கருப்பா இருக்குறது ஒரு குத்தமாங்க. கருப்பா இருக்கிறவங்க எல்லோரும், வெள்ளையாக மாற வேண்டும் என்றுதான் நினைக்கின்றோம். காரணம் வெள்ளையாக இருப்பவர்கள், கருப்பாக இருப்பவர்களை பார்த்து கேலி கிண்டல் செய்வதுதான். நிறைய பேர் வெள்ளையாக இருப்பவர்களுக்கு ஒரு மரியாதை, கருப்பாக இருக்கிறவங்களுக்கு ஒரு மரியாதை கொடுப்பாங்க. நிறத்தில் எதுவுமே கிடையாது. அப்பழுக்கற்ற மனது தான் ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியம். சரி இருந்தாலும் தன்னம்பிக்கை வர, தைரியம் வர, வெள்ளை நிறம் எங்களுக்கு கட்டாயம் தேவை என்பவர்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். நீங்கள் மாநிரமாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் இந்த குறிப்பை ஒரு முறை பின்பற்றி பார்க்கும் போதே நல்ல வித்தியாசத்தை உணருவீர்கள். வாங்க எளிமையான அந்த அழகு குறிப்பு நாமும் தெரிந்து கொள்வோம்.
வெள்ளையாக மாற அழகு குறிப்பு:
ஒரு சிறிய கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கஸ்தூரி மஞ்சள் 1/4 ஸ்பூன், முல்தானி மெட்டி 1 ஸ்பூன், பால் பவுடர் 1 டேபிள் ஸ்பூன், போட்டு இதை கலக்குவதற்கு தேவையான பால் ஊற்றிக் கொள்ளவும். பேஸ்ட் போல இதை கலந்து கொள்ளுங்கள். கொஞ்சம் திக்கான பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள். இதில் முக்கியமாக இறுதியாக இன்னொரு பொருளை சேர்க்கப் போகின்றோம். (பத்து ரூபாயில் கூட அமுல் பால் பவுடர் நமக்கு கிடைக்கிறது. அதை வாங்கினால் இரண்டு முறை பயன்படுத்தலாம்.)
அதுதான் உருளைக்கிழங்கு சாறு. உருளைக்கிழங்கை தோல் சீவி துருவி தண்ணீர் எதுவும் ஊற்றாமல் உங்கள் கையை கொண்டு பிழிந்தாலே போதும். அதிலிருந்து சாறு கிடைக்கும். அந்த சாறை 3 டேபிள் ஸ்பூன் அளவு, தயார் செய்து வைத்திருக்கும் இந்த பேக்கில் கலந்து கொள்ளுங்கள். சூப்பரான பேஸ்ட் தயார். இதை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். கருப்பான கழுத்தில் அப்ளை செய்து கொள்ளலாம்.
உங்கள் உடலில் எந்த இடத்தில் உங்களுக்கு சருமம் வெள்ளையாக மாற வேண்டுமோ அந்த இடத்திலும் இதை கொஞ்சம் திக்காக அப்ளை செய்துவிட்டு, 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பேக் நன்றாக காய்ந்ததும் அதன் மேலே தண்ணீரை தெளித்து ஈரம் செய்து விட்டு வட்ட வடிவில் மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் கழிவினாலே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும்.
கருத்துப்போன கை கால்களில் வேண்டும் என்றால் முதலில் இந்த பேக்கை டெஸ்ட் செய்து பாருங்கள். பிறகு கூட முகத்தில் போட்டுக் கொள்ளலாம். வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த பேக்கை தொடர்ந்து போட்டு வர உங்களுடைய சருமம் நிரந்தரமாக வெள்ளையாக மாறிவிடும். சில பேர் கேட்கலாம்.
இதையும் படிக்கலாமே: தலையில் சீப்பு போடும்போது முடி கொத்து கொத்தாக கொட்டுதா? முடி உதிர்வதை நிறுத்தி, கத்தை கத்தையாக முடியை வளர்க்க இந்த 1 பொருள் போதுமே.
முல்தானி மெட்டியை போட்டால் சருமம் டிரையாகி விடுமே என்று. அதற்குத்தான் இதில் பால் பவுடரும் பாலும் சேர்த்து இருக்கின்றோம். சருமம் ட்ரை ஆகுவதற்கு வாய்ப்பு இல்லை. பேக்கை போட்டு முடித்த பிறகு ஒரு நல்ல மாய்ஸ்ரைசர் கிரீமை சருமத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.