தலையில் சீப்பு போடும்போது முடி கொத்து கொத்தாக கொட்டுதா? முடி உதிர்வதை நிறுத்தி, கத்தை கத்தையாக முடியை வளர்க்க இந்த 1 பொருள் போதுமே.

hair2
- Advertisement -

சில பேருக்கு தலையை அவிழ்த்தாலே போதும். அந்த ரப்பர் பேண்டுடன் முடி உதிரும். தலையில் சீப்பு வைத்தால் சீப்போடும் முடி கொத்து கொத்தாக உதிரும். இப்படி அளவுக்கு அதிகமாக முடி உதிர்வதற்கு ஒரு காரணம், தலைமுடியில், ஸ்கேல்பில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு இன்ஃபெக்சன். பேன், பொடுகு, ஈறு தொல்லை, அரிப்பு, சுண்டு, அழுக்கு இப்படி ஏதோ ஒரு பிரச்சினையின் காரணமாகத்தான் இந்த முடி உதிர்வு இருக்கிறது. இந்த பிரச்சனை எல்லாம் உங்களுக்கு இல்லை, ஆனாலும் முடி கொட்டுகிறது என்றால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு காரணமாக இருக்கலாம். இந்த காரணங்களை எல்லாம் சரி செய்து முடி உதிர்வை நிறுத்த எளிமையான 2 அழகு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கொத்துக்கொத்தாக முடி உதிரும் பிரச்சனைக்கு தீர்வு:
செம்பருத்தி இலை 1 கைப்பிடி, அளவு எடுத்து கழுவி வைத்துக் கொள்ளுங்கள். 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த வெந்தயம் 1 ஸ்பூன், அந்த தண்ணீரோடு நமக்கு தேவை. மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் கழுவிய செம்பருத்தி இலைகள், ஊறவைத்த வெந்தயத்தை தண்ணீரோடு ஊற்றி, விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை ஒரு மெல்லிசான காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டியும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சூப்பரான பச்சை நிறத்தில் ஒரு பேக் ஷாம்பு போல கொழ கொழப்பாக நமக்கு கிடைத்திருக்கும். அதோடு வேப்ப எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். (வேப்ப எண்ணெய் தான் இந்த பேக்குக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.) இதை உங்களுடைய தலையில் வேர்க்கால்களில் படும்படி பேக் போட்டுக் கொள்ளுங்கள். 1/2 மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு போட்டு தலையை அலசி விடுங்கள். இந்த பேக்கை மாதத்தில் 3 நாட்கள் உங்கள் தலையில் போட்டால் போதும். பத்து நாளுக்கு ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறை போடுங்கள். உங்களுடைய தலையில் எப்பேர்ப்பட்ட பிரச்சனை இருந்தாலும் அந்த பிரச்சனைக்கு உண்டான தீர்வை இந்த சின்ன பேக் கொடுத்து விடும்.

முடி உதிர்வு குறைந்து தலையில் இருக்கும் நோய் தொற்று கிருமிகள் எல்லாம் இறந்து போய், புதிய முடிகள் அடர்த்தியாக வளர தொடங்கி விடும். சரிங்க, இது செய்தும் எங்களுக்கு சரியாகவில்லை. எங்களுடைய தலையில் பேன் பொடுகு தொல்லை இல்லை. ஆனால் எங்களுக்கு முடி கொட்டுது. என்ன செய்வது.

- Advertisement -

தலையில் எந்த ஒரு நோய் தொற்றும் இல்லை என்றாலும், இந்த பேக்கை நீங்கள் போடலாம். தவறு கிடையாது. கூடவே ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரை, பேரிச்சம்பழம், காய்கறிகள், பழ வகைகள், வேர்க்கடலை இவைகளை அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இதோடு சேர்த்து உங்களால் முடிந்தால் பயோட்டின் சத்து நிறைந்த பொருட்களை அதிகமாக உட்கொண்டு வரவேண்டும்.

இதையும் படிக்கலாமே: 1 கப் கடலை மாவு இருந்தால் போதும், இந்த வெயில் காலத்திலும் உங்கள் முகம் வெண்மையாக ஜொலிக்கும்.

சீராக இதை மூன்றும் மாதங்கள் பின்பற்றி வந்தாலே தலைமுடி உதிர்வில் பெரிய மாற்றத்தை காணலாம். உங்களுடைய வீட்டில் சிறிய பெண் பிள்ளைகள் இருந்தால் மேல் சொன்ன விஷயங்களை எல்லாம் சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு செய்து வாருங்கள். அவர்கள் வளர வளர அவர்களுடைய முடியும் பல மடங்கு ஊட்டச்சத்தோடு வளரும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -