12 ராசிக்காரர்களும் இந்த மோதிரத்தை இந்த விரலில் அணிந்து கொண்டால் பேரதிர்ஷ்டம் வருமாம்!

kuberan-ring

மோதிரம் என்பது அதிர்ஷ்டம் தரக்கூடிய ஒன்று தான். மோதிரங்களில் பதிக்கப்படும் கற்களுக்கும் அதிர்ஷ்டம் உண்டு. ஆனால் அதை சரியான நபர்கள் தங்களுடைய ராசிக்கு ஏற்ப உண்மையான கல்லை அணிந்து கொள்வதும் அவசியமாகும். ராசி, நட்சத்திரம் தெரியாமல் சில உலோகங்களை, சில விரல்களில் அணிந்து கொள்வதால் நம்மிடம் துரதிர்ஷ்டம் வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு என்பதால் இந்த விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. அந்த வரிசையில் எந்த ராசிக்காரர்கள்? எந்த விரலில் எந்த மோதிரத்தை அணிவது அதிர்ஷ்டம் தரும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

silver-ring1

இது ஜோதிடப்படி உங்கள் ராசிக்கு அணிய வேண்டிய அதிர்ஷ்டக்கற்கள் கிடையாது! சாதாரண உலோகத்தை நம் ராசிக்கு எந்த விரலில் அணிந்து கொண்டால் அதிர்ஷ்டம் வரும் என்பது தான் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு அதிர்ஷ்ட கற்களில் நீல நிற கற்களை சனி தோஷம் இல்லாதவர்கள் அணிந்து கொண்டால் அவர்களுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படும். அதற்குரிய ராசிக்கு அணிந்து கொண்டால் தான் அதன் பலனும் ஏற்படும்.

இன்று அதிகரித்து வரும் போலி தன்மையால் எந்த கல்லையாவது அணிந்து கொண்டு அவதிப்படுவதை தவிர்ப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு இந்த மோதிரத்தை இந்த விரலில் அணிந்து கொண்டு பாருங்கள் நிச்சயம் அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்டும். நம்முடைய ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நமக்கு வர இருக்கும் நல்ல விஷயங்களை தடுத்து நிறுத்தம். ஆனால் இவ்வாறு நாம் மோதிரம் அணிந்து கொண்டால் நமக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் நமக்கு சரியான நேரத்தில் வந்து சேரும்.

silver-ring

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்கள் உங்கள் கையில் மோதிர விரலில் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொண்டு பாருங்கள் அதில் சாதாரண வெள்ளை கற்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் போதும். மேஷ ராசியில் பிறந்த பெண்கள் இதனை செய்வது இன்னும் கூடுதல் பலன்களை தரும்.

- Advertisement -

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் உங்கள் கையில் நடு விரலில் தங்க மோதிரத்தை அணிந்து பாருங்கள். பொதுவாக மோதிர விரலில் அணிவது தான் வழக்கம் ஆனால் நடுவிரலில் நீங்கள் இதை அணிந்து கொண்டால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். தங்கத்தில் பூக்கள் பதிக்கப்பட்ட மோதிரங்கள் சிறப்பு மிகுந்தவையாக உங்களுக்கு இருக்கும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் உங்கள் கையில் மோதிர விரலில் பிளாட்டினம் கொண்ட மோதிரம் அணிவது அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும். மெல்லிய அளவில் பிளாட்டினம் மோதிரம் அணிந்து கொண்டு பாருங்கள்! அதிர்ஷ்ட மழை உங்களையும் வந்தடையும். அல்லது வெள்ளியாலான யானை முடி மோதிரம் அணிந்து கொள்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்கள் உங்கள் கையில் ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தை சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டு அணிந்து பாருங்கள் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். பெண்களாக இருந்தால் வலது கை ஆள்காட்டி விரலில் இவற்றை அணிவது கூடுதல் பலன்களை கொடுக்கும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் உங்கள் கையில் மோதிர விரலில் தங்கத்தால் சுவாமி படங்கள் பதிக்கப்பட்ட உருவங்களை கொண்ட மோதிரத்தை அணிவது அதிர்ஷ்டம் தரும். எந்த சுவாமி படங்களாக இருந்தாலும் சரி அல்லது ஸ்வஸ்திக், ஓம் போன்ற சின்னங்கள் பதிக்கப்பட்ட படங்களாக இருந்தாலும் சரி அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும்.

கன்னி:
kanni
கன்னி ராசிக்காரர்கள் உங்கள் கையில் மோதிர விரல் மற்றும் நடுவிரலில் முறையே தங்கம், வெள்ளி மோதிரங்களை அணிந்து கொண்டால் சிறப்பான பலன்களை தரும். அதில் எந்த நிற சாதாரண கற்களையும் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்கள் உங்கள் கையில் வலது கை மோதிர விரலில் தங்க மோதிரத்தையும், இடது கை ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தையும் எப்பொழுதும் போட்டுக் கொண்டே இருங்கள் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்கள் உங்கள் கையில் இடது கை மோதிர விரலில் தங்கம் அல்லது வெள்ளியால் ஆன மரம், மரம் சார்ந்த படங்களை பதித்த மோதிரத்தை அணிந்து கொள்வது பேரதிர்ஷ்டத்தை உண்டாக்கும். அல்லது செம்பால் ஆன யானை முடி மோதிரம் அணிந்து கொள்வது சிறப்பான பலன்களை தரும்.

தனுசு:
dhanusu
தனுசு ராசிக்காரர்கள் உங்கள் ராசிக்கு பஞ்சலோக மோதிரத்தை எந்த விரலில் அணிந்து கொண்டாலும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். சற்று கனமாக அணிவதே நல்லது. பஞ்சலோக மோதிரம் போகப் போக உங்களுக்கு தங்க நிறத்தில் மாறும். அப்படி மாற மாற உங்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வரும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் உங்களுடைய ராசிக்கு நீங்கள் தாமிர மோதிரத்தை அணிந்து கொள்வது சிறப்பான பலன்களை கொடுக்கும். அல்லது சாதாரண பச்சை நிற கல் பதித்த வெள்ளி மோதிரத்தை இடது கை ஆள்காட்டி விரலில் அணிந்து கொள்ள அதிர்ஷ்டம் தரும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்கள் உங்களுடைய ராசிக்கு பஞ்சலோகம் மோதிரம் அணிந்து கொள்வது சிறப்பு. பஞ்ச லோகங்கள் கொண்ட மோதிரம் விலையும் குறைவாக தான் இருக்கும். அதனை உங்களுடைய இடது கை அல்லது வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தை தரும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்கள் உங்களுடைய ராசிக்கு பிளாட்டினம் மோதிரம் அணிந்து கொள்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். இடது கை மோதிர விரலில் யானை முடி மோதிரம் அணிந்து கொள்வதும் அதிர்ஷ்டம் தரும் சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.