எந்த ராசிக்காரர்கள் எந்த செடியை வளர்ப்பது யோகம் தெரியுமா? பண மழை பொழிய உங்கள் ராசிக்கு இந்த செடியை வளர்த்துப் பாருங்கள்!

money-plant-astro

எல்லா ராசிக்காரர்களுக்கும் ஒரு அதிர்ஷ்டமான செடி வகை உண்டு என்பது ஜோதிட ரகசியம். செடி வகைகள் மட்டுமல்ல எல்லா விஷயத்திற்கும் ஒவ்வொரு ராசிக்காரர்களும் தனித்தனியான பரிகாரங்களும் அதற்குரிய பலன்களும் உண்டு. அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் எந்த செடியை வளர்த்தால் அதிர்ஷ்டம் வரும்? பண மழை பொழிய உங்கள் ராசிக்கு என்ன செடியை வளர்க்கலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்கள் உங்கள் ராசிக்கு நீங்கள் மிகுந்த இரக்க சுபாவம் உள்ளவராக இருப்பீர்கள். மற்றவர்களுடைய கஷ்டத்தை தங்களுடைய கஷ்டமாக நினைத்து மன வேதனை கொள்வீர்கள். அத்தகைய நீங்கள் உங்களுடைய ராசிக்கு மணிபிளான்ட் செடி வளர்ப்பது அதிர்ஷ்டம் தரும். வீட்டின் கன்னி மூலை பகுதியில் ஊதா நிற பாட்டிலில், மணிபிளான்ட் வளர்த்து பாருங்கள் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் திரும்பும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் உங்கள் ராசிக்கு நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காட்டுவீர்கள். எனக்கு தெரியாது என்பதை விட அதைத் தெரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும் என்கிற முனைப்பு இருக்கும். உங்கள் ராசிக்கு நீங்கள் கற்றாழை செடியை வீட்டின் வடக்குத் திசையில் வைத்து வளர்த்து வந்தால் அதிர்ஷ்ட மழை பொழியும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் உங்கள் ராசிக்கு நீங்கள் எதையும் சரியாக அலசி ஆராயாமல் முடிவு எடுக்க மாட்டீர்கள். இத்தகைய நீங்கள் கறிவேப்பிலை செடியை வீட்டின் மொட்டை மாடியில் சிறிய தொட்டியில் வளர்த்து பாருங்கள்! அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் அடிக்கும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்கள் உங்கள் ராசிக்கு நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமான முடிவை எடுப்பீர்கள். எவரையும் ஆலோசனைக்கு கூட சேர்த்துக் கொள்ள மாட்டீர்கள். உங்களுடைய ராசிக்கு நீங்கள் செவ்வரளி மலர்களை வீட்டிற்கு முன்னால் வளர்த்து வரலாம். நல்ல ஒரு அதிர்ஷ்டம் உண்டாகும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் உங்கள் ராசிக்கு நீங்கள் வெற்றியை நோக்கிய பயணத்தில் எப்பொழுதும் நடை போடுவீர்கள். இலக்கை தவிர மற்ற திசைகளில் கவனத்தை சிதற விடமாட்டீர்கள். உங்கள் ராசிக்கு நீங்கள் ரோஜா செடியை பல வண்ண நிறங்களில் வளர்த்து வந்தால் நல்ல ஒரு அதிர்ஷ்டம் உண்டாகும்.

- Advertisement -

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்கள் உங்கள் ராசிக்கு நீங்கள் மற்றவர்கள் மீது காட்டும் அன்பில் குறை வைப்பதில்லை. நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். உங்கள் ராசிக்கு நீங்கள் நெல்லி மரத்தை வீட்டிற்கு வெளியில் வளர்வது அதிர்ஷ்டம் தரும்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்கள் உங்கள் ராசிக்கு நீங்கள் எல்லோரையும் சமமாக பார்ப்பீர்கள். அன்பை சரிசமமாக பகிர்ந்து கொடுப்பீர்கள். உங்கள் ராசிக்கு நீங்கள் வாசனை மிகுந்த மல்லி செடி, முல்லைச் செடி போன்ற செடிகளை வளர்த்து வந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்கள் உங்கள் ராசிக்கு நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டீர்கள். வந்த சண்டையையும் விடமாட்டீர்கள். உங்கள் ராசிக்கு நீங்கள் செவ்வந்தி மலர் செடியை வீட்டில் வளர்த்து வந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்கள் உங்கள் ராசிக்கு நீங்கள் குறுக்கு வழியில் செல்வதற்கு முயற்சி செய்வீர்கள். நேர்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்தால் உங்களை வெல்ல எவராலும் முடியாது. நீங்கள் உங்களுடைய வீட்டில் கரும்பு, மூங்கில் போன்ற மரங்களை வளர்ப்பது அதிர்ஷ்ட பலனை கொடுக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் உங்கள் ராசிக்கு நீங்கள் கண்முன் நடக்கும் தவறுகளை தட்டி கேட்பவர்களாக இருப்பீர்கள். எப்பொழுதும் நியாயத்தின் பக்கம் நிற்கும் நீங்கள் உங்களுடைய ராசிக்கு வாழை மரத்தை வளர்த்து வந்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்கள் உங்கள் ராசிக்கு நீங்கள் சுயநலத்தை விடுத்து சற்று பொது நலத்தோடு யோசித்தால் உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே வேறு. அதிர்ஷ்ட பலன்களை பெற உங்களுடைய ராசிக்கு நீங்கள் வேப்ப மரத்தை வீட்டின் பின்பகுதியில் வளர்த்து வந்தால் நல்ல ஒரு அதிர்ஷ்டம் உண்டாகும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்கள் உங்களுடைய ராசிக்கு நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்துடன் இருப்பீர்கள். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் துவண்டு போகாமல் மீண்டும் எழுந்து நிற்பீர்கள். உங்கள் ராசிக்கு நீங்கள் மூலிகை செடிகளை வளர்த்து வருவது அதிர்ஷ்டம் தரும். குறிப்பாக குப்பைமேனி, தூதுவளை, கற்பூர வள்ளி போன்ற செடி வகைகளை வளர்ப்பது யோகம் உண்டாகும்.