோவிலில் கொடுத்து, அம்பாளுக்கு சாத்தி உங்களுக்கு இருக்கும் எதிரி பிரச்சனையை அம்பாளிடம் முறையிடுங்கள். கண்ணுக்குத் தெரிந்த எதிரியோ, கண்ணுக்கு தெரியாத எதிரியோ உங்களுடைய பிரச்சனையை அம்மனிடம் சொல்லி, இந்த பிரச்சனையில் இருந்து என்னை காப்பாற்று என்று மனம் உருக வேண்டி இரண்டு நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வைத்து அம்பாளை 11 முறை வளம் வந்தால் போதும்.
உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் 11 நாளில் விலகிவிடும். 11 நாளும் மேல் சொன்ன முறைப்படி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு பக்கத்தில் இதுபோல மகாபத்ரகாளி கோவில் இல்லை என்றால் என்ன செய்வது.
காளி கோவிலில் செய்தால் தான் முழு பலன் கிடைக்கும். இருந்தாலும் வீட்டின் அருகில் மகாபாரதர காளி கோவில் இல்லை என்ன செய்வது. பிரத்யங்கரா, வாராகி, அங்காள பரமேஸ்வரி, இது போல உக்கிரமான அம்மன் தெய்வங்களின் பாதத்தை பிடித்து அவர்களுக்கு இதுபோல “அடுக்கு செம்பருத்தி” பூவால் மாலை கட்டி போட்டு வேண்டுதல் வைத்தால், நிச்சயமாக உங்களுடைய கஷ்டங்கள் விலகும்.
இதையும் படிக்கலாமே: நாளை 23-06-2025 அதிசக்தி வாய்ந்த பிரதோஷ வழிபாடு
வெளியில் சொல்ல முடியாத கஷ்டம், இந்த கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் யாரிடத்திலும் இந்த பிரச்சனையை பொய் சொல்ல முடியவில்லை என்று நிச்சயம் ஏதாவது ஒரு கஷ்டம் சில பேருக்கு இருக்கும் அல்லவா. அப்படிப்பட்டவர்களும் மேல் சொன்ன வழிபாட்டை செய்து பாருங்கள். வெளியில் சொல்ல முடியாத அந்த துன்பத்திற்கு துயரத்துக்கு கூட அம்மா பத்ரகாளி ஒரு தீர்வை நிச்சயம் காட்டிக் கொடுப்பாள் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.