ஜோதிடம் : 12 ராசியினரும் இந்த ஆண்டு பணம், புகழ் ஈட்டுவதற்கான பலன்கள்

12-rasi

2019 ஆம் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகி விட்டது. ஆண்டின் தொடக்க நாள் முதல் இறுதி நாள் வரை அனைவருமே கடுமையாக உழைக்கின்றனர். இப்படி கடுமையாக உழைத்து செல்வம், புகழ் ஈட்டுவதே அனைவரின் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு எஞ்சியிருக்கும் மாத காலங்களில் 12 ராசியினருக்கும் பொருள், புகழ் ஈட்டுவதற்கான பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

Mesham Rasi

மேஷ ராசியினருக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வரும் காலம் அனைத்து விடயங்களையும் செயல்படுத்துவதற்கு ஏற்ற காலமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்கான திட்டங்களில் கவனமுடன் இருந்து, கடுமையாக உழைத்தால் இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்து பொருள், புகழ் போன்றவை கிடைக்கும்.

ரிஷபம்:

Rishabam Rasi

- Advertisement -

ரிஷப ராசியினருக்கு இந்த ஆண்டு சில மாதங்கள் உங்கள் ராசிக்குரிய கிரகமான சுக்கிரன் சிறப்பான பலன்களை தர இயலாத நிலையில் இருக்கிறது. எனினும் அனைத்திலும் உங்களுக்கு இருக்கும் திட சித்தம் மற்றும் கடுமையான முயற்சிக்கும் குணம் காரணமாக உங்களுக்கு பொருள், புகழ், செல்வாக்கு போன்றவை ஏற்படுவதில் தடையேதும் இருக்காது.

மிதுனம்:
midhunam

மிதுன ராசியினருக்கு பொருளாதாரத்திற்கு காரகனான இருக்கும் சுக்கிரன் கிரகத்தின் பாதகமான அமைப்பால் நீங்கள் செய்யும் பணிகளில் உங்களுக்கு ஒரு விரக்தியான மனநிலையை கொடுக்க கூடும். நீங்கள் செய்கிற தற்போதையை வேலையில் திருப்தியற்று இருந்தால், தாராளமாக நீங்கள் உங்கள் மனதிற்கு பிடித்த வேறு வேலை அல்லது தொழிலுக்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நிச்சய வெற்றி உண்டாகும்.

கடகம்:

Kadagam Rasi

கடக ராசியினருக்கு இந்த ஆண்டின் தொடக்க மாதங்களில் சற்று பொருளாதார நெருக்கடியான நிலை உண்டாக வாய்ப்புகள் அதிகமாகிறது. எனினும் ஜூலை மாதத்திற்கு பின்னான காலங்களில் தாராள தன வரவுகள் இருக்கும். உங்களின் பலவீனங்கள் என்ன என்பதை கண்டறிந்து தொழில், வேலைகளில் கவனம் செலுத்துவதால் மிகுந்த வெற்றிகளையும், புகழையும் பெறலாம்.

சிம்மம்:
simmam

சிம்ம ராசியினருக்கு இந்த ஆண்டு முழுவதும் பாதகங்கள் அவ்வளவாக ஏற்படாவிட்டாலும், உடல் மற்றும் மனம் உற்சாகமில்லாத நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு எப்போதும் பிறரை உற்சாகமடையச் செய்யும் சக்தி உண்டு. எனவே முதலில் உங்களை சுறுசுறுப்பாகவும்,உற்சாகமிகுந்தவராகவும் மாற்றிக்கொள்வதால் நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.

கன்னி:
Kanni Rasi

கன்னி ராசியினருக்கு இந்த ஆண்டு குரு பகவானின் அருளாற்றல் கிடைக்க பெறுவாதால், உங்களுக்கு இந்த ஆண்டின் இறுதி காலம் வரை மிகப்பெரும் அளவிலான பொருளாதார லாபங்கள் கிடைக்காவிட்டாலும் தினந்தோறும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு தனவரவுகள் இருக்கும். புதிய வாய்ப்புகள் ஆண்டின் இறுதி காலத்தில் கிடைக்கப்பெறும்.

துலாம்:

Thulam Rasi

துலாம் ராசியினருக்கு இந்த ஆண்டு அரசாங்க ரீதியான விடயங்கள் தடைகள், தாமதங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தாலும், அனைவரும் சேர்ந்து எங்கேனும் இன்ப சுற்றுலா செல்வதால் குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும். உயராதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறும் வகையில் பணிகளை செய்வதால் ஊதிய உயர்வுகள் கிடைக்கப்பெறலாம்.

விருச்சிகம்:

virichigam

விருச்சிக ராசியினருக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருப்பதால் நீங்கள் செய்யும் வேலை, தொழில்களில் மிக அருமையாகவே செயல்புரிவீர்கள். உங்கள் வேலை, தொழில் நுணுக்கங்களை பிறருக்கு கற்று தருவதால் அவர்களின் வாழ்க்கை தாரத்தை மேம்படுத்துவதோடு, உங்களுக்கு சமூகத்தில் மரியாதையும், செல்வமும், புகழும் உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசியினருக்கு இந்த ஆண்டின் தொடக்க மாத காலங்களில் குரு பகவானின் வக்கிர கதி காரணமாக தேவையற்ற தேவையற்ற அலைச்சல்களும், பணிசுமைகளும் அதிகரிக்கும். எனினும் ஆண்டின் பிற்பகுதியில் உங்களின் திறமையை உலகிற்கு நிரூபிப்பதற்கான பல வாய்ப்புகள் தேடி வரும் அதை முறையாக பயன்படுத்திக்கொள்வதால் உங்கள் பணம், புகழ் போன்றவை உண்டாகும்.

மகரம்:

Magaram rasi

மகர ராசியினருக்கு இந்த ஆண்டு சனி பகவானின் பார்வை இருப்பதால் எடுத்தவுடன் பெரிய அளவிலான புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்கான அடிப்படை விடயங்களை நன்கு கற்றுக்கொண்டு ஆண்டின் இறுதி மாதங்களில் உங்களின் புது திட்டங்களை செயல்படுத்தினால் உங்களுக்கு வெற்றி, புகழ் நிச்சயம் கிடைக்கும்.

கும்பம்:

Kumbam Rasi

கும்ப ராசியினருக்கு இந்த ஆண்டு சில கிரகங்கங்களின் பாதகமான அமைப்புகளால் ஆண்டு முழுவதுமே பொருளாதார விடயத்தில் ஏற்ற இறக்கமான சூழலே நிலவும் என்றாலும், எதிர்பாராத திடீர் தனவரவு. ஆச்சர்யமான பரிசுகள் என உங்கள் பொருளாதார தேவைகள் பூர்த்தியாவதோடு, மன திருப்தியும் உண்டாகும் நிலை ஏற்படும்.

மீனம்:

meenam

மீனம் ராசியினருக்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏற்ற காலமாக இருக்கிறது. நீங்கள் ஈடுபடும் காரியங்கள் அனைத்துமே வெற்றி பெறாவிட்டாலும் கூட பெரிய மனிதர்களின் நட்பு, புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் பொருளீட்டுவதற்கான புதிய வாய்ப்புகளை பெறும் சிறப்பான காலமாக ஆண்டு முழுவதும் இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
சூரிய பகவான் பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi palan this year in Tamil. It is also called as 12 Rasi in Tamil or 12 Rasi palan in Tamil or 12 rasigal in Tamil.