வாழ்க்கையில் படாத கஷ்டம் இல்லை! எடுக்காத முயற்சி இல்லை! ஆனால் வெற்றியை மட்டும் உங்களால் தொட முடியவில்லையா? நீங்களும், 16 நாட்களில் நினைத்ததை நடத்தி காட்ட முடியும்.

சில பேர் வாழ்க்கையில் படாத கஷ்டத்தை பட்டு, பல முயற்சிகளை எடுத்த பின்பும் தோல்வியையே சந்தித்து கொண்டிருப்பார்கள். என்னதான் காரணம் என்றே புரியாது. விடாமுயற்சி கூட, அவர்களை வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் சிலசமயங்களில் வாழ்க்கையை வெறுக்கும் நிலைக்கு சென்று விடுவார்கள். ‘என்னடா வாழ்க்கை இது! இத்தனை துன்பங்களை அனுபவித்தும் ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லையே, என்று அலுத்து போய், எல்லா முயற்சியையும் கைவிடும் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், இன்றிலிருந்து தொடங்கியாக 16 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்து வாருங்கள். நிச்சயம் நல்ல பலனை அடைய முடியும்.

selvangal

ஒருவருடைய வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருக்க வேண்டுமென்றால் அவர்கள் 16 செல்வங்களையும் பெற்று வாழ வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்தக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள் ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று தான் ஆசிர்வாதத்தை செய்வார்கள்.’ இந்த 16 செல்வங்களை அள்ளித் தர கூடிய 16 லட்சுமி தேவியை நினைத்து தான் உங்களுடைய வீட்டில் இந்த பூஜையை செய்ய போகிறீர்கள்.

நம்முடைய எல்லோரது வீட்டிலும் மகாலட்சுமியின் திருவுருவப்படம் கட்டாயமாக இருக்கும். அந்தப் படத்தின் முன்பாக நெய் தீபம் ஒன்று ஏற்றிவைத்து விட்டு, மகாலட்சுமி திருவுருவ படத்திற்கு வாசனை நிறைந்த புஷ்பங்களால் அலங்காரம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்தபடியாக வாழ்வை வளமாக்க கூடிய 16 செல்வங்களையும், 16 செல்வங்களை கொடுக்கும் லட்சுமிதேவிகளையும் நினைத்து, பின்வரும் மந்திரத்தை மனதார சொல்லி உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கான மந்திரம் இதோ.

ashtalakshmi

ஓம் சௌந்தர்ய லட்சுமியே போற்றி!
ஓம் சௌபாக்கிய லட்சுமியை போற்றி!
ஓம் கீர்த்தி லட்சுமியே போற்றி!
ஓம் வீர லட்சுமியை போற்றி!

- Advertisement -

ஓம் விஜய லட்சுமியை போற்றி!
ஓம் சந்தான லட்சுமியை போற்றி!
ஓம் மேதா(புத்தி) லட்சுமியை போற்றி!
ஓம் வித்யா லட்சுமியே போற்றி!

ashta-lakshmi

ஓம் துஷ்டி(ஆனந்த) லட்சுமியே போற்றி!
ஓம் புஷ்டி(பாக்கிய) லட்சுமியை போற்றி!
ஓம் ஞான லட்சுமியே போற்றி!
ஓம் சக்தி லட்சுமியே போற்றி!

ஓம் சாந்தி லட்சுமியே போற்றி!
ஓம் சாம்ராஜ்ய லட்சுமியே போற்றி!
ஓம் ஆரோக்கிய லட்சுமியை போற்றி!
ஓம் ஆதி லட்சுமியை போற்றி!

mahalakshmi

எப்போதுமே மகாலட்சுமியை நினைத்து நம்முடைய வீட்டில் பூஜை செல்வது நல்லது. இருப்பினும் மகாலட்சுமியோடு சேர்ந்து இந்த 16 வகையான செல்வங்களையும் பெறுவதற்கு, 16 வகையான லக்ஷ்மிகளை, 16 நாட்கள் தொடர்ந்து நினைத்து பூஜை செய்தால், உங்களுடைய வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களைத் தாண்டி, தோல்வியில் இருந்து மீண்டு வந்து, பல சோதனைகளை கடந்து நீங்களும், வாழ்வில் வெற்றி அடைய முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.