12 ராசிக்காரர்களும் நன்மைகளை பெற கடைபிடிக்க வேண்டிய பரிகாரங்கள் என்ன தெரியுமா?

astrology

நம் எல்லோரோது வாழ்விலும் நன்மைகள் அதிகரித்து, தீமைகள் முற்றிலும் நீங்கவே விரும்புவோம். பண்டைய ஜோதிட சாத்திர அறிஞர்கள் மற்றும் ஞானிகள் மக்களின் வாழ்வில் நற்பலன்கள் அதிகம் ஏற்பட ஜாதகத்தில் இருக்கும் “12” ராசிகளுக்கும் ஏற்ற பரிகாரங்கள், வழிபாட்டு முறைகளை கூறியுள்ளனர். அவை என்ன என்பதை குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

மேஷம்

Mesham Rasi

மேஷ ராசியினர் தங்களின் வாழ்வில் என்றென்றும் நற்பலன்களை பெறுவதற்கு தங்களின் உடன்பிறந்தவர்களுக்கு பொருளாதார ரீதியிலோ அல்லது வேறு ஏதாவது வழியிலோ உதவுவது சிறந்த பரிகாரமாக இருக்கும். மேஷம் ராசியின் அதிபதியான செவ்வாய் சகோதர உறவுக்கு காரகனாகிறார். எனவே உடன் பிறந்தவர்களுக்கு செய்யும் உதவி செவ்வாய் பகவானின் ஆசிகளை பெற்று தரும்.

ரிஷபம்

Rishabam Rasi

- Advertisement -

சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த ரிஷப ராசிக்காரரரர்கள் தங்களின் வாழ்வில் எப்போதும் நற்பலன்கள் ஏற்படுமாறு செய்வதற்கு வெள்ளிக்கிழமைகள் தோறும் ஏழு வெள்ளை நிற பூக்களை கொண்டு வந்து, ஓடும் ஆற்று நீரில் நின்றவாறு “ஓம் சுக்ராயே நமஹ்” எனும் மந்திரத்தை 6 முறை துதித்து பின்பு அப்பூக்களை ஆற்று நீரில் விடவேண்டும்.

மிதுனம்

midhunam

சிறந்த சமயோசித சிந்தனை கொண்ட மிதுன ராசிக்காரர்கள் ஒரு அமாவாசை தினத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு, அன்றிரவு அக்கோவிலிலேயே தங்கி, மறுநாள் அங்கிருக்கும் யாசகர்களுக்கு அன்னதானம் அளித்தால் உங்களின் பாவதோஷங்கள் நீங்கி, உங்கள் வாழ்வில் அதிகளவு நன்மைகள் ஏற்பட தொடங்கும்.

கடகம்

Kadagam Rasi

சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் பிறந்த ராசியினர் தங்களின் வாழ்நாளில் எப்போதும் நன்மைகள் அதிகம் ஏற்பட்டுவதற்கு, இளம் பச்சை நிறம் மற்றும் வெள்ளை நிற ஆடைகள் மற்றும் கைகுட்டைகளை பயன்படுத்தி வருவது உங்களுக்கு ஏற்படவிருக்கும் பாதகங்களை நீக்கி உங்களுக்கு நன்மைகள் அதிகம் ஏற்பட செய்யும்.

சிம்மம்

simmam

சூரியனின் சொந்த வீடான சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தங்களின் வாழ்வில் மிகுந்த நன்மைகள் ஏற்பட ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை 7 ஆம் நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் உங்களின் வாழ்வில் பல நன்மைகள் ஏற்பட அருள் புரிவார் சூரிய பகவான்.

கன்னி

Kanni Rasi

கன்னி ராசிக்கார்கள் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்தை பொருத்தும் அவர்களுக்கு ஏற்படும் நற்பலன்கள் தன்மை மாறுபடுகிறது. இந்த ராசிக்காரர்கள் அதிகம் நெரிசலான குடியிருப்புகளில் வசிப்பதை விட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு சற்று அருகில் இருக்கும் குடியிருப்பில் வசிப்பது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

துலாம்

Thulam Rasi

சுகங்கள் பலவற்றை அனுபவிக்கும் யோகம் கொண்ட துலாம் ராசிக்கார்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் நற்பலன்களை பெருவதற்கு வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற கன்று ஈன்ற பசுமாட்டிற்கு அகத்தி கீரை, பழங்கள் போன்றவற்றை உணவாக கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

Virichigam Rasi

செவ்வாய் பகவானின் அதிகம் நிறைந்த விருச்சிக ராசியினர் தங்களின் வாழ்வில் எப்போதும் நல்ல பலன்களை தொடர்ந்து பெறுவதற்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ கட்டாயம் தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று படையலிட்டு வழிபட வேண்டும்.

தனுசு

Dhanusu Rasi

தனுசு ராசியில் பிறந்தவர்கள் தங்களின் வாழ்வில் எப்போதும் நல்ல பலன்களை கிடைக்க பெறுவதற்கு வியாழக்கிழமைகள் தோரும் குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள், இனிப்புகள் போன்றவற்றை நைவேத்தியமாக வைத்து, நெய் தீபமேற்றி வழிபட்டு வர வாழ்வில் எப்போதும் நல்ல விடயங்கள் அதிகம் ஏற்பட அருள்புரிவார் குரு பகவான்.

மகரம்

Magaram rasi

செவ்வாய் பகவான் உச்சமடையும் மகர ராசிக்காரர்கள் தங்களின் வாழ்நாளில் எப்போதும் அதிர்ஷ்டத்தை தொடர்ந்து பெறுவதற்கு செவ்வாய் கிழமைகளில் முருக பெருமானையும், சனி ஆஞ்சநேயரையும் வழிபட்டு வந்தால் இவர்களின் வாழ்வில் நற்பலன்கள் அதிகம் ஏற்படுவதை காணலாம்.

கும்பம்

Kumbam Rasi

சனிபகவானுக்குரிய கும்ப ராசியில் பிறந்த ஜாதகர்கள் தங்களின் வாழ்நாளில் நல்லபலன்கள் தொடர்ந்து கிடைக்க பெறுவதற்கு சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எண்ணெய் தீபமேற்றி வழிபட்ட பின்பு, காகங்களுக்கு காலையில் உணவை வாய்த்த பின்பே, காலை உணவை சாப்பிட வேண்டும்.

மீனம்

Meenam Rasi

மீன ராசியினர் தங்களின் வாழ்வில் எப்போதும் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படுவதற்கு ஜீவ சமாதியடைந்த ஏதேனும் சித்தர்கள் கோவிலுக்கு பௌர்ணமி தினங்களில் சென்று வழிபட்டு வருவது மீன ராசியினரின் வாழ்வில் பல நாள் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
எந்த ராசிக்காரர் எதை செய்தால் அதிர்ஷ்டம் பெருகும் தெரியுமா

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English review:
Here we have Rasi pariharam in Tamil for 12 Rasi. Nanmaigal pera nalladhu nadakka pariharam in Tamil.