லக்னம் எனும் முதல் வீட்டில் சூரியன் இருப்பதால் ஏற்படும் பலன்கள்

sooriyan

நமது முன்னோர்கள் ஆயகலைகள் 64 இருப்பதாக கூறியிருக்கின்றனர். இவற்றில் ஜோதிட கலையும் ஒன்றாகும். ஜோதிட சாஸ்திரம் என்பது ஒரு மிக பெரும் கடல் போன்றது. இக்கலையை முழுமையாக கற்க ஒரு மனித வாழ்க்கை பத்தாது. ஆனால் இக்கலையில் நமக்கு பயன்தரும் முக்கிய ஜோதிட விதிகளை சுருக்கமாக நாம் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஒருவரின் ஜாதகத்தில் “லக்னம்” எனப்படும் முதல் வீடு பற்றியும், அதில் “சூரியன்” இருப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

astro wheel 1

லக்னம் என்பது ஒரு மனிதன் பிறக்கின்ற நேரத்தில் பூமி எந்த ராசியின் ஆதிக்கத்தில் இருக்கிறதோ, அந்த ராசியை கொண்டே ஜாதகத்தில் லக்னம் கணிக்கப்படுகிறது. இந்த லக்னம் தான் ஒரு ஜாதகத்தில் இருக்கும் 12 ராசிகளில் முதலாவது வீடு அல்லது ராசியாகும். லக்னம் அல்லது முதலாவது வீட்டில் நவகிரகங்களில் முதன்மை நாயகனான சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை காணலாம்.

லக்னம் எனப்படும் முதல் வீடு ஒரு மனிதனின் உடல்வாகு, நிறம், பிறரை கவர்கின்ற தோற்றம், உடலில் ஓடும் ரத்தத்தின் தன்மை, கம்பீர தன்மை, புகழ் ஆகியற்றிற்கு காரகத்துவம் வகிக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் இந்த லக்னம் எனப்படும் முதல் வீட்டில் சூரியன் இருக்கும் பட்சத்திலும், ஜாதகருக்கு மிகுந்த வலிமை வாய்ந்த உடலும், ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவராக இருப்பார். எதிலும் அவசரப்படும் தன்மை அதிகம் கொண்டவராக இருப்பார். தவறு செய்தவர்களை மன்னிக்கவே மாட்டார்.

suriyan

இந்த ஜாதகர் எந்த ஒரு விடயத்திலும் தனது முழு கவனத்தையும் செலுத்தி செயல்களில் வெற்றி காண்பார். திருமண வாழ்வில் அளவான மனதிருப்தியுடன் வாழ்வார். சுப காரியங்களுக்காக அதிகம் செலவு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். சூரியனின் சொந்த ராசியான சிம்மம், உச்ச ராசியான மேஷம் ஆகியவை லக்னம் எனப்படும் முதல் வீடாக இருந்து அதில் சூரியன் இருக்க பிறந்த ஜாதகர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

- Advertisement -

Suryan God

மிகுந்த தைரியசாலிகளாகவும் இருப்பார்கள். காவல்துறை, ராணுவம் போன்ற துறைகளில் ஈடுபட்டு உயர்ந்த பதவிகளை அடைவார்கள். பகைவர்களால் சுலபத்தில் வெல்ல முடியாதவர்களாகவும், பிறரை கவர்ந்திழுக்கும் கம்பீர நடை, தோற்றம் ஆகியவற்றை பெற்றிருப்பார்கள். மிகுந்த சுறுசுறுப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். ஜாதகத்தில் சூரிய திசை நாடாகும் காலத்தில் மிகுந்த யோகங்களை பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
கண் துடிக்கும் பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Lagnathil suriyan in Tamil.