12 ராசியினரும் அதிக நன்மைகள் பெறுவதற்கான பரிகாரங்கள்

astrology

ஜோதிடத்தில் மொத்தம் மேஷம் முதல் மீனம் வரை மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. இந்த பன்னிரண்டு ராசியினரும் தங்களின் வாழ்நாளில் நற்பலன்களை அதிகமாகவும், தோஷங்கள் போன்றவை ஏற்படாமல் இருப்பதற்கும் ஜோதிட சாஸ்திர நிபுணர்களால் சில எளிய பரிகார முறைகள் கூறப்பட்டுள்ளன. அப்பரிகாரங்கள் என்னென்ன எனபதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

Mesham Rasi

வலிமை வாய்ந்த உடலும் மனமும் கொண்ட மேஷ ராசியினர் தங்களின் வாழ்வில் பாதகமான பலன்கள் ஏதும் ஏற்படாமல், நன்மைகள் அதிகம் நடக்க விரும்பினால் தங்களின் வீடுகளில் வாசம் மிகுந்த ரோஜா செடியை தவிர்த்து முற்களை கொண்டிருக்கும் எலுமிச்சம், நார்த்தங்காய் போன்ற செடிகளை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்

Rishabam Rasi

- Advertisement -

எப்படிப்பட்ட கஷ்டங்களையும் தாங்கும் மனபலம் கொண்ட ரிஷப ராசியினர் தங்களின் வாழ்நாளில் தோஷங்கள் ஏற்படாமல் இருக்கவும், நற்பலன்கள் அதிகம் பெறவும் பட்டு, நைலான், பாலிஸ்டர் போன்ற துணிகளால் ஆன ஆடைகளை தினந்தோறும் உடுத்தி வருவதால் நல்ல பலன்கள் ஏற்படும்.

மிதுனம்

midhunam

மிகுந்த தந்திரங்களை அறிந்து வைத்திருக்கும் மிதுன ராசியினர் தங்களின் வாழ்வில் அதிக நன்மைகள் பெறவும், பாதக பழங்கள் தோஷங்கள் போன்றவை ஏற்படாமல் இருக்க ஒரு பச்சை நிற பிளாஸ்டிக் பாட்டிலில் கங்கை நீரை ஊற்றி, நன்றாக மூடி, ஒரு காலி மனை அல்லது வயலில் நெருப்பு மூட்டி, அந்நெருப்பில் அந்த புட்டியை போட்டுவிடுவதால் உங்களை இதுவரை பீடித்த தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

கடகம்

Kadagam Rasi

மனதிற்கு காரகனான சந்திர பகவானை அதிபதியாக கொண்ட கடக ராசியினர் தங்களின் வாழ்நாளில் எப்போதும் நற்பலன்களை அதிகம் பெறுவதற்கு ஒரு பௌர்ணமி தினத்தில் உங்கள் தாயாரிடமிருந்து ஒரு வெள்ளி நாணயம், சிறிது பச்சரிசி ஆகிய இரண்டையும் ஒரு வெள்ளை துணியில் முடிந்து வாங்கி, உங்களின் பணம் வைக்கும் பீரோவில் வைத்து கொள்வது பொருளாதார அதிர்ஷ்டங்களை உண்டாக்கும்.

சிம்மம்

simmam

யாருக்காகவும், எதற்காகவும் அஞ்சாமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் சிம்ம ராசியினர் தங்களின் வாழ்வில் தோஷங்கள் ஏற்படாமல் இருக்கவும், நற்பலன்கள் அதிகம் கிடைக்கவும் உங்கள் பொருளாதார வசதிக்கேற்ப கோவில்கள் மற்றும் ஊர் திருவிழாக்காலங்களில் அன்னதானத்திற்கான பணம் அல்லது அரிசி, காய்கறி போன்றவற்றை தானமாக வழங்கி வருவது நல்லது.

கன்னி

Kanni Rasi

கன்னி ராசியினர் தங்களின் வாழ்நாளில் என்றென்றும் நன்மைகளை பெறுவதற்கு புத்தம் புதிய ஆடைகளை அணியும் முன்பு அவற்றின் மீது சிறிது கங்கா ஜல தீர்த்தம் தெளித்து, குலதெய்வத்தை வேண்டி பின்பு அந்த ஆடைகளை அணிவதால் என்றென்றும் இந்த ராசியினருக்கு செல்வ வளங்களுக்கு குறைவு ஏற்படாது.

துலாம்

Thulam Rasi

இசைக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்ட துலாம் ராசியினர் தங்களின் வாழ்வில் எப்போதும் அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு கொண்டிருப்பதற்கு, உங்கள் குடும்பத்தை சார்ந்த பெண்கள் வீட்டிற்கு வெளியில் செல்லும் போது எப்போதும் செருப்பு அணிந்து செல்லுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அவர்கள் இப்படி செய்வதால் உங்களுக்கு மிகுந்த நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்

Virichigam Rasi

எதையும் நேர்பட பேசும் குணம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் வாழ்நாளில் மிகுந்த லாபங்களை பெறவும், தோஷங்கள் நீங்கவும் சிகப்பு, இளஞ்சிவப்பு போன்ற நிறங்களாலான ஆடைகள், கைகுட்டைகள், டை, காலுறைகள் போன்றவற்றை அணிந்து செல்வதால் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும்.

தனுசு

Dhanusu Rasi

தானறிந்ததை பிறருக்கு தயங்காமல் கற்று தரும் மனம் கொண்ட தனுசு ராசியினர் தங்களின் வாழ்நாளில் எப்போதும் நன்மைகளை பெற தங்களின் வீடுகளுக்கு முன்பு மஞ்சள் நிறங்களில் பூக்கள் பூக்கும் செடிகளை வளர்த்து வந்தால் உங்கள் வீட்டில் நேர்மறையான சக்திகள் எப்போதும் இருப்பதற்கு உதவி புரியும். பொருள் சார்ந்த உயர்வுகளும் இருக்கும்.

மகரம்

Magaram rasi

பிறருக்காகவும், நியாயத்திற்காகவும் குரல் கொடும் மகர ராசியினர் தங்களின் வாழ்நாளில் எப்போதும் நண்மைகளை பெறுவதற்கும், துரதிர்ஷ்டங்களை நீக்குவதற்கும் தங்களின் 40 வயதிற்கு மேற்பட்ட காலங்களில் சொந்த வீடு கட்டி அதில் குடியிருப்பது, மிகுந்த அதிர்ஷ்டங்களை கொடுக்கும். 40 வயதிற்கு முன்பே சொந்த வீடு கட்டி குடியேறினால் பாதகம் ஏதும் இல்லையென்றாலும் அதிர்ஷ்டங்கள் ஏற்படாமல் போகலாம்.

கும்பம்

Kumbam Rasi

எதையும் பொறுமையாக செய்யும் தன்மை கொண்ட கும்ப ராசிக்காரர்கள் தங்களின் வாழ்நாளில் நற்பலன்கள் அதிகம் ஏற்படவும், தோஷங்கள் ஏதும் பாதிக்காமல் இருப்பதற்கும் வீட்டின் மேல்பகுதி அல்லது மொட்டைமாடியில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களையோ அது சார்ந்த எண்ணெய் பொருட்களையோ வைக்க கூடாது.

மீனம்

Meenam Rasi

ஆன்மீகத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர்களும், பிறருக்கு வாழ்க்கை நெறிகளை போதிப்பவர்களுமான மீன ராசியினர் தங்களின் வாழ்நாளில் எப்போதும் நன்மைகளை பெறவும், தோஷங்களை போக்கவும் தங்கள் வசிக்கும் வீடுகளுக்கு முன்பு கழிவு நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்வதால், வீட்டில் நேர்மறையான சக்திகள் நிரந்தரமாக இருக்க செய்து உங்களுக்கு நன்மைகள் பலவற்றை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
கண் துடிக்கும் பலன்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi pariharam in Tamil.