- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவஸ்திர தரித்தரம் பலன்கள்

வஸ்திர தரித்தரம் பலன்கள்

- Advertisement -

நாம் உபயோகப்படுத்தும் வஸ்திரங்கள், நம் உடலை மறைக்கும் துணிமணிகள் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். அசுத்தம் நிறைந்த வஸ்திரங்களில் தரித்திரம் தாண்டவம் ஆடுகிறது. வீட்டில் பழைய வஸ்திரங்கள், கிழிந்த துணிமணிகள் இருந்தால் அதை என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

நாம் பயன்படுத்திய வஸ்திரங்கள் மூலம் நமக்கும், மற்றவர்களுக்கும் தரித்திரம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி வராமல் இருக்க இதையெல்லாம் தெரியாமலும் செய்யக்கூடாது. நாம் அணியும் உடை பரிசுத்தமானது. அது எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். “கந்தல் ஆனாலும் கசக்கி கட்டு” என்று ஒரு பழமொழி இருக்கிறது. கந்தல் ஆகிப்போன வஸ்திரமும் பயன் தரும், ஆனால் அதை கசக்காமல் கட்டினால் தரித்திரம் வரும்.

- Advertisement -

எப்பொழுதும் ஒருமுறை உடுத்திய அழுக்கு துணிகளை துவைக்காமல் மீண்டும் மீண்டும் உடுத்துவது கூடாது. இந்த செயல் உங்களுக்கு வறுமையை உண்டாக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அழுக்கு துணிகளை துவைக்காமல் அப்படியே யாருக்கும் தானமாகவும் கொடுக்கக் கூடாது, இது மகா பாவமாகும். கிழிந்த துணிமணிகளையும் அது போல யாருக்கும் தானம் செய்யக்கூடாது. தானம் செய்பவர்கள் பழைய நல்ல துணிமணிகளை மட்டுமே தானம் செய்ய வேண்டும்.

வஸ்திர தானம் நீண்ட ஆயுளை கொடுக்கக்கூடியது. வீட்டில் நீண்டகால உடல் நல கோளாறுகளால் அவதிப்படுபவர்கள், இல்லாதவர்களுக்கு வஸ்திர தானம் செய்து பாருங்கள், ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய பெற்றோர்களுக்கு வஸ்திரதானம் செய்வது ஆயுளை அதிகரிக்க செய்யும், நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

- Advertisement -

வஸ்திரதானம் கொடுக்கும் முறை :
புதிய வஸ்திரங்களை யாருக்கு வேண்டுமானாலும் மனதார நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாள், கிழமை, நட்சத்திரம் எதுவும் பார்க்காமல் தானம் செய்யலாம். இது தான் சிறந்த தானம் ஆகும். ஆனால் பழைய வஸ்திரங்களை தானம் கொடுக்கும் பொழுது சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். கிழிந்த வஸ்திரங்கள், அழுக்கு துணிகள் போன்றவற்றை ஒரு போதும் மற்றவர்களுக்கு தானம் கொடுக்கக் கூடாது. அதை குப்பையில் போட்டு எரித்துவிட வேண்டும் அப்படியே குப்பையில் போடவும் கூடாது. இவ்வகையான வஸ்திரங்களை கிழிந்த தடம் தெரியாமல் சிறு சிறு துண்டுகளாக கத்தரித்து சுத்தம் செய்து பின் வீட்டை துடைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். தானம் கொடுத்து சாபம் வாங்கிக் கொள்ளாதீர்கள்.

உபயோகப்படுத்திய நல்ல நிலையில் இருக்கக்கூடிய துணிமணிகளையும், உங்களுக்கு அளவு பத்தாமல் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் துணிகளையும் இல்லாத ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள், புண்ணியம் சேரும். ஒருவருக்கு தானம் கொடுக்கும் முன்பு நீங்கள் கொடுக்கும் துணிமணிகள் சுத்தமாகவும், கிழிந்து போகாமலும், அழுக்குகள் அதிகம் படியாமலும் இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருமுறை துவைத்து காய வைத்து பின்னர் சேகரித்து வையுங்கள். பிறகு இந்த வஸ்திரங்களை மற்றவர்களுக்கு தானம் செய்யுங்கள். இப்படி துவைக்கும் பொழுது கொஞ்சம் கல் உப்பை போட்டு துவைப்பது தரித்ர தோஷங்களை நீக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

இதையும் படிக்கலாமே:
30 நாளில் முகம் வெள்ளையாக

ஒருவர் உடலில் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த வஸ்திரம் அவர்களிடம் இருக்கும் ஒருவித கெட்ட சக்திகளை ஈர்த்து வைத்திருக்கும் எனவே கல் உப்பை கலந்த நீரில் துவைத்த பின்பு நீங்கள் மற்றவர்களுக்கு தானம் கொடுத்தால் அந்த வஸ்திரங்களால் மற்றவர்களுக்கு தரித்திரம் பிடிக்காமல் இருக்கும். பணம் வைக்கக்கூடிய பீரோவில் கிழிந்த துணிமணிகள், எரிந்து போன துணிமணிகள் போன்றவை இருந்தால் அவையும் தரித்திரத்தை உண்டாக்கும். வறுமையையும், பணசுமையையும் அதிகரிக்கும். எனவே இது போன்ற துணிமணிகளை சேர்த்து வைக்காதீர்கள்.

சற்று முன்