12 ராசியினரும் காரிய வெற்றி பெற செய்ய வேண்டிய வழிபாடு

12-rasi-vinayagar
- Advertisement -

ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்க அதன் தொடக்கம் சிறப்பாக இருக்க வேண்டும். நமது மரபில் வினைகளை தீர்க்கும் விநாயகர் பெருமானை வழிபட்டு தொடங்குவது தொன்று தொட்டு பின்பற்றப்படும் வழக்கமாகும். அந்த வகையில் 12 ராசியினரும் வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய விநாயகர் வழிபாடு குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

- Advertisement -

Mesham Rasi

இயற்கையிலேயே வீரமிக்க குணம் கொண்ட மேஷம் ராசியினர் தாங்கள் மேற்கொள்ளும் எத்தகைய செயல்களிலும் வெற்றி பெற விரும்புபவர் ஆவர். மேஷ ராசியினர் தங்களின் வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெறுவதற்கு வீர கணபதி ரூபத்தில் இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi

பிறக்கும் போதே பல சுக போகங்களை அனுபவிக்கும் ராஜயோகத்தை கொண்ட ரிஷப ராசியினர் தங்களின் செயல்களில் வெற்றி பெறுவதை விரும்புவார்கள். இவர்கள் வாழ்வில் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற ஸ்ரீ வித்யா கணபதி வடிவில் இருக்கும் விநாயகரை வணங்க வேண்டும்.

மிதுனம்:

- Advertisement -

midhunam

பல விதமான திறமைகளை தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் மிதுன ராசியினர் தங்களுக்கான காரியங்களை தகுந்த கால, நேரம் பார்த்து செய்வார்கள். மிதுன ராசியினர் தங்கள் வாழ்வில் எல்லாவற்றிலும் சிறக்க லட்சுமி கணபதி வடிவில் இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.

கடகம்:

Kadagam Rasi

எல்லாவற்றையும் கற்றுக்கொள்வதிலும், அதை பிறருக்கு சொல்லி தருவதில் ஆர்வமும் கொண்டவர்களான கடக ராசியினர் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி பெரும் வரை பின்வாங்க மாட்டார்கள். ஹேரம்ப கணபதியாக இருக்கும் விநாயகரை வழிபடுவதால் கடக ராசியினர் அனைத்திலும் வெற்றி பெறலாம்.

சிம்மம்:

simmam

பிறருக்கு தலைமை தாங்கும் குணங்களோடு பிறந்தவர்கள் தான் சிம்ம ராசியினர். எத்தகைய கடினமான சூழ்நிலைகளிலும் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி பெற்றே தீருவர். சிம்ம ராசியினர் எப்போதும் வெற்றிகள் பெற விஜய கணபதி வடிவில் இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.

கன்னி:

Kanni Rasi

பிறருடன் இணக்கமாக பழகி அன்பான முறையில் வேண்டிய காரியங்களை சாதித்து கொள்ளும் திறன் கொண்டவர்கள் கன்னி ராசியினர். பிறரின் சரியான உறுதுணையுடன் எப்படிப்பட்ட காரியங்களையும் கன்னி ராசியினர் செய்வர். இவர்கள் அனைத்திலும் வெற்றி பெற வழிபட வேண்டிய மோகன கணபதி வடிவில் இருக்கும் விநாயகர் ஆவார்.

துலாம்:

Thulam Rasi

இந்த உலகத்தையே வென்று விடும் அளவிற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளில் ஊக்கமும், உத்வேகமும் காட்டக்கூடியவர்கள் துலாம் ராசியினர். இவர்கள் தங்களின் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறுவதற்கு க்ஷிப்ர ப்ரஸாத கணபதி என்கிற பெயரில் இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.

விருச்சிகம்:

virichigam

எடுத்து கொண்ட காரியங்களில் வெற்றி பெற எந்நேரமும் உழைக்க தயங்காத விருச்சிக ராசியினர், அவற்றில் வெற்றி பெட்ரா பின்பு அடுத்த காரியங்களில் தொடர்ந்து வெற்றி பெற உழைப்பார்கள். இந்த விருச்சிக ராசியினர் தங்களின் வாழ்வில் மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெற சக்தி கணபதி வடிவில் இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.

தனுசு:

Dhanusu Rasi

என்றென்றும் முறைகேடான வழிகளில் வெற்றியை அடைய விரும்பாத தனுசு ராசிக்காரர்கள் எவ்வளவு கடினமான சூழ்நிலைகளிலும் தாங்கள் மேற்கொண்ட காரியங்களிலிருந்து விலகி செல்லாமல் இறுதியில் வெற்றியடைவார்கள். தனுசு ராசியினர் வெற்றி பெற சங்கடஹர கணபதி வடிவில் இருக்கும் விநாயகரை வணங்க வேண்டும்.

மகரம்:

Magaram rasi

பிறருக்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயங்காதவர்கள் மகர ராசியினர். அதே நேரத்தில் காரியங்களில் வெற்றி பெற கடுமையாக உழைக்க தயங்காதவர்கள். இந்த ராசியினர் தங்களின் வாழ்வில் எல்லாவற்றிலும் சிறந்த பலன்களை பெற யோக கணபதியை வழிபட வேண்டும்

கும்பம்:

Kumbam Rasi

எத்தகைய ஒரு பிரச்சனை வந்தாலும் கலங்காத மனம் கொண்டவர்களாக இருப்பார்கள் கும்ப ராசிக்காரர்கள். அதே நேரத்தில் தங்களின் செயல்களில் வெற்றி பெரும் முயற்சியையும் கைவிடமாட்டார்கள். கும்ப ராசியினார் தங்களின் வாழ்வில் அனைத்திலும் நன்மையான பலன்களை பெற சித்தி கணபதி வடிவில் இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.

மீனம்:

meenam

நேர்மையான குணத்தையும், பிறருக்கும் தகுந்த ஆலோசனைகளையும் சொல்ல கூடிய ஞானத்தையும் கொண்டவர்கள் மீன ராசிக்காரர்கள். இந்த ராசியினர் தங்களின் வாழ்வில் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற பால கணபதி வடிவில் இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
லக்னம் எனும் முதல் வீட்டில் சூரியன் இருக்கும் பலன்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi vinayagar in Tamil. It is also called Vinayagar valipadu in Tamil or 12 rasi in Tamil or 12 rasi valipadu in Tamil or 12 rasi valipadu in Tamil.

- Advertisement -