ரவை இருந்தால் வெறும் 15 நிமிஷத்துல இந்த தோசையை செஞ்சு அசத்துங்க. மொறுமொறுவென சூப்பரான இன்ஸ்டன்ட் தோசை ரெசிபி உங்களுக்காக.

dosai2
- Advertisement -

இட்லி தோசை மாவு இல்லை என்ற கவலையோடு என்ன டிஃபன் செய்ய வேண்டும் இன்று இனி குழப்பிக்கொள்ள வேண்டாம். உங்க வீட்ல ரவை இருக்கா. யோசிக்காமல் சட்டென்று 15 நிமிஷத்துல இந்த தோசை தயார் செய்யலாம். வாங்க இந்த இன்ஸ்டன்ட் தோசை ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தோசையை விருப்பமாக சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள ஒரு தேங்காய் சட்னி இருந்தால் கூட போதும். சூப்பரான பிரேக்ஃபாஸ்ட் ரெடி.

dosai4

முதலில் இந்த தோசை செய்வதற்கு 2 டம்ளர் அளவு ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, ரவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, ரவையை நன்றாக ஊறவைத்துக் கொள்ளவும். ரவை தண்ணீரை உறிஞ்சி நன்றாக ஊற வேண்டும். ஊறிய ரவையில் தண்ணீர் இருக்கக்கூடாது. தண்ணீரில் ஊறிய ரவை உப்புமா பதத்திற்கு இருக்கவேண்டும்.

- Advertisement -

தண்ணீரில் ஊறிய ரவையை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த ரவையுடன் நறுக்கிய தக்காளி பழம் – 2, சிறிய துண்டு – இஞ்சி பொடியாக நறுக்கியது, வரமிளகாய் – 3, தயிர் – 5 டேபிள்ஸ்பூன், தோசைக்கு தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் மிக்ஸி ஜாரில் மாவை அரைத்துக் கொள்ள வேண்டும்.

dosai3

பெரும்பாலும் தக்காளியில் இருந்து தண்ணீர் விடும். மாவு அரைக்கும் போது தண்ணீர் ஊற்ற தேவையில்லை. உங்களுக்கு தண்ணீர் தேவைப்பட்டால் கொஞ்சமாக ஊற்றி மாவை அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். இது தோசை மாவு பக்குவத்திற்கு இருக்க வேண்டும். ரொம்பவும் தண்ணீராக மாவை அரைக்க வேண்டாம்.

- Advertisement -

அவ்வளவு தான். தோசை மாவு தயார். தோசைக்கல்லை எப்போதும்போல அடுப்பில் வைத்து சூடு செய்து, தோசைக்கல் மிதமான சூட்டில் இருக்கும் போது அரிசி மாவு தோசை வார்ப்பது போலவே இந்த தோசையை வார்த்து, மெல்லிசாக தேய்த்து மேலே நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சிவக்க வைத்து எடுத்து பரிமாறினால் ரவை தக்காளி தோசை ரெடி.

tometo-dosai2

தொட்டுக்கொள்ள ஒரு தேங்காய் சட்னியை வைத்து குழந்தைகளுக்கு பரிமாறுங்கள். வித்தியாசமான சுவையில் இருக்கும். நிச்சயமாக எல்லோரும் விரும்பி சாப்பிடும் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி ஆக இருக்கும். இந்த சோசை செஞ்சு கொடுத்தால் நிச்சயம் உங்கள் வீட்டில் பாராட்டு மழைதான். தோசை மாவு இல்லையே, இந்த தோசை எப்படி வந்தது என்று நிச்சயம் எல்லோரும் கேட்பாங்க.

- Advertisement -