- Advertisement -
Homeஜோதிடம்12 ராசி கோபம்

12 ராசி கோபம்

- Advertisement -

புவியில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் கோபப்படும் குணாதிசியம் உண்டு. கோபம் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறது. சிலர் சில நிமிடங்களிலேயே கோபத்தை மறந்து இயல்பாகி விடுவார்கள். ஆனால் ஒரு சிலரோ வருட கணக்கில் கூட கோபத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வெறுப்பை காண்பிப்பார்கள். அந்த வகையில் 12 ராசிக்காரர்களின் கோபம் எவ்வளவு காலம் நீடிக்க கூடியது? என்னும் ஜோதிடம் சார்ந்த ரகசியத்தை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் அதிகம் கோபப்படக்கூடியவர்கள் அல்ல! இருப்பினும் அவர்களை கோபப்படுத்தி விட்டால், ரெண்டு நாட்கள் ஆவது அவகாசம் எடுத்துக் கொள்வார்கள். இரண்டு நாள் கழித்து தான், அவர்கள் அந்த கோபத்தை மறந்து, மீண்டும் பழைய நிலைக்கு பேசுவார்கள். அதற்குள் அவர்களை நோண்டக்கூடாது.

- Advertisement -

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் கோபத்தை எளிமையாக கையாளுபவர்கள். திடீர் திடீரென கோபப்பட்டாலும், ஒரே நாளில் அதை மறந்து போய் விடுவார்கள். 24 மணி நேரம் தான் இவர்களுடைய கோபத்தின் அளவு இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் கோவக்காரர்களாக இருந்தாலும், பிடித்தவர்களிடம் அரை மணி நேரம் கூட இவர்களால் கோபத்துடன் இருக்க முடியாது. வேறு யாராவது இருந்தால் பேசக்கூட மாட்டார்கள், ஆனால் பிடித்தவர்களிடம் 30 நிமிடத்தில் கோபம் மறந்து பேசுவார்கள்.

- Advertisement -

கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் தான் ரொம்பவும் குரூரமானவர்கள். இவர்களுக்கு கோபம் வந்துவிட்டால் அவ்வளவுதான், பிடித்தவர்களோ, பிடிக்காதவர்களோ வருட கணக்கில் கோபத்தை உள்ளுக்குள்ளையே வைத்துக் கொண்டு காண்பிப்பார்கள். எனினும் இவர்களின் கோபம் நியாயமானதாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சட்டென கோபப்பட மாட்டார்கள். மனதிற்கு பிடித்தவர்கள் இவர்களை நோகடித்து விட்டால், சில நாட்கள் வரை அவர்களால் அதிலிருந்து மீண்டு வர முடியாது தவிப்பார்கள். சில நாட்கள் வரை இவர்களுடைய கோபம், அவர்கள் மீது அப்படியே தான் இருக்கும்.

- Advertisement -

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதக்கணக்கில் கோபப்படுபவர்கள். ஓரிரு மாதங்களுக்கு மேல் இவர்களுடைய கோபம் நீடிக்கும். சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் இவர்கள் கோபப்படுவதில்லை. பெரிதாக பாதிக்கப்பட்டால், அதிலிருந்து மீள, மாத கணக்கை எடுத்துக் கொள்வார்கள்.

துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் சில நிமிடங்களே கோபமுடன் இருப்பார்கள். இவர்களின் கோபம் உப்பு சப்பில்லாதது! சிறு சிறு விஷயங்களுக்கு கூட குழந்தை போல கோபித்துக் கொள்வார்கள், ஆனால் உடனே சிரிக்க வைத்து விட்டால், சிரித்து விடுவார்கள். அவ்வளவு தான் இவர்களின் கோபம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பிடித்தவர்களிடம் உண்மையை எதிர்பார்ப்பவர்கள். பெரிதாக ஏமாற்றப்பட்டு விட்டால், ஐந்து வருடங்கள் வரை அந்த கோபத்தை அப்படியே வைத்துக் கொள்வார்கள். காலம் செல்ல செல்லத்தான் இவர்களின் கோபம் மெல்ல மெல்ல மறையும். விருச்சிக ராசியினரை பிடித்தவர்கள் ஜாக்கிரதியாக இருங்கள்.

தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் 10 லிருந்து 15 நாட்கள் வரை கோபமுடன் இருப்பார்கள் அவ்வளவுதான். பிடித்தவர்களிடம் கோபப்பட்டாலும், அதை வெளியில் காண்பிக்க மாட்டார்கள், உள்ளுக்குள்ளையே வைத்து கஷ்டப்படுவார்கள். ஓரிரு வாரங்களுக்கு பின் அதனை மறந்து விடுவார்கள்.

மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் ஏழு வருடம் வரை பிடித்தவர்களிடம் கோபமாக இருப்பார்களாம். அதிக பாசம் வைத்தவர்கள், தன்னை புரிந்து கொள்ளாத போது, அந்த கோபத்தை அவர்கள் வெகு சுலபமாக மறக்க மாட்டார்கள்.

கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஓரிரு வருடங்கள் வரை கோபத்தை வைத்துக் கொள்வார்கள். அதன் பின் அவர்கள் சுத்தமாக அந்த கோபத்தை மறந்து விட்டு இயல்பாக பேச துவங்கி விடுவார்கள். இவர்களிடம் அமர்ந்து பேசினாலே பிரச்சனைகள் முடியும், விலகி சென்றால் பிரச்சனைகள் நீண்டு கொண்டே செல்லும்.

இதையும் படிக்கலாமே:
நாளை 29-05-2025 ரம்பா திருதியை

மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் 48 நாட்களுக்கு மேல் கோபமாக இருப்பார்கள். மண்டல அவகாசத்தில் கோபப்படுபவர்கள் இவர்கள்! எந்த ஒரு விஷயத்தையும், இவர்களால் சுலபமாக விட்டுக் கொடுக்க முடியாது. ஓரிரு மாதங்கள் சென்றால், பேசி சுமுகமாக ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

சற்று முன்