- Advertisement -
Homeஜோதிடம்12 ராசி கோபப்படும் விதம்

12 ராசி கோபப்படும் விதம்

- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளும் அவரவரின் ஜாதக சூழ்நிலைக்கு ஏற்ப வித்தியாசமான குணநலன்கள் உடன் இருப்பார்கள். இப்படி வித்தியாசப்பட்ட குணநலன்கள் மனிதனுக்கு இருந்தாலும், ராசிப்படி சிலருக்கு ஒரே விதமான குணாதிசயங்களும் அமைந்திருக்கும். மேஷம் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று ஒரு ஜோதிட சாஸ்திரம் உண்டு. அது போல 12 ராசிக்காரர்களும் எப்படி கோவப்படுவார்கள்? கோபம் வந்தால் எப்படி நடந்து கொள்வார்கள்? என்னும் ஜோதிடம் சார்ந்த ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள போகிறோம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் கோபம் வந்தால் அப்படியே வெடித்து சிதறுவார்கள். பட்டாசு வெடித்தது போல படார் படார் என்று கோபத்தை வார்த்தைகளால் காண்பித்து விடுவார்கள். இவர்களுக்கு கோபத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொள்ள தெரியாது.

- Advertisement -

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு கோபம் வந்தால் முகபாவனையும், உடல் மொழியும் அவர்களுடைய கோபத்தை எடுத்துச் சொல்லிவிடும். எரிச்சலான உடல் மொழி அவர்களின் கோபத்திற்கு முதல் அறிகுறியாக இருக்கும். ஒரு நிமிடம் கோபப்படலாமா? வேண்டாமா? என்று எரிச்சலோடு யோசித்து கோபப்படுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் கோபம் வந்தால் குத்தி காட்டி பேசுவார்கள். இவர்களுடைய குதர்க்கமான பேச்சு மற்றவர்களை எரிச்சல் ஊட்டும் படியாக இருக்கும். குத்தலான வார்த்தைகளால் கோபப்படுத்தியவரை அர்ச்சனை செய்து விடுவார்.

- Advertisement -

கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் கோபம் வந்தால் அவர்களுடைய முக பாவனை மிகவும் கொடூரமாக இருக்கும். மூக்குக்கு மேல் கோபம் வரும் என்பார்களே.. அது இவர்களுக்குத் தான் சரியாக பொருந்தும். அகம் இருந்து வருவதற்குள், முகமே எடுத்துக்காட்டும் இவர்களுடைய கோபத்தை!

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் கோபம் வந்தால் பளார் என்று அறைந்தது போல பேசி விடுவார்கள். சற்றும் யோசிக்காமல் தவறு என்றால் அக்கணமே அவர்கள் அதை சுட்டிக்காட்டி பேசி விடுவார்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள்.

- Advertisement -

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் கோபம் வந்தால் வீண் வம்புக்கு போக மாட்டார்கள், வந்த சண்டையை விட்டு வைக்க மாட்டார்கள். அமளி துமளி ட்ராமா செய்து ஒரு அலப்பறையை கூட்டி விடுவார்கள். அப்போது தான் அவர்களுக்கு நிம்மதி பெருமூச்சு வரும்.

துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் நியாயஸ்தர்கள் என்பதால் கோபம் வந்தால் நியாயமாக இருந்தால், பொறுமையாக இருப்பார்கள். அநியாயம் என்று தெரிந்தால் அவ்வளவு தான் ஆக்ரோஷம் ஆகி விடுவார்கள். ஆனாலும் இவர்களுடைய கோபம் அமைதியான ஆக்ரோஷமாக இருக்கும். பொறுமை தாண்டி ஓவராக சீண்டிப் பார்க்க நினைத்தால் சிங்கம் போல பாய்வார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கோபம் வந்தால் அவ்வளவுதான் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கிழித்து தொங்கவிட்டு விடுவார்கள். கோபப்படுத்தியவர்களை உண்டு இல்லை என்று செய்து சாகடிக்காமல் விடமாட்டார்கள். அவரிடம் சிக்கியவர்கள் கதம் கதம் தான்.

தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் கோபம் வந்தால் அதை அடக்கியாள முயற்சி செய்வார்கள். அப்படியும் முடியவில்லையென்றால், புஷ்வானம் போல பொங்கி எழுந்து பிறகு சீக்கிரமே புஸ்ன்னு போயிடுவாங்க.. அவ்வளவுதான் இவர்களுடைய கோபமும்!

மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் கோபம் வந்தால் அமைதியாக வச்சி செய்வாங்க! இவர்களுடைய கோபம் ரொம்பவும் ஆபத்தானது. உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்கள். கோபப்படுத்தியவர்களை வச்சி செய்யாமல் விட மாட்டாங்க.

கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் கோபம் வந்தால் பேசாமல் அமைதியாகி விடுவார்கள். இவர்களுக்கு கோபம் என்பது பெரிய பெரிய விஷயங்களுக்காக மட்டுமே வரக்கூடியதாக இருக்கும். சிறு சிறு விஷயங்களுக்கு அமைதியாகி சென்று விடுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
இளநரை மறைய குறிப்பு

மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் கோபம் வந்தால் வேறு வேலையை பார்க்க சென்று விடுவார்கள். யாராவது கோபத்தை தூண்டி விட்டால், மனுஷன் பேசுவானா உன்கிட்ட என்று நேக்காக கழண்டு போய்விடுவார்கள். கோவப்படுவதற்கு அர்த்தம் வேண்டும் என்று நினைப்பார்கள்.

சற்று முன்