உங்கள் கண் எப்படி துடித்தால் என்ன பலன் தெரியுமா ?

kanthudipu

எதிர்காலத்தில் நடக்கப்போவதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மக்கள் அனைவருக்குமே உண்டு. ஜோதிட கலையில் கைரேகை சாஸ்த்திரம், எண்கணித சாஸ்திரம், ஜாதகத்தை கொண்டு பலன்கள் கூறுவது போன்ற அனைத்துமே வரும்காலத்தில் நமது வாழ்க்கையில் ஏற்படப்போகிற நிகழ்வுகளை குறித்து ஓரளவு தெரிந்து கொள்ள உதவுகின்ற கலைகளாகும். நமது உடலில் சில பாகங்களில் திடீரென்று வேகமான ஒரு துடிப்பு ஏற்படும். உடலின் பல பாகங்களில் ஏற்படும் இத்தகைய துடிப்புகள் நமக்கு ஏற்படவிருக்கும் நன்மை, தீமைகளை பற்றி கூறும் அறிகுறிகளாக பெரும்பாலான மக்களால் கருதப்படுகிறது. அப்படி நமது முகத்தில் முக்கிய உறுப்பாக இருக்கும் “கண்கள்” சார்ந்த பகுதிகளில் ஏற்படும் துடிப்புகள் பற்றியும் அதற்கான பலன்களை பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

eyes 1

கண் துடிக்கும் பலன்

“கண்துடித்தல்” என்பது நமது உடலின் கண்கள் இருக்கும் பகுதிகளில் சுற்றியிருக்கும் நரம்புகள், நாளங்களில் சில சமயம் அதிக வேகம் மற்றும் அழுத்தத்துடன் ரத்தம் பாய்கிற போது கண்களை சார்ந்த பகுதிகளில் வேகமான துடிப்பு ஏற்படுவதை நாம் உணர முடியும். இது உடல் சார்ந்த ஒரு விடயமாக இருந்தாலும், கண்துடித்தல் ஏற்படுவதற்கு நமக்கு ஏற்படப்போகும் நன்மை மற்றும் தீமைகளை முன்னறிவிக்கும் ஒரு அறிகுறியாக பழங்காலம் முதலே கருதப்பட்டு வருகிறது. “கலித்தொகை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம்” போன்ற புகழ் தமிழ் இலக்கியங்களிலும் கண்துடித்தல் உண்டாவதால் ஏற்படும் பலன்கள் குறித்து கூறப்படுகின்ற வரிகள் இருக்கின்றன.

கண்ககளை காக்கும் கண் இமைகள், புருவங்கள், ஒட்டுமொத்த கண்களை சார்ந்த பகுதிகள் ஆகிய ஒவ்வொன்றும் துடிப்பதற்கேற்ப ஒவ்வொரு பலன்கள் கூறப்படுகின்றன. ஆண்களுக்கு வலது கண்பகுதியில் துடிப்பு ஏற்பட்டாலும், பெண்களுக்கு இடது கண்பகுதியில் துடிப்பு ஏற்பட்டதால் அவை நற்பலன்கள் ஏற்படபோவதற்கான அறிகுறி எனவும், அதுவே ஆண்களுக்கு இடது கண்பகுதியிலும், பெண்களுக்கு வலது கண் பகுதியிலும் துடிப்பு ஏற்பட்டால் கெடுதலான பலன்கள் ஏற்படுவதற்கான அறிகுறி என ஜோதிட சாத்திரத்தில் ஒரு பிரிவான, உடல்பகுதிகளில் ஏற்படும் துடிப்பை வைத்து பலன்கள் கூறும் “துடிசாஸ்திரநூல்” கூறுகிறது.

eye

ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ், பெருமை ஏற்படும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் சீக்கிரத்தில் தீரும். வலது கண்ணின் கீழ் சதைப்பகுதி துடித்தால் செல்வமும், புகழும் உண்டாகும். இடது புருவம் துடித்தால் வம்பு, வழக்குகள் ஏற்படலாம். பெண்களுக்கு இடது கண்பகுதி முழுதும் துடித்தால் செல்வம், புகழ் உண்டாகும். இடது கண்ணின் மேல் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும். வலது கண்ணின் கீழ் இமை துடித்தால் கணவருக்கு உடல்பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே நேரத்தில், அவர்களின் இரண்டு கண்களின் புருவங்கள் சேர்ந்து துடித்தால் அவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
எந்த ராசிக்காரர் எதை செய்தால் அதிர்ஷ்டம் பெருகும் தெரியுமா

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Eye blinking palan in Tamil. It is also called as Kan thudippu palangal in Tamil or Kan thudikkum karanam. Idathu kan thudikkum palan,  Valathu kan thudikkum palan in Tamil is here. valathu kan thudithal or idathu kan thudithal patri arivom.