முடி கொஞ்சம் நிறம் மாறினாலும், நமக்கு ரொம்பவும் கவலையாக இருக்கும். இளம் வயதிலேயே நரை விழ ஆரம்பித்தால் இன்னும் கவலை அதிகரிக்கும். இந்தியர்களின் தலைமுடியைப் பொறுத்தவரை கருகருவென்று பளபளப்பாக இருந்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மேலும் அது தான் நமக்கான ஆரோக்கியமான கேசமும் ஆகும். எனவே முடியை கருமையாக்கி, நீண்டு வளர செய்ய, இளநரை மறைய செய்ய என்ன செய்வது? என்னும் அழகு குறிப்பு சார்ந்த தகவலை தான் தொடர்ந்து இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள போகிறோம்.
தலைமுடி அடர்த்தியாக வளரவும், கருமையாக மாறவும் ஸ்கால்ப் பகுதியில் இருக்கக் கூடிய இறந்து போன செல்களை அகற்றி, ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். மேலும் அதன் வளர்ச்சியை தூண்டி விடவும் வேண்டும். இந்த வேலையை சிறப்பாக செய்வதில் காபி முக்கியத்துவம் பெறுகிறது. நாம் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக காபி போட்டு குடித்தால் தான் நமக்கு பிரஷ்ஷாக இருப்பது போல தோன்றும்.
காபியில் இருக்கும் கஃபைன் என்னும் மூலக்கூறு நமக்கு அதை மீண்டும் மீண்டும் குடிப்பதற்கு உந்துதலை ஏற்படுத்துகிறது. இந்த கஃபைன் நமக்கு ஒரு விதமான தூண்டுதலையும், ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இதை தலைமுடிக்கு பயன்படுத்துவதன் மூலம் இளநரை மறைந்து முடியானது கருப்பாக மாறும்.
தலைமுடியின் வேர்கால்கள் இருக்கும் இடத்தில் காபியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் செயல்பட்டு முடியில் ஏற்படக்கூடிய சேதத்தை தடுக்கிறது. தலைமுடி பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உதவி செய்கிறது. அந்த காலத்தில் எல்லாம் கஞ்சி தண்ணீர் சேர்த்த சீயக்காயை பயன்படுத்தி தான் தலைக்கு குளிப்பார்கள். இப்படி தலைக்கு குளிக்கும் பொழுது தலையில் இருக்கும் உஷ்ணம் எல்லாம் கண்களுக்கு இறங்க ஆரம்பிப்பதை உணர முடியும்.
அந்த அளவிற்கு சிறப்பாக செயல்படக் கூடிய இந்த கஞ்சி தண்ணீர் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் காபி பவுடரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு நீங்கள் பயன்படுத்த இருக்கும் ஷாம்பூ அல்லது சீயக்காயை தேவையான அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் இந்த கலவையை நீங்கள் பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும். தலைக்கு குளிப்பதற்கு பத்து நிமிடம் முன்பு இதனை தேய்த்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். பத்து நிமிடம் மசாஜ்க்கு பிறகு சாதாரணமாக நீங்கள் வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது குளிர்ந்த நீரினால் தலை முடியை அலசிக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
நல்ல வேலை கிடைக்க பதிகம்
இது போல வாரம் ஒருமுறை செய்து வந்தால் இளநரை விரைவாகவே மறைய ஆரம்பிக்கும், மேலும் தலையில் இருக்கக் கூடிய இறந்த செல்களை அகற்றி, புதிய செல்களை ஊக்குவிக்க இது உதவியாக இருக்கும். மயிர் கால்களுக்கு ஊட்டச்சத்தையும், தூண்டுதலையும் ஏற்படுத்தி மீண்டும் புதிய முடியை வளர செய்வதில் சிறப்பாக செயலாற்றும், எனவே கரு கரு என்று அடர்த்தியாக முடி வளர ஆரம்பிக்கும். மெல்ல மெல்ல இளநரை அல்லது செம்பட்டை இருந்தாலும் அவை மறைந்து கருப்பாக மாறும். பளபளப்பாகவும், அலைபாயும் கேசத்தையும் நமக்கு அள்ளிக் கொடுக்கும், கொடை வள்ளலாக இருக்கக் கூடிய இந்த காபி மற்றும் கஞ்சி தண்ணீர் கலந்த கலவையை தொடர்ந்து பயன்படுத்தி நீங்களும் பலன் பெறலாமே!