எந்த ராசிக்காரர் எதை செய்தால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா ?

Astrology

வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நமது வாழ்வில் அனைத்திலும் நல்ல முன்னேற்றங்களையும், அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு நாம் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் பெறலாம். இங்கு 12 ராசியினருக்கும் அவ்வாறான பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மேஷம்

Mesham Rasi

எதிலும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தும் மேஷ ராசியினர் தங்களின் வாழ்க்கையில் பல நல்ல முன்னேற்றங்களையும், அதிர்ஷ்டங்களை பெறுவதர்குக்கு தங்களின் வலது கரத்தில் பின்னமிலாத, டிசைன் இல்லாத வெள்ளியினால் ஆனா காப்பை அணிந்து கொள்ள வேண்டும்.

ரிஷபம்

Rishabam Rasi

- Advertisement -

அனைத்து இன்பங்களையும் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் ரிஷப ராசியினர் தங்களின் வாழ்வில் முன்னேற்றங்களையும் அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு யாரேனும் ஒரு ஏழைக்கு பால் கறக்கும் பசுமாட்டை தானமளிப்பது சிறந்த பரிகாரமாகும்.

தமிழ் பழமொழிகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மிதுனம்

midhunam

சிந்தித்து செயல்படும் மிதுன ராசியினர் தங்களின் வாழ்வில் முன்னேற்றங்களையும் அனைத்து நன்மைகளையும் பெறுவதற்கு பணவசதி அதிகம் இல்லாத ஏழை நோயாளிகளுக்கு, அவர்களுக்கு தேவையான மருந்தை வாங்கி தருவது சிறந்த பரிகாரமாகும்.

கடகம்

Kadagam Rasi

சிறந்த மனநிலையை கொண்ட கடக ராசியினர் தங்களின் வாழ்வில் சிறந்த முன்னேற்றங்களையும் அதிர்தஷ்டங்களையும் பெறுவதற்கு குழந்தை பெற்ற ஏழை பெண்களுக்கு ஆடைகள், குழந்தைகளுக்கு பால் போன்றவற்றை தானமளிப்பது சிறந்த பரிகாரம் ஆகும்.

சிம்மம்

simmam

கம்பீரத்தன்மை மிகுந்த சிம்ம ராசியினர் ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரை ஒரு நூலில் கோர்த்து எப்போதும் கழுத்தில் அணிந்து கொண்டிருபதால் அவர்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களையும் அதிர்ஷ்டத்தையும் பெற இயலும்.

கன்னி

Kanni Rasi

மதிநுட்பம் அதிகம் கொண்ட கன்னி ராசியினர் மழைக்காலங்களில் தங்களின் வீடுகளில் ஒழுகும் மழை நீரை சேகரித்து குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தால் அவர்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களையும் அதிர்ஷ்டங்களையும் ஏற்படுத்தும்.

துலாம்

Thulam Rasi

துலாம் ராசியினர் தங்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்களையும் பல நல்ல முன்னேற்றங்களையும் பெறுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் அவ்வர்களின் வீடுகளில் பசுமாட்டின் கோமியத்தை வீட்டின் அனைத்து பகுதிகளிலும் தெளித்து வர நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

புரட்டாசி விரதம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்

விருச்சிகம்

Virichigam Rasi

உண்மையை அதிகம் விரும்பும் விருச்சிக ராசியினர் தங்களின் வாழ்வில் எப்போதும் அதிர்ஷ்டங்களையும், நல்ல மாறுதல்களையும் பெறுவதற்கு அவர்களின் கைகளால் அரச மரங்கள் மரங்களின் கிளைகளையோ வெட்ட கூடாது.

தனுசு

Dhanusu Rasi

நேர்மை குணம் மிகுந்த தனுசு ராசியினர் தங்களின் வாழ்வில் பல நாள் மாறுதல்களையும், அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு ஏழைகளுக்கு உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்து வருவது உங்களின் எதிர்கால வாழ்வில் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

மகரம்

Magaram rasi

ஒவ்வொன்றிலும் விதிமுறையின் படி நடந்து கொள்ளும் மகரம் ராசியினர் தங்களின் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களை பல நல்ல மாறுதல்களையும் பெறுவதற்கு பசும்பாலில் சீனி கலந்து ஆல மரத்தின் வேரில் அப்பாலை ஊற்ற வேண்டும். பின்பு அந்த மண் எடுத்து உங்களின் நெற்றியில் திலகமிட்டு கொள்ள வேண்டும்.

கும்பம்

Kumbam Rasi

எப்போதும் நிதானம் தவறாமல் இருக்கும் கும்ப ராசியினர் தங்களின் வாழ்வில் பல நல்ல மாற்றங்களையும் அதிர்ஷ்டங்களையும், மேன்மைகளையும் பெறுவதற்கு மாதமொருமுறை குளிக்கின்ற நீரில் சில துளிகள் பசும்பாலை கலந்து குளிக்க வேண்டும்.

மீனம்

Meenam Rasi

பிறருக்கு சிறந்த அறிவுரைகளை வழங்கும் மீன ராசியினர் தங்களின் வாழ்வில் நல்ல மாறுதல்களையும் அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு கோவில்களுக்கு தலைமுடியை மொட்டை போடும் போது, பிடரியில் சிறிது முடிகளை எடுக்காமல் விடுவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:
அரசு வேலை யாருக்கு கிடைக்கும் அதற்கான பரிகாரங்கள் என்ன

இது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.