நதிகளில் அனைவரும் புனித நீராடி தங்களின் பாவத்தை நீக்கக்கூடிய நாளாக தான் மாசி மகம் நாள் திகழ்கிறது. அன்றைய நாளில் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான ஜீவராசிகளின் பாவத்தையும் நீக்குவதற்கு சிவபெருமான் அருள் புரிகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினத்தில்தான் சிவபெருமான் முருகப்பெருமானிடம் இருந்து ஞான உபதேசம் பெற்றார் என்றும் பார்வதி அம்மன் தாட்சாயனியாக அவதாரம் செய்தார் என்றும் பலவிதமான புராணங்களில் கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு மிகுந்த மாசி மகம் நாள் அன்று நம்முடைய வறுமை நிலை நீங்கி செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
16 செல்வங்களைப் பெற்று சிறப்பாக வாழ
மாசி மகம் நாள் அன்று அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு திருக்குளத்தில் நீராடி அந்த தெய்வத்தை வழிபாடு செய்வது என்பது நம்முடைய பாவங்களை நீக்கக்கூடியதாக திகழ்கிறது. மேலும் அன்றைய தினத்தில் பல ஆலயங்களில் தெப்போட்சம் என்பதும் நடைபெறும். அதிலும் கலந்து கொள்வது நல்ல பலனை தரும். மேலும் இன்னும் சில ஆலயங்களில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வாழை மட்டையில் வைத்து தெப்பத்தில் விடுவார்கள். இதன் மூலமும் நம்முடைய பாவங்கள் தீரும் என்று கூறப்படுகிறது. இப்படி பலவிதமான சிறப்புகள் மிகுந்த மாசி மக நாள் அன்று வீட்டில் எந்த முறையில் தீபம் ஏற்றினால் செல்வ செழிப்பு உயரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
நமக்கு இருக்கக்கூடிய நீண்ட நாள் வறுமையும் நீங்கி தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகவும், 16 செல்வங்களையும் பெற்று ராஜா யோக வாழ்க்கை வாழ்வதற்கும் மாசி மகம் நாள் என்பது நமக்கு உதவி செய்யும். இந்த மாசி மகம் என்பது மார்ச் மாதம் 12ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் காலை 3 மணி 50 நிமிடத்திற்கு மகம் நட்சத்திரம் தொடங்கி மறுநாள் காலை 5:09மணி வரை இருக்கிறது. அதனால் மார்ச் மாதம் 12ஆம் தேதி ராகுகாலம் மற்றும் எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு நாம் இறைவழிபாட்டை செய்வது நல்ல பலனை தரும்.
மேலும் மாலை நேரத்தில் ஆறு மணிக்கு மேல் வீட்டில் இந்த ஒரு தீபத்தை ஏற்றுவதன் மூலம் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு எட்டு மா இலைகள் தேவைப்படும். மா இலைகளை பறித்து வந்து சுத்தமாக கழுவி அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து ஒரு தாம்பாள தட்டில் வட்ட வடிவில் பரப்பிக் கொள்ளுங்கள். அதன் காம்புகள் வெளிப்புறத்திலும் நுனிப்பகுதி உள்புறத்திலும் இருப்பது போல் வைத்துக் கொள்ளுங்கள். இந்த எட்டு மா இலைகளும் ஒன்றாக சேர்ந்து இருக்கக்கூடிய இடத்தில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபம் குறைந்தது அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். தீபத்தை குளிர வைத்துவிட்டு இந்த இலைகளை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இந்த முறையில் மாசி மகம் நாள் அன்று மாவிலையில் தீபமேற்றி நாம் வழிபாடு செய்வதன் மூலம் அனைத்து விதமான தெய்வங்களின் அருளையும் நம்மால் பெற முடியும். வறுமை நிலை நீங்கும். செல்வ செழிப்பு உண்டாகும். ராஜ யோக வாழ்க்கை வாழ்வதற்குரிய வாய்ப்புகள் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:குடும்பத்தில் சுபிட்சம் நிலவ வாங்க வேண்டிய பொருட்கள்
மாசி மகம் நாளன்று இந்த இலையின் மீது தீபமேற்றி வழிபாடு செய்து அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று ராஜயோக வாழ்க்கை வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.